திங்கள், 20 செப்டம்பர், 2010

மழை, வெள்ள பாதிப்பு: பாகிஸ்தானுக்கு ரூ 92 கோடி: ஐக்கிய நாடுகள் சபையிடம் வழங்கியது இந்தியா


நியூயார்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுச் செயலர் பான் கி-மூனிடம் ரூ.92 கோடிக்கான காசோலையை வழங்குகிறார் ஐக்க
நியூயார்க், செப்.18: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு ரூ.92 கோடி நிதியுதவியை இந்தியா வழங்கியுள்ளது.இதற்கான காசோலை இந்தியாவின் சார்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி-மூனிடம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியத் தூதர் ஹர்தீப் சிங் பூரி இந்த காசோலையை ஒப்படைத்தார்.இதுகுறித்து பான் கி-மூன் கூறியதாவது: பாகிஸ்தானில் மழை, வெள்ள பாதிப்பு நிவாரணத்துக்கு பல நாடுகள் உதவி புரிய வந்ததை பாராட்டுகிறேன். அண்டை நாடான இந்தியா, பாகிஸ்தானுக்கு உதவியதை நான் மனமார பாராட்டுகிறேன். பாகிஸ்தானில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்த நிதியுதவி மிகவும் உபயோகமானதாக இருக்கும் என்றார் அவர். இந்தியாவின் உதவியை பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ள மறுக்கவே, ஐக்கிய நாடுகள் சபை மூலம் நிதியுதவி வழங்க முடிவு செய்யப்பட்டது.நிகழ்ச்சிக்குப் பின்னர் ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது: மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்படும்போது அவைகளுக்கு நாட்டின் எல்லைகள் தெரியாது. பாகிஸ்தானுக்கு இந்தியா சார்பில் வழங்கப்பட்ட சிறிய நிதியுதவியாகும் இது. பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு ஆதரவாக இந்திய மக்கள் எப்போதும் இருப்பர்.பாகிஸ்தான் மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய இந்தியா காத்திருக்கிறது. இந்திய அரசின் உயர் அதிகாரிகள் எடுத்த முடிவின்படி இந்தத் தொகை இப்போது வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர். அப்போது ஐக்கிய நாடுகள் சபைக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல்லா ஹுசைன் ஹாரூன் உடனிருந்தார்.
கருத்துக்கள்

பாக்கிசுதான் பொருளுதவி பெற மறுக்கும் பொழுது இந்தியா பன்னாட்டு அவை மூலமாவது கொடுக்க வேண்டும் என்று துடிப்பது ஏன்? அதனால் இந்தியா- பாக்கிசுதான் நட்பு நாடுகள் ஆகி விடுமா? இலங்கையில் தமிழின ஒழிப்பிற்காகச் சிங்களத்துடன் கைகோக்கும் இந்தியா தமிழர்களுக்கும் உதவுவதுபோல் நடிப்பதை அறியாதா பாக்கிசுதான்? இஙகும் நடிப்பதை விரும்பாமல்தான் உதவி வேண்டா என மறுக்கிறது. அவ்வாறிருக்க வலியப்போய் உதவி மனித நேயர் போல் காட்டிக் கொள்ள வேண்டிய நாடகம் ஏன்? மனித நேயம் இருந்ததென்றால் ஈழத்தமிழர்கள் மேல் பரிவு காட்டி அவர்கள் தங்கள் தாயகத்தை உரிமையுள்ள விடுதலை நாடாக ஆக்கு உதவுங்கள்! உலகம் உங்களைப் போற்றும்! உலகம் உள்ளளவும் இவ்வாழ்த்து நிலைக்கும்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/20/2010 3:11:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக