வியாழன், 23 செப்டம்பர், 2010

தலையங்கம்: தேசத் துரோகிகள்!

இயற்கையின் சீற்றத்தாலோ, அந்நியர் படையெடுப்பாலோ, பாதிக்கப்பட்டிருந்தால் நாம் அதை இந்தியாவுக்கு ஏதோ சோதனைக் காலம் என்று சமாதானப்படலாம். ஆனால், தெரிந்தே தான் பிறந்த தாய் நாட்டை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் ஆட்சியாளர்கள் ஏமாற்றினால் - அவமானத்துக்கு உள்படுத்தினால் அதை வேதனைக் காலம் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, சோதனைக் காலம் என்று ஒதுக்கிவிட முடியாது.காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்க சரியாக பத்து நாள்களே உள்ள நிலையில், ஒன்றன்பின் ஒன்றாக  புற்றீசல்போல புறப்பட்டு வரும் ஊழல்களும், அரைகுறையாக முடிக்கப்பட்டுக் கிடக்கும் பணிகளும், வெளிநாட்டவர் முன்னால் இந்தியாவை ஏளனத்துக்கும் கேலிக்கும் உள்ளாக்கி இருக்கும் சுகாதாரக் குறைவான ஏற்பாடுகளும் அதிர்ச்சியில் உறையவைக்கின்றன. ஒன்றா இரண்டா, ஏறத்தாழ  70,000 கோடி விரயமாக்கப்பட்டிருக்கிறது.இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்று யாரும் நம்மை கட்டாயப்படுத்தவில்லை. நாமேதான் வலியப்போய், எங்கள் நாட்டில் காமன்வெல்த் போட்டிகளைச் சிறப்பாக நடத்திக் காட்டுகிறோம் என்று கேட்டுப் பெற்றோம். அதற்காக நாம் என்னென்ன சலுகைகளைத் தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறோம் என்று தெரியுமா? தில்லியில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கும் ஒவ்வொரு நாட்டுக் குழுவுக்கும் இலவச விமானப் போக்குவரத்துச் செலவு, தங்கும் வசதி, உள்ளூரில் பயணம் செய்ய இலவச வசதி, இவையெல்லாம் போதாதென்று பங்குபெறும் விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக ஒவ்வொரு நாட்டுக்கும் தலா ஒரு லட்சம் டாலர் வழங்கவும் ஒத்துக்கொண்டிருக்கிறோம். இப்படியெல்லாம் நமது தகுதிக்கு மீறிய வாக்குறுதிகளை அள்ளி வீசியது மட்டுமல்லாமல், காமன்வெல்த் போட்டிகள் நடத்த அனுமதி கிடைத்தது முதல், இந்திய ஒலிம்பிக் கமிட்டி இஷ்டத்துக்குப் பணத்தை வாரி இறைக்கவும் தொடங்கியுள்ளது.முதலில்  655 கோடி செலவாகும் என்று கருதப்பட்ட காமன்வெல்த் போட்டிகள்  11,490 கோடியாக செலவு கணக்கை அதிகரித்தது. இப்போது அது மேலும் அதிகரித்திருக்கிறது. இது போதாதென்று கட்டமைப்பு வசதிகள் என்கிற பெயரில் தில்லி அரசு செலவு செய்யும் தொகை சுமார்  17,000 கோடி. மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை, விளையாட்டு அமைச்சகம், மாநில அரசின் பொதுப்பணித்துறை இப்படி எல்லா துறைகளின் ஒட்டுமொத்த செலவுகளையும் - இதில் பெரும்பகுதி ஏப்பம் விடப்பட்டது என்பது வேறு கதை - சேர்த்துக் கணக்குப் பார்த்தால் ஏறத்தாழ  70,000 கோடி வரை காமன்வெல்த் போட்டிகள் என்கிற பெயரில் மக்கள் வரிப்பணம் விரயமாக்கப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது.ஏற்கெனவே இருக்கும் விளையாட்டு அரங்கங்களை மேம்படுத்துகிறோம் என்கிற பெயரில் கையாளப்பட்டிருக்கும் தொகையைக் கேட்டால் தலை சுற்றுகிறது. ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியம்  961 கோடி, இந்திரா காந்தி ஸ்டேடியம்  669 கோடி, தயான்சந்த் ஹாக்கி ஸ்டேடியம்  262 கோடி, கார்னிசிங் துப்பாக்கி சுடும் மைதானம்  149 கோடி என்று ஏறத்தாழ  44,459 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு பெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்தின் மேம்பாட்டுக்கு  85 கோடியும், ஹைதராபாத் லால்பகதூர் சாஸ்திரி ஸ்டேடியத்துக்கு  80 கோடியும்தான் செலவாகி இருக்கிறது என்பதை நாம் ஒப்பிட்டுப் பார்த்தால் ஊழலின் அளவு எத்தகையது என்பது புரியும். 961 கோடியில் புதுப்பிக்கப்பட்ட ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் உள்ள மேம்பாலம் உடைந்து விழுகிறது. தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், "அது ஒன்றும் பொது மக்களின் உபயோகத்துக்காகக் கட்டப்பட்டதல்ல' என்று சாக்குப் போக்கு கூறுகிறார். வெளிநாட்டு அணியைச் சேர்ந்தவர்கள் பார்வையிட வந்தபோது, விளையாட்டு வீரர்கள் தங்கும் அறைகளில் தெரு நாய்கள் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதையும், கழிவறைகளில் வேலையாள்கள் அசுத்தம் செய்துவிட்டு தண்ணீர் ஊற்றாமல் சென்றிருப்பதையும் பார்த்து அதிர்ந்துவிட்டிருக்கிறார்கள்.பன்னாட்டு விளையாட்டு வீரர்கள் தங்குவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் "விளையாட்டு கிராமம்' அசுத்தமாக, சுகாதாரமற்று இருக்கிறதே என்கிற வெளிநாட்டு விருந்தாளிகளின் கேள்விக்கு நம்மவர்கள் தரும் பதில் என்ன தெரியுமா? ""சுத்தம், சுகாதாரம் என்பது ஒவ்வொரு நாட்டினருக்கு ஒவ்வொரு விதத்தில் அமையும்'' என்பது. அதாவது, இந்தியர்களின் சுகாதாரஅளவு இதுதான் என்கிறார்களா? அப்படியானால், இவர்கள் பன்னாட்டு விளையாட்டு வீரர்களை அழைத்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடத்த முன்வந்திருக்கக் கூடாது.விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் கேள்விகள் கேட்டால், தனக்கு எதுவுமே தெரியாது என்று சொன்னால்கூடப் பரவாயில்லை. உங்களுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் எனக்கில்லை என்பதுபோல கேட்டும் கேட்காமலும் நகர்கிறார். மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி அதற்கும் ஒருபடி மேலே போய், "எல்லாம் இப்படித்தான் இருக்கும், நம்ம ஊர் கல்யாணங்களைப்போல, விளையாட்டுத் தொடங்கிவிட்டால் சரியாகிவிடும்' என்று விட்டேத்தியாக பதிலளிக்கிறார்.ஒரு வருடத்துக்கு முன்பே காமன்வெல்த் போட்டி அமைப்பாளர் குழுத் தலைவர் இந்தியா வந்து பார்த்துவிட்டு இந்த நிலையில், போட்டிக்கு முன்பு அரங்கங்களும், கட்டமைப்பு வசதிகளும் தயாராகுமா என்பது சந்தேகம்தான் என்று கூறியபோதே, பிரதமர் முதல் அனைவரும் சுறுசுறுப்பாகி விழித்துக் கொண்டிருக்க வேண்டாமா? ஆனால், யாருமே சட்டை செய்ததாகத் தெரியவில்லை. அசிரத்தை, எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல், எல்லாம் நடந்துவிடும் என்கிற பொறுப்பின்மை. அதையே சாக்காக்கி, இந்தியாவின் மானம் கப்பலேறிவிடும் என்று பயமுறுத்தி, செலவுக்கான பட்ஜெட்டை அதிகரித்துவிட்டார்கள் இந்திய ஒலிம்பிக் குழுவின் பாவிகள். கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. வேலையைத் துரிதப்படுத்த மீண்டும் கோடிக்கணக்கில் பணம் வாரி வழங்கப்பட்டது. இதை எல்லாம் சொல்லி என்ன பயன்? விளையாட்டுப் போட்டிகள் தொடங்க இன்னும் பத்து நாள்கள்தான் இருக்கின்றன. இன்னும் 30 சதவிகித வேலைகள் முடிவடையவில்லை. கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களில் ஆங்காங்கே பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. ஸ்டேடியங்களின் கூரையிலிருந்து பதிக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் உடைந்து விழுகிறது. சாலை வசதிகள், மின்சார வேலைகள் எல்லாமே அரைகுறை. தரக்குறைவான வேலைகள். அங்குலத்துக்கு அங்குலம் ஊழல் பல்லிளிக்கிறது.வெளிநாட்டு வீரர்கள் பலர் தாங்கள் வருவதில்லை என்று கூறிவிட்டனர். ஏதாவது தீவிரவாதத் தாக்குதல் - நடக்க வேண்டாம், நடக்கக்கூடாது - நடந்தால், கேட்கவே   வேண்டாம். இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் வரமாட்டார்கள்.  70,000 கோடியில் இந்தியாவிலுள்ள ஏறத்தாழ 500 மாவட்டங்களில், மாவட்டத்துக்கு 100 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து விளையாட்டு வீரர்களாக்கியிருந்தால், ஒலிம்பிக்கில் பல தங்கப்பதக்கங்களைப் பெற்று இந்தியாவுக்குப் பெருமை தேடியிருக்கலாமே! ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, உகாண்டா, தான்சானியா, ஜிம்பாப்வே போன்றவைக்கு இருக்கும் முன்யோசனைகூட ஹார்வர்ட் பட்டதாரிகளான நமது மன்மோகன் சிங் குழுவினருக்கு ஏன் இல்லாமல் போயிற்று? இவர்களுடைய அசிரத்தை இப்போது இந்தியாவுக்கு உலகளாவிய அளவில் "ஊழல்' பதக்கத்தை அல்லவா தேடித்தந்திருக்கிறது.எல்லோரும் இந்திய ஒலிம்பிக் கழகத் தலைவர் சுரேஷ் கல்மாதியை குற்றம் சாட்டுகிறார்கள். அவர் மட்டுமா குற்றவாளி? தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி எல்லோரும்தான் குற்றவாளிகள். அணுசக்தி ஒப்பந்தம் தமது மானப்பிரச்னை என்று கருதிய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, உலக அரங்கில் இந்தியாவின் கெளரவம் பறிபோவதைப் பற்றி அக்கறை இல்லாமல் போயிற்றே, அவர் குற்றவாளி இல்லையா? கடந்த ஒரு வருடமாகப் பத்திரிகைகள் எச்சரிக்கின்றன. நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஊழல் குற்றச்சாட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக எழுகின்றன. எதைப்பற்றியும் கவலைப்படாமல் 70,000 கோடி விரயமாவதையும், தேசத்தின் கௌரவம் கேள்விக்குறியாவதையும் வேடிக்கை பார்ப்பதற்காகவா நமக்கு ஒரு பிரதமர்? நமக்கு ஒரு மத்திய அரசு? நமக்கு ஒரு நிர்வாக இயந்திரம்?    இன்னொரு தேசப்பற்று மிக்க நாடாக இருந்தால், மேலே குறிப்பிட்ட அனைவரும் தேசத்துரோகக் குற்றத்துக்காக தூக்கிலிடப்பட்டிருப்பார்கள். என்ன செய்வது, இந்தியாவுக்கு அவமானங்களையும், தேசத் துரோகிகளையும் சுமப்பதே தலையெழுத்தாகிவிட்டது!
கருத்துக்கள்

தேசத் துரோகிகளைச் சரியாக அடையாளம் காட்டியுள்ளீர்கள். ஆனால், அப்படிப்பட்டவர்களைத்தான் மக்கள் ஆட்சியில் அமர்த்துவார்கள். எனவே, ஒரு வகையில் அவர்களுக்கு ஆதாயமே. குற்ற உணர்ச்சி உள்ளவர்க்குத்தான மான அவமானம் எல்லாம். பல்லாயிரம் கோடிப் பணத்தை வீணாக்கி நம் மானத்தைக் கப்பலேற்ற வேண்டுமா என நாம் நினைக்கிறோம். இன்னும் எத்தனை ஆயிரம் கோடி உரூபாய்ப் பணத்தைச் சுருட்டலாம் என அவர்கள் திட்டடமிட்டுச் செயல்படுகிறார்கள். வாக்காளர்களோ தேர்தல் நேரத்தில் எல்லாவற்றையும் மறந்து விடுகிறார்கள். என்னே அவலம்! 
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/23/2010 5:42:00 AM
Vert shameful, here all australian people are getting ready for sports, even small kid is waiting to see the match, now all got disappointed by India. It is great shame to Country. This is time to PM to step down. he is waste PM of India, i have been telling this past few year. I can say worst PM of India. We have to hang everyone responsible for this. M. Iyer is right. Soniya also responsible, her Son Ragul is also responsible. we should through the COngress govt first, before that i hope PM will resign his position. He is total shame of India. worst worst PM Please send all the messages to PM office, we want people elected PM not this worst guy, he has to step down ASAP
By Ram
9/23/2010 5:38:00 AM
This is very unfortunate thing for India. China managed the Olympic games, why cant we manage this event? A country has to use this type of opportunity to stabilise its name globally. Shame on all the corrupted politicians & government officials.
By siva
9/23/2010 5:30:00 AM
எல்லாம் இந்த காந்தி செய்த வேலை. முஸ்லிம்களுக்கு எல்லாத்தையும் விட்டுக்கொடுத்தார். அவன் சமாதானமாக வாழ்வான் என்று! கடைசியில் பல லட்சம் மக்களை கொன்று நாட்டைப்பிரித்தனர்................... அத்தனை மாநில காங்கிரஸ் கமிட்டி விரும்பிய படேலை தவிர்த்து நாட்டின் எந்த மாநிலமும் விரும்பாத நேருவை பிரதமராக்கி நாட்டை குட்டிச்சுவராகியதுதான் மிச்சம்.காங்கிரஸ் இந்தியாவின் சாபக்கேடு!
By Anti-terrorist
9/23/2010 4:56:00 AM
ஆனாலும் தொலைத் தொடர்புத் துறையில் இந்தியா இதுவரை காணாத அளவிற்கு ஊழல் செய்து ஒரு தமிழன் வைத்திருந்த சாதனையை மிஞ்சி தமிழனை பின்னுக்குத் தள்ளி விட்டார்களே என்பது தான் வேதனையாக உள்ளது.
By akkinik kunju dindigul
9/23/2010 4:43:00 AM
இந்தியா காமன்வெல்த் போட்டிகளில் முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற விளையாட்டு ஆர்வலர்களின் கனவை நனவாக்க சுரேஷ் கல்மாடி தலைமையிலான குழுவினர் எத்தனை பாடுபட்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து பாராட்ட மனம் இல்லாதவர்களே இந்த தலையங்கத்தை எழுதி உள்ளனர். திருவிளையாடல் புராணத்தில் விறகு வெட்டியாக வந்து சிவபெருமான் ஏகநாதன் என்ற பாடகரை இரவோடு இரவாக ஊரை விட்டு ஓடச் செய்து பாண்டிய நாட்டை போட்டியே இல்லாமல் வெற்றி பெறச் செய்தால் அதனைப் பெருமையாக பேசுகிறோம். ஆனால் மிகுந்த சிரமப்பட்டு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை ஏப்பமிட்டு , அரசியல் வாதிகளுக்கு பஞ்சமின்றி வழங்கி, அரங்குகளை சரியாக கட்டாமல் வெளி நாட்டு வீரர்கள் பின்னங்கால் பிடரியில் இடிக்க ஓடியே போகச் செய்து , போட்டியே இல்லாமல் செய்த கல்மாடி குழுவினரை வசை பாடுகிறோம். விளையாட்டு அரங்கில் இந்தியாவின் புகழை இனி எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்த்திய காமன்வெல்த் போட்டி குழுவினர்க்கு வாழ்த்துக்கள். ஆனாலும் தொலைத் தொடர்புத் துறையில் இந்தியா இதுவரை காணாத அளவிற்கு ஊழல் செய்து ஒரு தமிழன் வைத்திருந்த சாதனையை மிஞ்சி தமிழனை பின்னுக்
By akkinik kunju dindigul
9/23/2010 4:41:00 AM
Common public can not do anything about it. We do not have the power. But how can media persons like you also accept this corruption. Why don't you sue the government for cheating the Indian tax payer. You media persons are also to blame for this national shame. It is not enough by writing an editorial, sell your paper and roll on the money you earned out of it. You are also equally gulity if you do not fight it.
By Shreya
9/23/2010 3:49:00 AM
Really a good one at right time, I should blame the citizens of India not the politicians, they are the one elected these useless guys!!!. Furthermore it's not where you studied whether Harward University or local, the attitude and behavior of people changed once they become politician. The entire nation has to pray to the GOD to save India from these fellows. They are the real threats not Pakistan or China!!!!
By kr kumar
9/23/2010 3:19:00 AM
ஏண்டி வளர்மதி, நீ என்ன கருணாநிதிக்கு பிறந்தவளா? இல்லை ஸ்டாலினுடன் படுத்தவளா? கருணாநிதியும் காங்கிரசும் என்ன அநியாயம் பண்ணுனாலும் ஏதும் சொல்லக்கூடாதா? ஒடனே பாப்பான் பூளை ஊம்ப ஆரம்பிச்சுடற? அவனுக ஒருத்தனும் இந்தியாவில் இல்லை. நீ அதுக்கு அமேரிக்கா போவனும்.
By DINAMANI
9/23/2010 3:13:00 AM
very good .we need this kind of bravious media to bring the truth out.realy u r the true media. congrats.
By vijay
9/23/2010 2:47:00 AM
ஊழல் பற்றி விசாரிக்க CBI விசாரணை கேட்டு அனைவரும் மெயில் பண்ணுங்கள் நம்முடைய வரிப்பணம் இவர்களுக்கு என்ன விளையாட்டா ;கவனம் இதை மறைக்க வேறு எதாவது கிளப்பி விடுவார்கள்
By ishan
9/23/2010 2:31:00 AM
Kudumi Paarpaans will be happy is someone from brahmin is Prime Minster. They same Dinamani told before the last Parliament election Jeya deserves to be our PM.
By PA Valarmathi
9/23/2010 1:55:00 AM
கௌரவம் கேள்விக்குறியாவதையும் வேடிக்கை பார்ப்பதற்காகவா நமக்கு ஒரு பிரதமர்? நமக்கு ஒரு மத்திய அரசு? நமக்கு ஒரு நிர்வாக இயந்திரம்? தெரிந்தே தான் பிறந்த தாய் நாட்டை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் தேசத் துரோகிகளையும் சுமப்பதே நம் தலையெழுத்தாகிவிட்டது! Murugiah
By murugiah
9/23/2010 1:53:00 AM
HE..HE..HE IF A ROAD SIDE PAKIRI LIKE TO BE AN EUROPEAN THIS IS THE PROBLEM....INDIAN IS A POVERTY DIRTY COUNTRY...YOU CANT COVER THIS ,BY SHOW LIKE THIS...EVEN IN MANY NEWLY BUILT QUARTERS FOR SPORTSMEN...THERE ARE HUMAN EXCREMENTS ACCORDING TO A VISITOR..HE,,HE..HE WHAT ELSE POVERTY INDIAS WILL DO?
By KOOPU
9/23/2010 1:45:00 AM
HE..HE..HE IF A ROAD SIDE PAKIRI LIKE TO BE AN EUROPEAN THIS IS THE PROBLEM....INDIAN IS A POVERTY DIRTY COUNTRY...YOU CANT COVER THIS ,BY SHOW LIKE THIS...EVEN IN MANY NEWLY BUILT QUARTERS FOR SPORTSMEN...THERE ARE HUMAN EXCREMENTS ACCORDING TO A VISITOR..HE,,HE..HE WHAT ELSE POVERTY INDIAS WILL DO?
By KOOPU
9/23/2010 1:45:00 AM
கௌரவம் கேள்விக்குறியாவதையும் வேடிக்கை பார்ப்பதற்காகவா நமக்கு ஒரு பிரதமர்? நமக்கு ஒரு மத்திய அரசு? நமக்கு ஒரு நிர்வாக இயந்திரம்? WHY DO WE NEED SUCH GOVERNMENT?
By Sekar
9/23/2010 1:36:00 AM
ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஊழலில் 70,000ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்ததையே கண்டு கொள்ளாத அரசாங்கம்,தற்போது காமன்வெல்த் போட்டிகள் என்ற பெயரால் மீண்டும் ஒரு 70,000ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்தேறியிருக்கிறது என்பது தேசத்தின் மிகப்பெரும் அவமானம்.எண்ணற்ற விளையாட்டு வீரர்கள் கிராமப்புறங்களில் மின்னும் வைரங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கு சிறந்த பயிற்சி கொடுத்து மத்திய அரசு தேர்ந்தெடுத்து போட்டிக்கு அனுப்பினால் உலக அளவில் வெற்றி பெற்று நாட்டுக்குப் பெருமை சேர்ப்பார்கள்.விளையாட்டுப் போட்டிகளிளும் அரசியல் புகுவதால் அது குதிரை பேரம் போலாகி நாட்டுக்கு பெரும் அவமானத்தை உண்டாக்குகிறது.ஊனமுற்று இருந்தாலும்,நடந்தாலும்,ஓடினாலும்,உட்கார்ந்தாலும்,எழுந்தாலும்,விழுந்தாலும்,விளையாடினாலும்,பறந்தாலும்,பஸ்ஸில் பயணம் போனாலும்,ஊழல் விரைவுப் பயணமாகத் தொடர்கிறது வெட்கக்கேடானது.அடிப்படைக் கட்டமைப்பு வசதியே இன்னும் பூர்த்தியாகாததும்,நாய் உறங்குவதும்,சுகாதாரம் இன்மையும் காமன்வெல்த் போட்டிக்கே அவமானமாகும்.போட்டியை உலகத்தரத்தோடு நடத்தி உலகத்தர ஊழலை மறைக்க மன்மோகன் அரசு விழிக்கட்டும்.உலக நாடுகளிடம் நற்சான்று பெ
By ஆரிசன்
9/23/2010 1:17:00 AM
So long we Indians are selfish and do not have real patriotism which Mahakavi Barathi explained, we will suffer like this. We try to make money by hook or crook on every think we handle using public money. Our Indiaa have no ethicks, no shame and no respect.We are only good at selfishness and jealous. Indians are in this situation due to political and bureaucratic system that was established in 1950. Indians can be back with patriotism only under shock treatment
By krish
9/23/2010 1:12:00 AM
How much karuna family looted in this? Any hidden looting? If Karuna knows before, He would have argued and should have got Sports ministry.... 70 K Dear
By Karuna
9/23/2010 1:04:00 AM
Very Very shame....If the govt thought, total amount can spends for national rivers link projects.The amount not only for nation rivers,it may link our neighborhood country's rivers also.mmmmmmm..............we(citizen) can't do anything...only self-pity possible....
By jothi
9/23/2010 12:52:00 AM
This is DINAMANI - THANKS
By Syed Abid Panruti
9/23/2010 12:47:00 AM
I thought sokkaththangam Sonia should take responsibility. Mafia group doesn't have any shame anyway. Shamless Indian?
By Suresh M
9/22/2010 11:23:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக