௧. இடைத்தரகர்களால் இராசாவிற்குப் பதவி கிடைத்தது என்றால் கனிமொழிக்கு ஏன் பதவி கிடைக்கவில்லை? ௨) இவ்வுரையாடல் செய்திக்கு ஏன் ஒருவருமே மறுப்பு தெரிவிக்கவில்லை? ௩) வேறுவகையில் பதவி கிடைததிருந்தும் கலைஞரால்தான் பதவி கிடைத்தது என்பதுபோல் நடித்துள்ளதை அடக்கம் என்று எடுத்துக் கொள்ளலாமா? ௪) பணமுதலைகளால்தான் மக்கள் சார்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், அமைச்சர் முதலான பொறுப்புகளுக்கு வருகிறார்கள் என்பது ஆண்டாண்டு கால உண்மையாக இருக்கையில் இச்செய்தி என்ன விளைவை ஏற்படுத்தப் போகிறது.? ௫) அலைக்கற்றை ஊழல் தொடர்பில் பதிவுகள் இருப்பின் அவற்றை வெளியிடுவதுதானே பொருத்தமாக இருக்கும். உரியவர்கள் குடும்பங்களில் குடுமிப்பிடிச் சண்டை போட்டுக்கொள்ள வழி வகுத்துள்ள இச் செய்தியால் பொதுமக்களுக்கு நன்மை ஒன்றும் இல்லை.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 26 Nov 2010 11:04:18 AM IST
Last Updated : 26 Nov 2010 11:21:21 AM IST

சென்னை, நவ.26: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய புலனாய்வுத் துறை உள்ளிட்ட அமைப்புகளிடம் உள்ள உரையாடல் பதிவுகளை வைத்து சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:திமுக-வைச் சேர்ந்த ராசாவால் நிகழ்த்தப்பட்ட 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் குறித்த செய்திகளை கவனித்துக் கொண்டிருந்த அதே வேளையில், ஸ்பெக்ட்ரம் ஊழலின் ஊற்றுக்கண்ணாக விளங்கியவர்களுக்கும், அதிகார மையத்திடம் அதிக செல்வாக்கு பெற்றவருமான நீரா ராடியாவுக்கும் இடையே நடைபெற்ற முக்கியமான உரையாடல் காட்சிகள் தமிழக மக்களால் அவ்வளவாக கவனிக்கப்படவில்லை. நீரா ராடியாவின் தொலைபேசி மற்றும் கைபேசிகளின் உரையாடல்களை குறிப்பிட்ட சில நாட்களுக்கு வருமான வரித் துறை பதிவு செய்தது. 500 மணி நேரங்களுக்கும் மேலான தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டன. இதில் 15 நிமிடங்களுக்கும் குறைவான உரையாடலைத் தான் ஊடகங்கள் தற்போது வெளியிட்டுள்ளன. இந்த உரையாடல் கருணாநிதி குடும்பத்தினரின் சுயரூபத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து அம்பலப்படுத்தியுள்ளது.தனக்கு சுற்றுச்சூழல் இலாகா வேண்டுமென்றும், இல்லையெனில் சுகாதாரம் அல்லது விமானப் போக்குவரத்து அல்லது சுற்றுலா மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு இலாகா ஒதுக்கப்பட வேண்டுமென்றும் கருணாநிதியின் மகள் கனிமொழி கோரிக்கை விடுக்கிறார். ஆ. ராசாவுக்கு தொலைத்தொடர்பு இலாகா அளிக்கப்பட வேண்டும் என்று ஆவேசமாக வாதாடுகிறார் கனிமொழி. அதே சமயத்தில், தனது உறவினரும், கருணாநிதியின் பேரனுமான தயாநிதி மாறனை இழிவுபடுத்தியும் பேசுகிறார். திமுக-வின் பல்வேறு கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தர்ம சங்கடத்தையும், நிர்பந்தத்தையும் உண்டாக்கும் விதமாக, பதவியேற்பு நிகழ்ச்சியை புறக்கணிக்க தி.மு.க. திட்டமிட்டு இருப்பதாக டி.ஆர். பாலு ஊடகங்களுக்கு பேட்டி அளித்தது காங்கிரஸ் தலைமையை எரிச்சல் அடையச் செய்திருக்கிறது என்ற தகவல் மற்றொரு மூத்த பத்திரிகையாளர் பர்கா தத்தின் உரையாடலில் பதிவாகி இருக்கிறது. தயாநிதி மாறனுக்கு அமைச்சர் பதவி அளிக்க கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்து இருந்தபோதிலும், மாறனுக்கு ஆதரவாக மு.க. ஸ்டாலினும், முரசொலி மாறனின் சகோதரர் செல்வத்தின் மனைவி மு.க. செல்வியும் தீவிரமாக ஈடுபட்டது நீரா ராடியா - வீர் சங்வி இடையேயான உரையாடல் மூலம் வெளி வந்துள்ளது. 15 நிமிடங்கள் நடந்த உரையாடல் பதிவுகளே இவ்வளவு சேற்றை வாரி இரைத்திருக்கிறது என்றால், 500 மணி நேர உரையாடல் பதிவுகளில் இன்னும் என்னென்ன குப்பைகள் வெளிப்படும் என்பதை ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். இந்த உரையாடல் பதிவுகள் எல்லாம் ஊடகங்கள் வசம் இருக்கின்றன. இவை அனைத்தும் எல்லா தேசிய தொலைக்காட்சிகளிலும், ஜெயா தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டன. இந்த உரையாடலின் பிரதி அனைத்து தேசிய பத்திரிகைகளிலும், தினமணி நாளிதழிலும் வெளியிடப்பட்டன. இவை வெளியிடப்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும், இதில் தொடர்புடைய நபர் எவரும் இதற்கு ஆட்சேபணையோ அல்லது மறுப்போ தெரிவிக்கவில்லை. எனவே, இதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். இந்த உரையாடல் பதிவுகள் வருமான வரித் துறையின் வசம் உள்ளன. மத்திய புலனாய்வுத் துறை மற்றும் அமலாக்க இயக்கத்திடமும் இந்த உரையாடல் பதிவுகள் உள்ளன. இந்த அமைப்புகள் எல்லாம் உண்மையிலேயே சுதந்திரமாக செயல்படுகிறது என்றால் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் உண்மையான குணம் மற்றும் நடத்தை குறித்து மக்களுக்கு தெளிவாக தெரிய வேண்டும். இவர்களுடைய அரசியல் கணக்கினை முடிப்பதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தங்களுக்கு வாக்களித்த மக்களை பயன்படுத்தி, நாட்டைச் சுரண்டி, தங்களுடைய கருவூலத்தை நிரப்பிக் கொண்டவர்களுக்கு தக்கப் பாடம் கற்பிக்கும் வகையில் தமிழக மக்கள் வரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டு கொள்வதாக ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்


By CHANDRADASAN
11/26/2010 11:08:00 PM
11/26/2010 11:08:00 PM


By நாடோடி
11/26/2010 10:48:00 PM
11/26/2010 10:48:00 PM


By shyamsundar
11/26/2010 9:48:00 PM
11/26/2010 9:48:00 PM


By Kannan M
11/26/2010 8:53:00 PM
11/26/2010 8:53:00 PM


By edison
11/26/2010 8:33:00 PM
11/26/2010 8:33:00 PM


By nithyanandham
11/26/2010 8:11:00 PM
11/26/2010 8:11:00 PM


By ஜானுசிசி
11/26/2010 7:45:00 PM
11/26/2010 7:45:00 PM


By anand
11/26/2010 5:21:00 PM
11/26/2010 5:21:00 PM


By visu
11/26/2010 4:35:00 PM
11/26/2010 4:35:00 PM


By Tamilkudimagan
11/26/2010 4:25:00 PM
11/26/2010 4:25:00 PM


By Karthik
11/26/2010 4:21:00 PM
11/26/2010 4:21:00 PM


By Sri
11/26/2010 3:57:00 PM
11/26/2010 3:57:00 PM


By shoe court
11/26/2010 3:23:00 PM
11/26/2010 3:23:00 PM


By R.Parthiban
11/26/2010 3:17:00 PM
11/26/2010 3:17:00 PM


By Sakthi
11/26/2010 2:53:00 PM
11/26/2010 2:53:00 PM


By parithi
11/26/2010 1:26:00 PM
11/26/2010 1:26:00 PM


By Tamilian
11/26/2010 1:17:00 PM
11/26/2010 1:17:00 PM


By Kannan M
11/26/2010 12:48:00 PM
11/26/2010 12:48:00 PM


By Mahadevan
11/26/2010 12:39:00 PM
11/26/2010 12:39:00 PM


By CHITRAKULLAN, SEYYAR
11/26/2010 12:26:00 PM
11/26/2010 12:26:00 PM


By priya
11/26/2010 12:19:00 PM
11/26/2010 12:19:00 PM


By G.R.Srinivasan
11/26/2010 11:53:00 AM
11/26/2010 11:53:00 AM


By Thirunilayan
11/26/2010 11:40:00 AM
11/26/2010 11:40:00 AM


By Chandra
11/26/2010 11:22:00 AM
11/26/2010 11:22:00 AM


By Vadukanathan
11/26/2010 11:13:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
11/26/2010 11:13:00 AM