வெள்ளி, 26 நவம்பர், 2010

மத்திய அரசோடு சேர்ந்திருப்பது தீது என்றால் யோசிக்கிறோம்: முதல்வர்

மத்திய மாநில அரசுகள் வேறு; அவற்றை ஆளும கட்சி ஆட்சிகள் என்பது வேறு. அரசாங்கம் நிலைத்தது. ஆட்சி மாற்றத்திற்குரியது.  இரண்டையும் குழப்பி குழம்பிப்போய் யாரையோ எச்சரிப்பதாகவோ வேறு வகையிலோ எண்ணிக் கலைஞர் பேசியுள்ளார். தமிழர் நலனை மட்டும் முன்னிலைப்படுத்திக் காங்.கிற்கு எதிராகச் செயல்பட்டிருந்தார் எனில் இந்த நிலை வந்திருக்காது. சரியான எதிர்க்கட்சித் தலைமை இல்லாக்காரணத்தால் தமிழன்பர்கள் பலர் கலைஞர் பக்கமே இருக்கின்றனர். எனவே, இனியேனும் தன் நிலையை மாற்றித் தெளிவான முடிவிற்கு வந்து எஞ்சிய ஈழத்தமிழர்களைக் காக்கவும் போர்க்குற்றவாளிக ளும் இனப்படுகொலைக்காரர்களும் தண்டிக்கப்பட ஆவன செய்ய வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்




மத்திய அரசோடு சேர்ந்திருப்பது தீது என்றால் யோசிக்கிறோம்: முதல்வர்
First Published : 25 Nov 2010 04:43:54 AM IST

Last Updated : 25 Nov 2010 08:39:48 AM IST
சென்னை, நவ.24: ""மத்திய அரசோடு, மாநில அரசு சேர்ந்திருப்பது தீது என்றால், சொல்லுங்கள் யோசிக்கிறோம், அவ்வளவுதான் சொல்ல முடியும்'' என்றார் முதல்வர் கருணாநிதி.'2 ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல்புரிந்த மத்திய அமைச்சர் ஆ.ராசாவைப் பதவி நீக்கம் செய்யுங்கள், மத்திய அரசுக்கு ஆதரவளிக்கிறேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பகிரங்க அறிவிப்பை வெளியிட்டார்.ஸ்பெக்ட்ரம் விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்ததைத் தொடர்ந்து  மத்திய அமைச்சர் ஆ.ராசா தனது பதவியை ராஜிநாமா செய்தார். இந்நிலையில், முதல்வர் கருணாநிதி இவ்வாறு பேசியுள்ளார்.தமிழக வேளாண்துறை சார்பில் வேளாண் கருத்தரங்கம் மற்றும் அலுவலர்கள் மாநாடு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு முதல்வர் கருணாநிதி பேசியது:"மக்களுக்காகச் சாதனை செய்கிறோம், முடிக்கிறோம் என்றால், அது மத்திய அரசை விட்டுவிட்டு செய்வதில்லை. நீங்கள் 8 அடி பாய்ந்தால், 16 அடி பாய்வோம். அந்த 8-ஐ கூட்டித்தான் சொன்னேன். நான் கணக்கில் ஒன்றும் முட்டாள் அல்ல. நாங்கள் தனியாக 16 அடி பாய வேண்டும் என்று அண்ணா காலத்தில் கேட்டோம்.நாங்கள் போடுகிற திட்டம், உங்களுக்கு பயன்படக்கூடியது அல்லவா என்று கூறிய பிறகு, அதுபற்றி நாங்களும் யோசித்து நம்பித்தான் சேர்ந்தோம். சேர்ந்தே இருப்பது தீது என்றால் சொல்லுங்கள், யோசிக்கிறோம். அவ்வளவுதான் சொல்ல முடியும்.இந்தியனுக்காகப் போடுகிற திட்டம், எல்லோருக்கான திட்டம். அதில் பாகுபாடு இருக்கக் கூடாது. சிலர் மத்திய அரசின் திட்டமா, மாநில அரசின் திட்டமா என்று மக்களைக் குழப்ப முன்வருவார்கள்.மத்திய அரசு வேறு, மாநில அரசு வேறு என்று கருதவில்லை. மத்தியிலே ஒரு காரியம் நடந்தால், அது மாநிலத்தையும் பாதிக்கும் என்பதை யோசிப்பவன், சிந்திப்பவன் நான். நான் இரண்டையும் ஒரே சமமாகக் கருதுகிறேன். மாநிலம், மத்தியம் என்பது நிர்வாகத்துக்குத்தான். அது பேதங்களுக்காக, பிளவுகளுக்காக அல்ல. இதை அரசியல் சிந்தனையாளர்கள் நிச்சயமாக மறந்துவிடக்கூடாது.நான்தான் பெற்றேன் என்று தாய் சொல்லலாம். ஆனால் அதில் தகப்பனுக்கும் பங்கு உண்டு. அரசன் சாலமன் தீர்ப்பில், ஒரு குழந்தைக்காக இரண்டு தாய் போராடியபோது, இந்த குழந்தை உன்னுடையது அல்ல என போலித்தாயிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். ஒரு கட்டத்தில் தனது வாளால் குழந்தையை இரண்டு துண்டாக வெட்டி, ஆளுக்கு ஒரு துண்டு தருகிறேன் என்றான். அப்போது போலி தாய் சரி என்று சொன்னாள், ஏனெனில் குழந்தை அவளுடையது அல்ல. குழந்தையை வெட்டினால் அவளுக்கு என்ன கவலை என்ற ரீதியில் போலி தாய் சொன்னாள்.உடனே உண்மையான தாய், ஐயோ நான் பெற்ற குழந்தையை வெட்டிவிடாதீர்கள். குழந்தை உயிரோடு இருக்க வேண்டும். குழந்தையை அவளிடமே கொடுத்து விடுங்கள் என்றாள் அந்த உண்மைத்தாய், குழந்தை உயிரோடு இருக்க வேண்டும் என்ற சிந்தனை அவளுக்கு இருந்தது. அந்த நிலையில் இருந்து சொல்கிறேன். யார் திட்டத்தைப் போட்டால் என்ன? யார் வீடு கட்டினால் என்ன? யார் ரோடு போட்டால் என்ன? யார் 108 வண்டி ஓட்டினால் என்ன? போடுகிற திட்டங்கள் மக்களுக்குப் பயன்பட்டால் போதும்.நான்தான் செய்தேன் என்று கூறுவது, போலி தாய், நான்தான் பெற்றேன் என்று பங்கு கேட்பதுபோல ஆகிவிடும். எனவே குழந்தை காப்பாற்றப்பட வேண்டும். இந்தியாவின் சுதந்திரம் காப்பாற்றப்பட வேண்டும் என்றார் முதல்வர் கருணாநிதி.துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் சண்முகம், வேளாண்துறை முதன்மைச் செயலாளர் ராமமோகன்ராவ், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முருகேச பூபதி உள்ளிட்டோர் பேசினர்.
கருத்துகள்

திருடர்கள் முன்னேற்றக் கழகத்தலைவர் கணக்கில் புலி என்று எல்லாருக்கும் தெரியும் தானே!
By deyes
11/25/2010 7:39:00 PM
நீங்கள் கணக்கில் ஒன்றும் முட்டாள் அல்ல என்பதை மிக அழகாக நிரூபித்து விட்டீர்கள். ரூ. 1.76 லட்சம் கோடி என்பதற்கு எத்தனை பூஜ்யம் என்று கணித மேதைகளே குழம்புவார்கள் - நீங்கள் எளிதாக கையாண்டு விட்டீர்கள். உங்களது இந்த தனித் திறமையை பாராட்டி THE NEW YORK TIMES மற்றும் BBC போன்றவைகளே மெச்சுகின்றன!!! வயதின் காரணமாக இப்போதெல்லாம் தங்களது பேச்சில் சற்று சறுக்கல் விழுகிறது. "நீங்கள் 8 கோடி அடித்தால், நாங்கள் 16 கோடி அடிப்போம். அந்த 8 கோடியையும் கூட்டித்தான் சொன்னேன்" என்று தெளிவாக சொல்லுங்கள். நான்தான் அடித்தேன் என்று தாய் (நீங்கள்) சொல்லலாம். ஆனால் அதில் தகப்பனுக்கும் ("மண்"ணுக்கும்) பங்கு உண்டு. அதெல்லாம் இருக்காட்டும், நகமும் சதையுமாக இருந்த உங்கள் கூட்டணிக்குள் ஏன் இப்போது இப்படி திடீரென்று விரிசல்?? ஏதேனும் பங்காளிச் சண்டையா??
By ragav
11/25/2010 5:52:00 PM
Hello All, Please do not blame Mr.Mk,he's is the only respectable and eligible tamizhan to rule entire tamizh's...because we are more bothered about caste,dravidan-aryan's...thousands of money per vote and the CM who promises more free bies for our entire life.For us,develpoment is least important,recently we have degraded ourselves from Bhiari's.And most importantly we would never unite ourselves for any common cause,even when any agitation takes place for price hike and petrol hike,we never extend our support.
By Prem
11/25/2010 5:49:00 PM
கோடிகலில் குலித்தவர் பனம் போதுமென்ட்ராயிருக்கும். அடுத்தது அம்மா ஆட்ஷிதான். அபொழுது தெரியும்.
By Jana
11/25/2010 5:30:00 PM
மத்திய அரசு வேறு, மாநில அரசு வேறு என்று கருதவில்லை. மத்தியிலே ஒரு காரியம் நடந்தால், அது மாநிலத்தையும் பாதிக்கும் என்பதை யோசிப்பவன், சிந்திப்பவன் நான். Thats y DMK family doing all cureption in our country and favour thier family only...
By Martin
11/25/2010 5:16:00 PM
நாடோடி போன்றவர்கள் இன்னமும் மு க விடம் நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பது ஆச்சரியம்!! இவ்வளவு பெரிய ஊழல் நடந்துள்ளது, உலக மகா ஊழல் என்னும் தகுதி வாய்ந்தது. பீகாரில் நிதிஷ் குமார் ஊழலற்ற ஆட்சியை நடத்தி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். அதுபோன்ற ஆட்சியை தமிழகம் 1967க்கு முன் கண்டுள்ளது. அது போன்ற ஆட்சி இங்கு மலர வேன்டும், ஊழல் குடும்ப ஆட்சி போக வேண்டும் என்ற நினைப்பு இல்லையோ? இதுபோன்று படித்தவர்களும் நினைப்பது வேதனை தருகிறது. இவர்களிடம் உள்ள பணபலம் மிக மிக மகத்தானது. அதை எதிர் கொள்ள மக்கள் சக்தி ஒன்றால்தான் முடியும். ஊடகங்களுக்கு அதிகமான பொறுப்பு இப்போது உள்ளது.
By Tamilian
11/25/2010 4:28:00 PM
பெற்றது ராசா மட்டும் அல்லவாம்.மத்திய அரசுக்கும் பஙுகு கொடுத்துள்ளாராம். .மத்திய அரசை வெட்டி விடுவாராம் ,ரொம்ப முறைக்காதீங்க என்று காங்கிரசை வெளிப்படையாக மிரட்டுகிறார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோ. எங்கே பதில் தயாரா?
By vasudevan.mu
11/25/2010 4:24:00 PM
Karunanidhi, We have heard enough of your Tamil gimmicks for the past many years. They are same old meaningless and entertain your group of people around you. Please stop that and look at what was done by Bihar Chiefminister Nitish Kumar. You need to learn a lot from that politician. You only think of you and family to stay in power and make money. Dirty and cheating habits are born with you and your family members have inherited from you. No one is educated in your family and all are rowdys groomed by you. Age has not matured you. You are disgrace. Inspite of all proven scandals against you, shamelessly you smile and hang around. How can someone do that? Krish Desikan
By Krish
11/25/2010 4:04:00 PM
இவ்வளவு செய்த பிற்கும் தான் செய்தது குற்ற்ம் என்று இவருக்குப் படவில்லை. பிளாக்மெயில் செய்வது போல் பேசுகிறார். சே! என்ன் மனிதரக்ள் அப்பா !
By abhishtu
11/25/2010 4:01:00 PM
இதில் கொடுமை என்ன தெரியுமா.. ஒரு கழகம் அல்லது தலைவன் பொனால் வரப்பொவது புத்தரொ அல்லது காந்தி அல்ல என்பதை எல்லொரும் எப்பொது உனர பொகிரார் ..
By s
11/25/2010 4:00:00 PM
எதை தின்னால் பித்தம் தெலியும் என தெரியாமல் தவிக்கும் கலைஜர் பலயபடி டுபாக்குர் வீரத்தை காட்ட ஆரம்பித்து மக்கலை ஏமாத்த்ப் பார்க்கின்ட்ரர் - உமது போலி வீரம் இனி எடுபடாது மகன .
By poyyan karunanidhi
11/25/2010 3:26:00 PM
இப்பவே பிரிஞ்சி வந்தா நாளை சிபிஐ யை ராசாவை செஞ்சா பழிவாங்கும் நடவடிக்கைன்னு செய்தி போடலாமுல்ல, அது தான், காவிருக்கு இலங்கைக்கும் கூட்டணி முறிவு கிடையாது காசுக்கு தான் கூட்டணி முறிவு?
By Kumar
11/25/2010 2:46:00 PM
கருணானிதி ஒரு மோடி மச்தன் வேலை செய்பவன் என மக்கள் இனி யவது கன்டு கொன்டல் சரி
By indian
11/25/2010 2:25:00 PM
தமிழகத்தைப் பொருத்தவரை ஜெ-வைவிட மு.க.வின் ஆட்சி மேல் என்பது மக்களுக்குத் தெரியும். என்னதான் முயன்றாலும் வரும் தேர்தலில் அ.தி.மு.க ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை. ஜெ-வை தூக்கி நிறுத்த சில பத்திரிக்கைகள் முயற்சிக்கின்றன. நாட்டில் நடக்கும் நல்லவைகள் இவர்களுக்குத் தெரியாது. ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கும் கலையில் வல்லவர்கள். எத்தனை கோவில்கள் புணரமைக்கப்பட்டுள்ளன என்பதைச் செய்தியாக வெளியிடுவதில்லை. உள் நோக்கத்துடன் தூண்டிவிடப் பட்ட சாலை மறியல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மக்களுக்கு உண்மை தெரிய பல ஊடகங்கள் உள்ளன. காங்கிரஸுக்கு ஆதரவளிப்பதாக அறிக்கை விட்டது, ராஜ தந்திரம் என ஜெ-நினைத்துக் கொண்டுள்ளார். இது வரும் தேர்தலில் அவருக்கு பெரும் பிரச்சினையாகும்.
By நாடோடி
11/25/2010 2:21:00 PM
பிகார் எலெக்சன் ரிசல்ட் வந்தவுடன் இப்படி கூறுகிறார். கங்கிரஸ் படு தோல்வி சந்தித்துள்ளது. நிதிஸ்குமார் எளிமைக்கும், சிறந்த நிர்வாகத்திற்க்கும் படிக்காத பாமர மக்கள், பழஙுடியினர் சிறப்புமிக்க வோட்டளிப்பு அது. அவரின் கால் தூஸுக்கு தி.மு.க. நிர்வாகம் ஈடாக முடியாது. மீசை முளைக்கதவன் தாயாரிப்பாளர், தொழில் அதிபர், V.I.P , வெட்கக்கேடு.
By Sadhullah - Dubai
11/25/2010 1:44:00 PM
பிகார் எலெக்சன் ரிசல்ட் வந்தவுடன் இப்படி கூறுகிறார். கங்கிரஸ் படு தோல்வி சந்தித்துள்ளது. நிதிஸ்குமார் எளிமைக்கும், சிறந்த நிர்வாகத்திற்க்கும் படிக்காத பாமர மக்கள், பழஙுடியினர் சிறப்புமிக்க வோட்டளிப்பு அது. அவரின் கால் தூஸுக்கு தி.மு.க. நிர்வாகம் ஈடாக முடியாது. மீசை முளைக்கதவன் தாயாரிப்பாளர், தொழில் அதிபர், V.I.P , வெட்கக்கேடு.
