செவ்வாய், 21 செப்டம்பர், 2010

புலிகள் மீதான தடையை நீட்டிக்கக் கூடாது: தில்லி நீதிமன்றத்தில் வைகோ


சென்னை, செப்.21- விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிக்கக் கூடாது என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்று தில்லி உயர்நீதிமன்றத்தில் வாதிட்டார்.
புலிகள் மீதான தடையை மத்திய அரசு நீட்டித்து இருப்பதையும், அதை உறுதிபடுத்தி தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டதை அங்கீகரிப்பது குறித்தும் முடிவு எடுக்க அமைக்கப்பட்டுள்ள தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென்னின் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.
இதில், வைகோ நேரில் ஆஜராகி புலிகள் மீதான தடையை நீட்டிக்க எதிர்ப்புத் தெரிவித்து வாதிட்டார்.
ஆனால், அவர் தன் தரப்பு வாதங்களை எடுத்துக்கூற மத்திய அரசு வழக்கறிஞர் எதிர்ப்புத் தெரிவித்தார். தடை செய்யப்பட்ட அமைப்பின் பிரதிநிதிகள் தான் கருத்துக் கூற முடியும் என்றும், மற்றவர்கள் இதில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.
பின்னர், இந்த வழக்கை நீதிபதி வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
கருத்துக்கள்

வைகோ அவர்களின் வாதங்கள் சரியானதாகவும் அறவழிப்பட்டதாகவும் இன நலன் அடிப்படையிலும் மனித நேயத்தைக் காப்பதாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் நீதிபதியை இயக்கும் விசை எங்கோ இருக்கும்பொழுது யார் என்ன பேசி என்ன பயன் என்று புரிய வில்லை. ஒருவேளை பிறரின் தப்புத்தாள இசைக்கேற்ப ஆடாத நீதிபதியாக இருந்தால் அறம் வெல்லும் என்று நம்பலாம். தடை செய்யப்பட்ட அமைப்பின் சார்பாளர்கள் அவ்வமைப்பைச் சேரந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. அப்படி யாரும் வந்தால் அவர்கள் எங்கே எப்படி அடைக்கப்பட்டு என்ன ஆவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே! எனவே, மத்திய அரசு வழக்குரைஞரின் கருத்தை நீதிபதி புறக்கணித்து நீதி வழங்க வேண்டும். இப்பொழுதேனும் நீதி வென்று 
இந்தியாவின் மானம் காக்கப்பட விழையும் 
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/21/2010 8:20:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக