வெள்ளி, 24 செப்டம்பர், 2010

சர்வேசனே சத்தியம் தொலைந்து போகுமா???

சர்வேசனே சத்தியம் தொலைந்து போகுமா???

முள்ளிவாய்க்காலில் நான் தொலைத்துவிட்ட சூரியப்புதல்வனே
உனைக்  காணாது தேடினேன் தேடினேன் ஓடினேன் அலைந்து திரிந்து
அழுது புலம்பினேன் தனயனே தாய் முகம் நான் காணவில்லை
தந்தையெனக்குத் தேவையில்லை
எனக்குமட்டும் தரிசனம் தருவாயா  அருமை அண்ணனே
வைகறையிலெழுந்து வல்லைவெளியிலும் தேடினேன்
எல்லாலமைந்தனே எட்டுத்திக்கிலும் தேடினேன் ஓடினேன்
தேடினேன் முல்லைக்கடலிடம் கேட்டேன் கததியழுகிறது
தம்பியின் படகைக்காணோமெண்று கண்ணீர்வடிக்கிறாள்
பாக்குநீரிணையைப்பாய்ந்து செண்று பார்த்தேன்
அண்ணணின் காலடியைக்காணவில்லை கலங்கினேன்
புலம்பித்தவித்து புயலாய் மாறி ப் பறந்து சென்று சூரியனிடம்
கேட்டேன் மைந்தனைக்காணோமென்று அவனும் மனுத்தந்தான்
வெண்ணிலவுக்குப்பறந்துசென்று பார்த்துவந்தேன்
பார்த்திபன் வந்ததாய் தடயமேதுமில்லை
பச்சைவயலெங்கும் இச்சையுடன்தேடித்திரிந்து கூப்பிட்டுப் பார்த்தேன்
பயனேதும் இல்லையே சர்வேசனிடம் சத்தியத்தைக்கண்டாயா என
-ஆவேசமாய்க் கேட்டேன் அவ்வளவுசக்தி எனக்கில்லையென்றவன் கூறிவிட்டான்
ஈண்றெடுத்த ஈழத்தாயிடம் இறுக்கமாய்க்கேட்டேன்
இல்லையடா இல்லையென இரக்கமாய் சொல்லிவிட்டாள்
உப்புநீரில் நனைந்து உலகெங்கும் தேடினேன் உண்மையாகக்காணவில்லை
அண்ணா என அண்ணார்ந்து வானத்தைப்பார்த்துக் கதறினேன்
கார்மேகம் கூடிக் கும்மாளமடித்துக் குதூகலித்துக்கொண்டிருந்தது
வாளெடுத்துப்பறந்து சென்று பச்சைத்தமிழனை பார்த்தாயா என
-ஆத்திரமாகக் கேட்டேன் அய்யகோ அபயமென்று காலடியில் வீழ்கிறது
கார்மேகத்தைக்கலைத்து விட்டு கரிகாலனைத்தேடினேன்
உலகத்தமிழினமே உறங்கிக்கிடவாமல் உக்கிரமாய் விரைந்து வா
ஈழவரலாற்றில் சூழ்ந்துவிட்ட இருளைவிரட்டியடித்து
விடியலை வரவழைத்தால் நிச்சயமாய்  நாளைஉதயத்தில்
கதிரவனைக் காணலாம் ………………………….
(Visited 11 times, 2 visits today)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக