சனி, 27 நவம்பர், 2010

இலங்கைப் போர்க்குற்றம் குறித்து பிரிட்டன் பல்கலை.,யில் ஆய்வரங்கம்

பாராட்டப்பட வேண்டிய நல்ல முயற்சி.  பல நாடுகளிலும் இது போல் கருத்தரங்கங்கள் நடத்திப் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை உணர்த்தி அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். ஈழ மலர்ச்சிக்கும் இது வழி வகுக்க வேண்டும்.  தமிழ் ஈழம் வெல்க! வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இலங்கை போர்க்குற்றம் குறித்து
பிரிட்டன் பல்கலை.,யில் ஆய்வரங்கம்
First Published : 26 Nov 2010 03:40:34 PM IST


கொழும்பு, நவ.26- பிரிட்டனில் உள்ள ரோகம்டன் பல்கலைக்கழகத்தில் இலங்கையின் போர்க்குற்றம் குறித்த ஆய்வரங்கம் நடைபெறவுள்ளதாக நாடுகடந்த தமிழ் ஈழ அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து அதன் தகவல்துறை அமைச்சர் சாம் சங்கரசிவம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:மாவீரர் குடும்பங்கள், முன்னாள் போராளிகள் போன்றோருக்கு அவசியமான உதவிகளை செய்வதற்கு தனி நிதியமைப்பு உருவாக்க அமைச்சரவையால் முடிவெடுக்கப்பட்டது. இந்த நிதி பரிமாற்றங்களை மாவீரர் குடும்பங்கள், முன்னாள் போராளிகள் நலன் பேணல் அமைச்சர் மேற்பார்வை செய்வார். நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் ஆதரவில் பிரிட்டனில் உள்ள ரோகம்டன் பல்கலைக்கழகத்தில், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஆய்வரங்கம் நிகழ்த்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இனஒழிப்பு, போர்க்குற்ற விசாரணைகளுக்கும் தடுப்புக்குமான அமைச்சர் மேற்கொள்வார். இதில், குயின்மேரி பல்கலைக்கழகம், மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மாணவர் சங்கங்களும் இணைந்து செயற்படவுள்ளார்கள். மேலும், நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் ஒவ்வொரு அமைச்சகங்களும் வெளிநாடுகளில் தமது அலுவலர்களை நியமிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடும்.       இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்

மாவீரர் நாள் தன் உயிரை எம் இனத்திற்ககுத் தருவதை ஓர் வரமாக எண்ணி செயற்பட்ட அந்த தியாக தீபங்களை நாம் நினைவுகூறும் நாள். கார்த்திகை மாதம் 27ம் திகதி எமது வரலாற்றுப் பயணத்தில் பல திருப்பு முனைகளிற்குக் காரணமான எம் அன்புத் தெய்வங்களை நாம் தரிசிக்கும் தினம்.
By வாணி குமார்
11/26/2010 11:19:00 PM
மாவீரர் நாள் தன் உயிரை எம் இனத்திற்ககுத் தருவதை ஓர் வரமாக எண்ணி செயற்பட்ட அந்த தியாக தீபங்களை நாம் நினைவுகூறும் நாள். கார்த்திகை மாதம் 27ம் திகதி எமது வரலாற்றுப் பயணத்தில் பல திருப்பு முனைகளிற்குக் காரணமான எம் அன்புத் தெய்வங்களை நாம் தரிசிக்கும் தினம்.அப்பாவித் தமிழர்களை அந்தக் கொடியவர்கள் கொன்று குவித்த பின்பும் மாதர்கள் மார்பினில் அந்தக் காடையர்கள் மைகொண்டெழுதிய கொடுமையைப் பார்த்தபின்பும் கோவில் குருக்களை அந்தக் கோழையர்கள் கொளுத்திய காட்சியைக் கண்டபின்பும் எப்படி எம்மால் பொறுமையுடன் வாழமுடியும். அப்படி வாழ்வது ஒரு வாழ்வா? எனக்கூறி ஆயுதம் ஏந்தியவர்கள்தானே இந்தக் கருணை நதியில் குளித்து வந்த எம் காவலர்கள். கார்த்திகைப் பூவிற்கு உரித்தானவர்கள். இன்று நாம் பூஜிக்கும் எம் இதய தெய்வங்கள்.
By வாணி KUMAR
11/26/2010 11:17:00 PM
தமிழ் ஈழ அரசு எங்குள்ளது என்று தெரிந்தால் பின் பேசலாம். தமிழ்நாட்டில் அதன் அமைச்சர்கள் யாவர்? மந்திரி சபை அமைத்துவிட்டார்களா? ஒருவர் சிறையில் உள்ளாரா? இவற்றை தெரியப்படுத்தினால் நலமாக இருக்கும். நல்ல காமெடி பண்ணுகிறார்கள்!!
By ராபர்ட் லூயிஸ்
11/26/2010 9:30:00 PM
இந்த நாடுகடந்த தமிழீழ அரசு என் நாட்டில் உள்ளது ? இவர்கள் அகதி தமிழரிடம் பணம் சேர்க்க போடும், நாடகம் ! ஏற்கனவே இவர்களின் கொள்ளையை அனைவரும் அறிவர் ! இந்த கூட்டத்தால்; ஈழத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு அழிவுதானே தவிர, நன்மை கிடையாது ! இவர்கள் ஏமாற்றி வயிறு வளர்க்கும் கூட்டமாகும் ! இவர்களை நம்பினால், அழிவுதான் ! மறத்தமிழன் யாழ்ப்பாணம் .
By maaraththamizhan
11/26/2010 5:23:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக