பாராட்டிற்குரிய கருத்து. திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு நம் அரசியல் அமைப்புச் சட்டமும் பிற சட்டங்களும் இயற்றப் பெற்றால் நாடு நலம் பெறும்; வளம் பெறும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சட்டம் பற்றி தெரிந்துகொள்ள திருக்குறளைப் படியுங்கள்: உயர்நீதிமன்ற நீதிபதி வலியுறுத்தல்
First Published : 24 Nov 2010 03:16:51 AM IST
சென்னை, நவ.23: சட்டம் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி. மதிவாணன் கூறினார்.தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் இலக்கிய பாசறை விழாவும், மறைந்த வழக்கறிஞர்கள் சிவகுமார், மதிவாணன், காமேஸ்வரன் ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா | 1 லட்சம் வழங்கும் நிகழ்ச்சியும் உயர் நீதிமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இதில் உயர் நீதிமன்ற நீதிபதி டி. மதிவாணன் பேசியது:சட்டத்தின் வரையறை, குற்றத்துக்கான தண்டனை, அரசின் கடமை, எல்லா உயிர்களும் சமம் என சட்டங்களில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான விஷயங்கள் திருக்குறளோடு ஒத்துப் போகின்றன. திருக்குறளில் உள்ள அறம், பொருள், இன்பம் முப்பால்களிலும் சட்டம் பற்றிய கருத்துகள் உள்ளன. அறம் என்றால் நீதி என்ற ஒரு பொருள் உண்டு. அதை வியாபாரமாக்கக் கூடாது. பெண்களை ஏமாற்றக் கூடாது என்றும் திருக்குறளில் சொல்லப்பட்டுள்ளது.பெண்களை காதலிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், அவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், பெண்கள் தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருகின்றன. சட்டம் பற்றித் தெரிந்துகொள்ள திருக்குறளைப் படிக்க வேண்டும். அதன்படி, வாழ்ந்தால் மனித வாழ்வு சிறப்பாக இருக்கும் என்றார் அவர்.திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ரா.தி. சபாபதிமோகன், தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.பிரபாகரன், மூத்த வழக்கறிஞர் துரைசாமி, வழக்கறிஞர் வி.பி.ஆர்.இளம்வழுதி, எஸ். சுகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக