சென்னை, செப். 21: விடுதலைப் புலிகள் மீதான தடையை எதிர்த்து வாதாட தன்னை அனுமதிக்க வேண்டும் என்ற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் கோரிக்கையை தில்லி உயர் நீதிமன்ற தீர்ப்பாய நீதிபதி செவ்வாய்க்கிழமை நிராகரித்தார், ஆனால் வழக்கறிஞர் மூலம் கருத்துகளை எடுத்துக் கூற அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை 14.5.2010 முதல் மத்திய அரசு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. இது 17.5.2010 அன்று தமிழக அரசின் அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தடையை அங்கீகரித்து உறுதிப்படுத்துவதற்காக தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பாயத்தில், செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்க வேண்டும் என்று வாதாடுவதற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தீர்ப்பாயத்தில் ஆஜரானார். இதற்கு அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். தடை செய்யப்பட்ட அமைப்பின் சார்பில் அதன் பிரதிநிதிகள் மட்டுமே கருத்து கூற முடியும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். சட்ட ரீதியாக அனுமதி கொடுக்க முடியாது என்ற நிலையில், ஒரு வழக்கறிஞர் மூலம் வைகோ தனது கருத்தைத் தெரிவிக்கலாம் என்று நீதிபதி தெரிவித்தார். இலங்கையில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டதாக இந்திய அரசு கூறி இருக்கிறது. எனவே, இந்தத் தடை நியாயமற்றது. இந்தத் தடைக்குச் சொல்லப்படும் காரணங்கள் எதிலும் உண்மை இல்லை என்று வைகோ தெரிவித்தார். வழக்கை வெள்ளிக்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
வைகோ அவர்களின் வாதங்கள் சரியானதாகவும் அறவழிப்பட்டதாகவும் இன நலன் அடிப்படையிலும் மனித நேயத்தைக் காப்பதாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் நீதிபதியை இயக்கும் விசை எங்கோ இருக்கும்பொழுது யார் என்ன பேசி என்ன பயன் என்று புரிய வில்லை. ஒருவேளை பிறரின் தப்புத்தாள இசைக்கேற்ப ஆடாத நீதிபதியாக இருந்தால் அறம் வெல்லும் என்று நம்பலாம். தடை செய்யப்பட்ட அமைப்பின் சார்பாளர்கள் அவ்வமைப்பைச் சேரந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. அப்படி யாரும் வந்தால் அவர்கள் எங்கே எப்படி அடைக்கப்பட்டு என்ன ஆவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே! எனவே, மத்திய அரசு வழக்குரைஞரின் கருத்தை நீதிபதி புறக்கணித்து நீதி வழங்க வேண்டும். இப்பொழுதேனும் நீதி வென்று இந்தியாவின் மானம் காக்கப்பட விழையும் அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன் By Ilakkuvanar Thiruvalluvan 9/21/2010 8:20:00 PMஎதிர்பார்த்தவாறு எழுதிய வைத்த தீர்ப்பின் அடிப்படையில் தடை வழங்கப்பட்டு விட்டது. கொடுமையடா! கொடுமை!
By Ilakkuvanar Thiruvalluvan
9/22/2010 4:14:00 AM
முட்டாள்தனமான தீர்ப்பு. வைக்கோ அவர்களே ஒரு வழக்குரைஞர்தான். அப்படியென்றால் வழக்குரைஞர் என்ற முறையில் அவர் வாதிடலாம் அல்லவா? அல்லது முன்னரே எழுதி வைக்கப்பட்ட தீர்ப்பைத்தான் வாசிக்கப் போகிறோம். தேவையின்றி நேரத்தை வீணாக்க வேண்டா என வெளிப்படையாகச் சொல்லட்டும். தமிழினப் பகையான காங்கிரசும் ஆரிய அதிகாரிகளும் விரட்டப்பட்டால்தான் தமிழினம் உரிமை பெறும். இந்தியாவும் வலிமை வாய்ந்த அரசாகத் திகழும். தமிழின அழிப்பு இந்தியச் சிதைப்பு; தமிழின உரிமை இந்திய வலிமை என்பதை மத்திய அரசு உணர வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
9/22/2010 4:14:00 AM
9/22/2010 4:11:00 AM