வியாழன், 23 செப்டம்பர், 2010

ஊட்டியில் 57 இலங்கை அகதிகள் கைது


ஊட்டி, செப்.22- ஊட்டியில் 57 இலங்கை அகதிகளை போலீஸார் இன்று கைது செய்தனர்.
இன்று காலை கூடலூர் சாலையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, 2 வேன் மற்றும் ஒரு ஜீப்பில் இலங்கை அகதிகள் இருப்பது தெரிய வந்தது.
ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி ஏஜென்ட் ஒருவர் அவர்களை அழைத்துச் சென்றதாக தகவல்கள் கூறுகின்றன. அவர்கள் சென்னை புழல், சேலம், தொப்பம்பட்டி உள்ளிட்ட அகதி முகாம்களில் இருந்து அழைத்து செல்லப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட அகதிகள் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துக்கள்

இங்குதான் கொத்தடிமையாக அடக்கி வைத்துள்ளீர்கள். ஆசுதிரேலியா சென்றாவது பிழைத்துக் கொள்ளட்டுமே! புலம் பெயர்ந்த தமிழர்களை புலம் பெயர்ந்த பிற இனத்தவரை நடத்துவதுபோல் மனித நேயத்துடன் நடத்தினால் சம உரிமை அளித்தால் ஏன் வெளியேறுகிறார்கள்? தமிழர்க்கு முதன்மை அளிக்கும் தமிழர் தலைமையே நாட்டிற்குத் தேவை. ஈழத் தமிழர்கள் துயரம் விரைவில் நீங்குவதாக. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/23/2010 5:06:00 AM
ONLY CRIME THESE PEOPLE DID IS THEY ESCAPED THE ATROCITIES OF THE SL ARMY AND CAME TO TN. WHERE THESE PEOPLE WILL GO. IF GOD IS REAL AND THAT HE WILL PUNISH THE GOONS, THEN THESE PEOPLE WILL GET THEIR FREEDOM. BUT THE WAY THESE PEOPLE ARE TREATED LIKE PIGS THAT IS RIDICULOUS AND THIS IS SHIT WHAT THESE SO CALLED SAVIORS DO TO THIS PEOPLE
By Naan
9/22/2010 10:39:00 PM
இவர்கள் அனைவறையும் இலங்கைக்கு திருப்பி அனுபினால்தான் நமக்கு பாதுகாப்பு இல்லை என்றால் இங்கு தனி நாடு கேப்பார்கள் இந்தியஅரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்
By இந்திய நேசன்
9/22/2010 9:11:00 PM
அடப்பாவிகளா! இந்த (தமிழ்) நாட்டில் தமிழன் அகதியாக கூட நடமாட முடியாதா? கேவலம் தமிழன் என்று சொல்லிக் கொள்ள!!
By Unmai
9/22/2010 8:58:00 PM
திபெத்தியருக்கு கொடுக்கப்பட்டுள்ள சலுகைகள் மற்றும் உரிமைகள் போன்று ஈழ தமிழர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தால், பிழைப்பிற்காக அவர்கள் இப்படி யாரையும் நம்பி ஏமாற வேண்டி இருக்காது. இப்படி சிக்கி அல்லல் உற வேண்டி இருக்காது. ஏற்கனவே துன்பங்களை சுமந்து வாழும் அவர்கள், தமிழகத்திலும் தமிழக காவலர்களால் வேட்டையாட படுவது வேதனை தருகிறது. தமிழன் அடிமையாக இல்லாது இருந்தால், இந்நிலை அவர்களுக்கு நேராது.
By SlaveTamilOfIndia
9/22/2010 8:01:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக