தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து பா.ஜ.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற (வல
சென்னை, செப். 23: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட்டால் காங்கிரஸ் கட்சியின் சாயம் வெளுக்கும் என பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து பா.ஜ.க நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழக பொறுப்பாளர் பங்காரு லட்சுமணன் தலைமை வகித்தார்.இதுகுறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் கட்சி ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து மாநில பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது. வரவிருக்கும் தேர்தலில் அதிக இடங்களுடன் சட்டப்பேரவைக்குள் நுழைவோம். கூட்டணி குறித்து இதுவரை எங்களிடம் எந்த கட்சியும் பேசவில்லை. நாங்களும் யாருடனும் பேசவில்லை. இப்போதைக்கு கட்சியை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, கோவையில் கட்சி பலமாக உள்ளது. சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படுவதைப்போல இந்து மாணவர்களுக்கும் அதிகமான கல்வி உதவித்தொகை வழங்கப்பட வேண்டும். இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாதயாத்திரை நடத்த உள்ளோம். விவசாயிகள் பிரச்னை, கோயில் நில மீட்பு விவகாரங்கள் குறித்தும் கவனம் செலுத்துவோம். தமிழகத்தில் எல்லா வகையிலும் நிர்வாகம் செயல் இழந்துவிட்டது. தனியார் பள்ளி கட்டணம் தொடர்பான நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியின் அறிக்கையைக்கூட சரியாக செயல்படுத்த முடியவில்லை.காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தனித்து போட்டியிட்டால் அதன் சாயம் வெளுத்துவிடும். காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடைபெற்றுள்ள ஊழல் மூலம் இந்தியாவிற்கு சர்வதேச அரங்கில் பெரும் தலைக்குனிவு ஏற்படுள்ளது என்றார் பொன். ராதாகிருஷ்ணன். கட்சியின் அகில இந்திய அமைப்பு இணைச்செயலர் வி.சதீஸ், கட்சியின் தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ், மாநில நிர்வாகிகள் இல.கணேசன், எச்.ராஜா மற்றும் நிர்வாகிகள் பலர் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
கருத்துக்கள்
காங்.கிற்கும் இந்த உண்மை தெரியும். ஆனால், அதுதான் பெரும்பான்மை வலிமையுடன் இருப்பது போல் கதை அளந்து ஏமாற்றிக் கொண்டுள்ளது. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அதன் வலிமையால் பெரிய கட்சிகள் அதனுடன் கூட்டணி வைக்கப் போட்டிப் போட்டு அதைப்பெரிய கட்சியாக ஆக்குகிறார்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/24/2010 2:47:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 9/24/2010 2:47:00 AM
அனைத்து இந்திய அளவில் ௧௯(19) விழுக்காடே காங்கிரசு இயக்கம் பெற்ற வாக்குகள் ! இது இந்திய தேர்தல் ஆணையத்தின் புள்ளி விவரம ! மீதி ௮௧ (81)விழுக்காட்டின் மீது ஆதிக்கம் செலுத்தும் பேரவலம் இங்கு மட்டுமே முடியும் !
பதிலளிநீக்குஉண்மை. சரியாகச் சொன்னீர்கள் கோவிந்த கண்ணன் அவர்களே! இவர்கள்தான் நாடே தம் பக்கம் இருப்பதாகக் கதை யளந்து உலகையே ஏமாற்றிக் கொண்டுள்ளார்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
பதிலளிநீக்கு