புதன், 22 செப்டம்பர், 2010

கட்சியை பலப்படுத்தினால்தான் அதிக இடங்கள் கேட்க முடியும்

சென்னை, செப். 21: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தினால்தான் கூட்டணி கட்சியிடம் அதிகமான தொகுதிகளைக் கேட்க முடியும் என்று காங்கிரஸ் அகில இந்தியப் பொதுச் செயலாளரும், அக்கட்சியின் தமிழகப் பொறுப்பாளருமான குலாம்நபி ஆசாத் கூறினார்.காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. குலாம்நபி ஆசாத் வருகிறார் என்றதும் அனைத்து கோஷ்டியினரும் ஆஜராகியிருந்தனர். மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், கார்த்தி சிதம்பரம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், எம். கிருஷ்ணசாமி, பிரபு, ஜெயந்தி நடராஜன், டி. யசோதா, பீட்டர் அல்போன்ஸ், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், திருநாவுக்கரசர் என்று அனைத்து தரப்பினரும் வந்திருந்தனர். எம்.பி., எம்.எல்.ஏ.க்களில் ஒரு சிலரைத் தவிர அனைவரும் பங்கேற்றனர்.சோனியா மற்றும் ராகுல் காந்தியின் வருகை, இளைஞர் காங்கிரஸôர் மேற்கொள்ளும் பாதயாத்திரை ஆகியவை தவிர வேறு எதுவும் குறிப்பாக சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து பேசக் கூடாது என்று தங்கபாலு கேட்டுக் கொண்டார்.முதலில் பேசிய வாசன், திருச்சியில் ஏற்கெனவே திமுக, அதிமுக இரண்டு பெரிய கட்சிகளும் கூட்டம் நடத்தி தங்கள் பலத்தை நிரூபித்துள்ளன. அவர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றார்.ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசும்போது, இதுபோன்ற மாநில நிர்வாகிகள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை தங்கபாலு அடிக்கடி கூட்ட வேண்டும். திருச்சியில் திமுக, அதிமுகவுக்கு சவால் விடும் வகையில் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். எனக்கு இரண்டு மாவட்டங்களின் பொறுப்பு தந்தால் அங்கிருந்து அதிகமான நபர்களை அழைத்து வருவேன் என்றார்.திமுக, அதிமுக போன்ற திராவிடக் கட்சிகளுக்கு இணையாக காங்கிரஸýம் அரசியல் நடத்த வேண்டும் என்று பொதுமேடைகளில் பேசிவரும் கார்த்தி சிதம்பரம், அதனை இங்கும் வலியுறுத்தியுள்ளார். திருச்சி பொதுக்கூட்டத்துக்கு திராவிடக் கட்சியினரே ஆச்சரியப்படும் வகையில் விளம்பரம் செய்ய வேண்டும் என்றார்.இறுதியாக பேசிய குலாம்நபி ஆசாத், திறமையான தலைவர்கள் பலர் தமிழக காங்கிரஸில் உள்ளனர். தமிழகத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் தேர்தலால் ராகுல் காந்தி மகிழ்ச்சி அடைந்துள்ளார். அனைவரும் சேர்ந்து தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த வேண்டும். அப்போதுதான் கூட்டணி கட்சியிடம் அதிக தொகுதிகளைக் கேட்டுப் பெற முடியும். சோனியா மற்றும் ராகுல் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள், இளைஞர் காங்கிரஸôர் நடத்தும் பாத யாத்திரை ஆகியவை வெற்றி பெற கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் ஒற்றுமையுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதாக கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.பன்றிக் காய்ச்சல்: பன்றிக்காய்ச்சலைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்துக்கு 10 லட்சம் பன்றிக்காய்ச்சல் தடுப்பு மாத்திரைகள், 9 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்களாக 10,000 தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. சுகாதாரப் பணியாளர்களுக்காக 50,000 தடுப்புமருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 30 ஆயிரம் மருந்துகள் வழங்க திங்கள்கிழமை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
கருத்துக்கள்

எனவே, இப்பொழுது கட்சி வலிமையாக இல்லை. எனவே அதிக இடங்களைக் கேட்க முடியாது என்பதைச் சோனியாவின் தூதரே தெரிவித்து விட்டார். எனவே கோவனும் கார்த்தியும் வாய் மூடி வலிமை காத்தல் நன்று. தங்களுக்கு ஓர் இடம் வேண்டும் என்பதற்காக அல்லது தலைமைப் பதவி வேண்டும் என்பதற்காகப் பூச்சாண்டி காட்டுவதை நிறுத்தி விட்டுத் தங்கள் கட்சியின் தலைமைக்கும் கூட்டணிக தலைமைக்கும் கட்டுப்பட்டுத் திருந்தி வாழ ‌வேண்டும். 
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/22/2010 4:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக