பேரூராட்சித் துணைத் தலைவராக உள்ளவரால்கூட வட்டாட்சியர் அலுவலகத்தில் உரியா காலத்தில் சான்றிதழ் பெறவில்லையெனில் உரிய காரணத்தை அறிய வேண்டும். வேண்டு மென்றே காலத்தாழ்ச்சி நேர்ந்துள்ளது எனில் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடர்புடைய பணியாளர்கள், துணை வட்டாட்சியர், வடடாட்சியர் அவர்களின் மேல் அலுவலர்களான கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆட்சியர், மறைந்த மா.தங்கசாமியின் மடல மீது உரிய நடவடிக்கை எடுக்காத காவல் துறையினர் அனைவரையும் பணி யிடை விலக்கம் செய்து அவர்கள் மீது கொலைக்குற்றச்சாட்டு சுமத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய செயல் பிறருக்குப் பாடமாக அமைந்து அரசு நிருவாகம் செமமமையாக இயங்க வழி வகுக்கும். இறந்தவர் குடும்பத்தினருக்கு அரசு எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும். அக் குடும்பத்தினருக்குத் தினமணி நேயர்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கல்கள். வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 24 Nov 2010 08:47:01 PM IST
கன்னியாகுமரி, நவ.24: கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் உள்ள தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தில், சாதிச் சான்றிதழ் தராமல் இழுத்தடித்ததால் மனம் வெதும்பி பேரூராட்சி துணைத்தலைவர் மா.தங்கசாமி(38) விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.கடந்த இரண்டரை வருடங்களாக தன் மகன், மகளுக்கு சாதிச்சான்றிதழ் பெற கடும் போராட்டத்தைச் சந்தித்தாராம் மா. தங்கசாமி. அதனால் இவர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தற்கொலை செய்துகொள்வதாகக் கூறி ஓரிரு முறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப் பட்டிருக்கிறார். இந்நிலையில் சாதிச் சான்றிதழ் பெற முடியாமல் தவித்ததால், மீண்டும் அவர் , மனம் வெதும்பிய நிலையில் பூதப்பாண்டியில் உள்ள தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கருத்துகள்
சான்றிதழ் கொடுக்க மருத்தவரை எரிக்க வேன்டும்
By sathis
11/24/2010 9:17:00 PM
11/24/2010 9:17:00 PM