திங்கள், 22 நவம்பர், 2010

குடும்ப அரசியலால்தான்  இன்றைக்குக் கோவன்போன்றோர் அரசியலில் உள்ளனர். குடும்ப ஆட்சியை முதலில் புகுத்தியதே அவர் சார்ந்த காங்.கட்சிதான். எனவே, உண்மையிலேயே இதில் அவர் கருத்து செலுத்த எண்ணினால் கட்சி அரசியலில் இருந்து வெளியேறி குடும்ப அரசியலுக்கு எதிரான ஓர் இயக்கத்தை நடத்தட்டும். அவ்வாறில்லாமல் தன் உளறல்களை வெளியிட ஊடகங்கள் இருக்கின்றன என்னும் நம்பிக்கையில்  தவளையாய் மாறாமல்  அமைதி காக்க வேண்டும். அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்



கவுந்தப்பாடி  : ""தமிழகத்தில் குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர காங்கிரஸ் கட்சியினர் ஒன்று திரண்டு பாடுபட வேண்டும்,'' என முன்னாள் மத்திய இணை அமைச்சர் இளங்கோவன் பேசினார்.
கோபியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் இளங்கோவன் பேசியதாவது:காங்கிரஸ் கட்சியில் பல பேருக்கு திறமை இருந்தாலும் வாய்ப்புகள் இல்லாமல் போய் விடுகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால்தான் தமிழகத்தின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். அத்தகைய ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்த நாம் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும்.தமிழகத்தின் நிலைமை தற்போது மிகமோசமாக உள்ளது. வரும் தேர்தலில் எதையாவது செய்து ஆட்சியை பிடித்தே தீரவேண்டும். அதற்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும். தமிழகத்தில் மீண்டும் பரம்பரை ஆட்சி வந்து விடும் என்ற பயம் ஏற்பட்டுள்ளது. தவறுகளை சுட்டிக் காட்டினால் கோபப்படுகின்றனர்.

நீயும் இதையே செய்; ஜால்றா போடு என்கின்றனர். நான் யாருக்கும் ஜால்ரா போடுகிறவன் இல்லை.ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதை நினைத்துப் பார்க்கும் போது பயமாக உள்ளது. இந்த தொகைக்கு எத்தனை, "சைபர்' என்று கூட பலருக்கு தெரியாது. சத்துணவுடன் இலவச கல்வியை கொண்டு வந்தவர் காமராஜர். அந்த திட்டத்துக்காக பட்ஜெட்டில் அன்றைய காலகட்டத்தில் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டால் பல்வேறு நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழகத்தில் குடும்ப ஆட்சியை நீடிக்க விடக்கூடாது. இதன் பிடியில் இருந்து தமிழக மக்களை காப்பாற்றியாக வேண்டும். இந்த நிலை நீடித்தால் தமிழகம் என்னவாகும் என நினைத்துப் பாருங்கள்.இவ்வாறு இளங்கோவன் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக