தஞ்சை கரந்தை தமிழ்ச் சங்கத்தில் பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா கலைநிகழ்ச்சிகளை அமைச்சர்கள் முரசு கொட்டி தொடங்கிவைத்தனர். தொடர்ந்து முதலாவதாக, எம்.ஜி.ஆர். நடித்த ஆனந்தஜோதி படத்திலிருந்து ஒரு தாய் மக்கள் நாம் என்போம் என்ற பாடல் இசைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்தும், எம்.ஜி.ஆர். நடித்த இதயக்கனி படத்திலிருந்து "நீங்க நல்லா இருக்கோணும்' என்ற பாடல் இசைக்கப்பட, அதற்கு கலைமாமணி நாடிராவ் குழுவினரின் பொய்க் கால் குதிரையாட்டம் நடைபெற்றது. பின்னர், நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ராஜராஜ சோழனின பெருமையை பறைசாற்றும் பாடல்களுக்கு நடனம் நடைபெற்றது.பெரிய கோயில் வளாகத்தில்...பெரிய கோயில் நிர்மாணிக்கப்பட்ட ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. இதுகுறித்து எந்த விமர்சனமும் இல்லை. ஆனால், பெரிய கோயிலை பிரதானப்படுத்தி நடைபெறும் விழாவின் தொடக்கம் கரந்தை தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்றது ஏன்? அதேநேரத்தில், பெரிய கோயில் வளாகத்திலும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்ற போதிலும், அங்கு தொடக்க விழாவை நடத்தாததும், அதில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்காததும் ஏன் என்று தெரியவில்லை.அகழியில் தண்ணீர்...பெரிய கோயிலைச் சுற்றியுள்ள அகழியை நகராட்சி வசமிருந்து மீட்டு படகு சவாரி அமைத்து அழகுபடுத்த தொல்லியல் துறை நீண்ட காலமாகப் போராடி வந்தது. இந்நிலையில், புதன்கிழமை தொடங்கிய பெரிய கோயில் விழாவையொட்டி, கல்லணைக் கால்வாய் புது ஆற்றில் இருந்து அகழியில் நான்கு ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் நிரப்பி வருகின்றனர். அகழியில் குப்பைகளும், முள்செடிகளும் மண்டிக் கிடந்தன. அதைச் சுத்தப்படுத்தாமல் தண்ணீர் நிரப்புவதும் ஏனென்று தெரியவில்லை. இதனால் அகழி நீர் கலங்கலாக குப்பைகளுடன் உள்ளது.
கருத்துக்கள்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/23/2010 6:24:00 PM
9/23/2010 6:24:00 PM


By sadak
9/23/2010 2:49:00 PM
9/23/2010 2:49:00 PM


By Usman
9/23/2010 2:23:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் 9/23/2010 2:23:00 PM