புதன், 22 செப்டம்பர், 2010

கூடுதல் தொகுதி பெற்றால் மட்டும் போதாது: கார்த்தி ப. சிதம்பரம்


சென்னை, செப். 21: கூட்டணியில் கூடுதல் தொகுதிகளைப் பெறுவது மட்டும் போதாது என்று கார்த்தி ப. சிதம்பரம் தெரிவித்தார்.  தேசிய சிந்தனையாளர் பேரவையின் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியதாவது:தமிழக அரசியலில் மாற்றங்கள் பல தேவை என்றால், ஆட்சி மற்றும் அதிகார ரீதியாக மட்டுல்ல. அரசியல், கலாசார ரீதியாக மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.  தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் என்பது அதிபர் தேர்தலைப் போல நடக்கிறது. கடந்த தேர்தலைப் போலவே இப்போதும் கருணாநிதியா, ஜெயலலிதாவா என்ற அடிப்படையில்தான் தேர்தல் களம் அமைந்துள்ளது. மக்கள் வாக்களிக்கும்போது, யார் முதல்வராக வர வேண்டும் என்று மனதில் வைத்துக் கொண்டு வாக்களிக்கின்றனர். இந்த அரசியல் உண்மையைப் புரிந்து கொண்டு தமிழக காங்கிரஸ் மாற வேண்டும்.  களத்தில் இறங்குவதற்கு முன்பு நமது அணியின் மட்டையாளர் யார் என்பதை தீர்மானிப்பது போல பிரதான வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்ய வேண்டும். இதை விடுத்து, தேர்தலுக்குப் பின்னர் அறிவிக்கப்படுவர் என்றால் அதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். இதுதான் காங்கிரசின் மிகப் பெரிய பலவீனம்.  தேர்தலுக்கு முன் நமது அணியின் தலைவர் யார், எவரின் தலைமையில் ஆட்சி அமையும் என்பதை மக்களுக்குத் தெளிவாகக் கூற வேண்டிய நிலை உள்ளது. இதற்கேற்ப மாறினால்தான் 2011-ல் நடைபெறும் தேர்தலை நாம் வெற்றிகரமாக சந்திக்க முடியும்.கூட்டணியில் அதிக இடங்களைப் பெறுவதால் மட்டும் நிலைமை மாறிவிடாது. ஒவ்வொரு முறையும் கூட்டணி என்ற திருமணத்தின்போது மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஆனால், தலை தீபாவளி முடித்த பின் கசப்பு ஏற்பட்டு விடுகிறது. மக்களிடம் நமது உறுதியான நிலையைத் தெரிவிக்காததால்தான் நாம் வஞ்சிக்கப்படுகிறோம். நமது கருத்தைக் கூறினால், சிலருக்கு வருத்தம் ஏற்படும். ஆனால், அதைப்பற்றி நாம் கவலைப்படக் கூடாது.இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு காண நாம் என்ன செய்தோம் என்பதை மக்களிடம் விளக்கிக் கூற காங்கிரஸ் தயாராக இல்லாததால் நம் மீது வீண் பழி சுமத்துகின்றனர். இதை நாம் மறுக்கக் கூட இயலாதவர்களாக உள்ளோம். விஜயகாந்த் கட்சி உள்பட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக உருவாக்கப்பட்டவை. தேர்தலுக்காக காங்கிரஸ் உருவாக்கப்படவில்லை. இது மக்களின் உரிமைகளுக்காக போராடும் இயக்கம். நீண்டகாலக் குறிக்கோளுடன் வரும் 2016 தேர்தல் வரை, வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாமல் கட்சியை வலுப்படுத்த மேலிடம் முன்வர வேண்டும். இதற்கு, காங்கிரஸ் மேலிடமும், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தயாரா?இந்த நிலையை வரும் காலத்தில் ராகுல்காந்தி மாற்றுவார் என்று நம்புகிறேன் என்றார் கார்த்தி சிதம்பரம்.இதில் மக்களவை உறுப்பினர் கே.எஸ். அழகிரி பேசியதாவது: மக்கள் பிரச்னைகளுக்காக போராடினால் பாதிப்பு வரும். இதைச் சமாளித்து, தடைகளைத் தகர்த்து எறியும் தலைவர்களே தமிழக காங்கிரசுக்குத் தேவை. அவர்களால் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் காங்கிரஸ் கட்சியை ஏற்றி வைக்க முடியும் என்றார் அழகிரி.கருத்தரங்கில் முன்னாள் எம்.எல்.ஏ. பலராமன், சிந்தனையாளர் பேரவையின் தலைவர் கு. நீலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

பாவம்! காங்.கின் பெருமையைச் செல்வப்பெருந்தகைக்கு விளக்கிய கார்த்திக்கு அவர் தந்தைதான் காங்.கின் தமிழினப் படுகொலைச் செயற்பாடுகளை விளக்க வேண்டும். சிங்கள அதிபரும் அமைச்சர்களும் அதிகாரிகளும் இந்தியத்தின் துணை கொண்டு தமிழினத்தை ஒழித்த பெருமை பற்றிக் கூறிவரும் பொழுது காங்.கிற்கு வீண் பழி வந்து விட்டதாகக் கூறுகிறாரே! ஒரு வேளை சோனியா செய்த பாவச் செயலால் காங்.கிற்கு வீண் பழி வந்து விட்டது என விளக்க எண்ணுகிறாரோ! ஆட்சியே கானல் நீராக இருக்கும் பொழுது யார் தலைமை என்று கூற வேண்டுமாம். கனவு காண்பதற்காக அவ்வாறு கூறுவதாக வைத்துக் கொள்வோம். பிற அணியினரே அத் தலைமையைத் தோற்கடித்து விடமாட்டார்களா? சிதம்பரத்தையோ 
தன்னையோ முதல்வராக அறிவிக்க வேண்டும் என்ற நப்பாசையை வெளிப்படுத்துகிறார் போலும். கீழ்ப்பாக்கத்தில் இருக்க வேண்டிய இன்னொரு கோவன்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/22/2010 4:32:00 AM
Thalaivai Thangabalu is our CM canditate. He is State congress leader. Karthik what is your doubt?
By PA Valarmathi
9/22/2010 4:08:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக