புதன், 24 நவம்பர், 2010

எசு..எம்.கிருட்டிணா நாளை இலங்கைப் பயணம்

இப்பயணம் இலங்கைத்தமிழரின் நலனுக்காக அல்ல வென்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அதற்கு மேல் இதைப்பற்றிக் கூற ஒன்றும் இல்லை. வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
எஸ்.எம்.கிருஷ்ணா நாளை இலங்கை பயணம்

First Published : 24 Nov 2010 12:15:56 AM IST


புது தில்லி, நவ.23:  மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா 7-வது கூட்டு ஆலோசனைக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக 4 நாள் பயணமாக இலங்கைக்கு வியாழக்கிழமை செல்கிறார்.÷÷இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்ச கடந்த ஜூன் மாதம் இந்தியா வந்தபோது இருநாடுகளும் இணைந்து இலங்கையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து முடிவு செய்யப்பட்டது. அது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்படுகிறது.÷இலங்கையின் தெற்குப் பகுதியான அம்பன்தோட்டாவில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கும், வடக்கு யாழ்ப்பாணம் பகுதிக்கும் கிருஷ்ணா செல்கிறார். இதேபோல் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள் வசிக்கும் தேயிலை எஸ்டேட் பகுதிக்கும் அவர் செல்கிறார். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த தமிழர்களுக்காக இந்தியாவின் பங்களிப்புடன் இலங்கையின் வடக்குப் பகுதியில் முதற்கட்டமாக 1000 வீடுகள் கட்டப்படவுள்ளன. இதற்கான தொடக்க விழாவிலும் அவர் கலந்து கொள்கிறார். ÷இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது தொடர்பாகவும் இலங்கை அரசுடன் கிருஷ்ணா பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக