திருநெல்வேலி, செப். 20: தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார். திருநெல்வேலியில் திங்கள்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. காவல்துறையினரின் செயல்பாட்டில் அரசியல் தலையீடு இருக்கிறது. அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். தீவிரவாதம் என்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ளது. தமிழக காவல்துறை ஒழுங்காக செயல்பட்டால் இங்கு தீவிரவாதம் பரவாமல் தடுக்கலாம்.திமுக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் வாக்களித்து தீர்மானம் செய்வார்கள். திமுக ஆட்சியில் அதிகமான நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், இன்னும் அதிகமான திட்டங்களை நிறைவேற்றி இருக்கலாம். இலவச டி.வி.க்கு பதிலாக இலவச மின்சாரம் வழங்கலாம். இலவச திட்டங்களில் சிலர் கமிஷன் பெறாமல் தடுக்க அரசு கண்காணிக்க வேண்டும். மத்திய அரசின் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்வோருக்கு போக்குவரத்துச் செலவும், |100-ம் வழங்க வேண்டும். ஆனால் சில இடங்களில் |60 மட்டுமே வழங்கப்படுகிறது. இதுகுறித்து கடந்த 4 மாதங்களாக குரல் கொடுத்து வருகிறோம். அரசு இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேமுதிக தலைவர் விஜயகாந்தை நான் சந்தித்தது மரியாதை நிமித்தமானது. அவர் எனது நண்பர். அந்த சந்திப்புக்கும், அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. தமிழ்நாட்டில் தனித்து ஆட்சி அமைப்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நோக்கம். அதற்கான சாத்தியம் இல்லை என்றால் கூட்டணி ஆட்சி குறித்து எங்கள் கட்சியின் மேலிடத்தில் வலியுறுத்துவோம். அவர்கள் தீர்மானிப்பார்கள். எங்கள் கட்சி மேலிடத்தில் நாங்கள் வலியுறுத்திய விஷயங்கள் குறித்து இங்கே வெளியிட முடியாது. மூன்றாவது அணி அமைப்பது குறித்து உரிய நேரத்தில் சொல்வோம். தமிழக சட்ட மேலவையில் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதித்துவம் குறித்து முதல்வர் கருணாநிதியிடம்தான் கேட்க வேண்டும். ராதாபுரம் பஸ்நிலையத்தில் காமராஜர், கக்கன் சிலைகளை வைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துவோம். அங்கு வைக்கப்பட்டுள்ள முதல்வர் கருணாநிதியின் பெற்றோர் சிலையை அகற்ற வேண்டும் என நாங்கள் கூறவில்லை என்றார் இளங்கோவன்.
கருத்துக்கள்

அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/21/2010 8:35:00 PM
9/21/2010 8:35:00 PM


By sam
9/21/2010 7:55:00 PM
9/21/2010 7:55:00 PM


By காவலா காவாலா
9/21/2010 6:40:00 PM
9/21/2010 6:40:00 PM


By DS
9/21/2010 4:56:00 PM
9/21/2010 4:56:00 PM


By DS
9/21/2010 4:56:00 PM
9/21/2010 4:56:00 PM


By parthiban
9/21/2010 3:38:00 PM
9/21/2010 3:38:00 PM


By parthiban
9/21/2010 3:23:00 PM
9/21/2010 3:23:00 PM


By mumbaivaashi
9/21/2010 2:21:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் 9/21/2010 2:21:00 PM