By Sadhullah - Dubai
11/25/2010 1:40:00 PM
weldone Abdul Rahman - Dubai and ambalavanan. I appreciate your comments.
By Karthik
11/25/2010 1:33:00 PM
"நான்தான் செய்தேன் என்று கூறுவது, போலி தாய், நான்தான் பெற்றேன் என்று பங்கு கேட்பதுபோல ஆகிவிடும்" Now we know who is the fake mother. Everyone knows that you have been taking credit and naming all govt schemes as kalaingar thittam. In Andhra the insurance scheme is named as 'Arogya sri' here it is 'kalaingar kapeetu thittam' He is an egotist. He also enjoys naming all govt schemes in his name. When next govt takes charge all names should be changed.
By Karthik
11/25/2010 1:29:00 PM
Abdul Rahman - Dubai - சரியான கருத்து
By Manikandan V
11/25/2010 1:15:00 PM
ஐயா நாங்கள் எப்போதும் உங்கள் பக்கம் தான்..திமுக ஒருபொதும் தோற்க்காது...
By shaju
11/25/2010 1:13:00 PM
காங்கிரஸ்சை தலைவர் போலி தாய் என்று கிண்டலடிப்பது புரிகிறது..ஆனால் காங்கிரசையா?? சோனியாவையா?? என்பதுதான் குழப்பம்.
By Tamizhinian
11/25/2010 1:00:00 PM
மத்திய அரசு திட்டமோ மாநில அரசு திட்டமோ மக்களுக்கு நல்லதுதானே செய்கிறேன்னு சொல்லுகிற நீங்கள் ஏன் உங்கள் குடும்ப டீவியில் விளம்பரத்துக்காக இத்திட்டங்கள் எள்ளாம் நமது தி மு காதன் செய்ததுன்னு சொல்லி மக்களை ஏமாற்றுகிரிற்கள் ஏன் உன்மையை சொல்லி ஓட்டு கேட்கலாமே மேலும் அம்மா ஆட்ச்சி காலத்தில் சில நல்ல திட்டங்கள் எல்லாம் வகுத்து வைத்து போனபோது நீங்கள் அத்திட்டத்தை எல்லாம் மாற்றியது எல்லாம் உங்களின் வயதின் காரனமாக மறந்து விட்டிற்களா? செய்யறது எல்லாம் செய்துவிட்டு இப்ப வந்து நான் கணக்கில் முட்டாள் இல்லை நான் ரொம்பவும் அறிவாளின்னு புளம்பி இன்னும் மக்களை ஏமாற்ற வேண்டாம் நீங்கள் நம் நாடு நள்ள இருக்கனும் அனைத்து மக்களும் நள்ளா இருக்கனும்னு நினைச்சிங்கன்னா இப்பவே ஆட்சியை களைத்து வேறு நள்ள மனிதர்களின் கையில் (அம்மாவை தவிற) ஒப்படைத்து 5 ஆண்டு வேடிக்கைப்பார் நம் நாடு எப்படி முன்னேறுதுன்னு!
By பாஷா
11/25/2010 12:46:00 PM
is dinamani want to attack on mk only
By Anapayar
11/25/2010 12:45:00 PM
தலைவா அப்போ ஸ்பெக்ட்ரம் மேட்டர்ல இரண்டு பேருக்கும் சரிதான் பங்கு பிரிச்சிகன்னு சொல்றிங்க அப்படித்தானே ............
By Aslam-Dubai
11/25/2010 12:44:00 PM
அதுசரி...அடிக்கவேண்டிய கொள்ளைய பெருசா அடிச்சாச்சு இனி அடிச்சத வச்சி அரசியல் நடத்திக்க்லாமுன்னு யோசிக்கிறாரு போல உலக மகா ஊழல்வாதி கருணாநிதி! அதனால்தான் இப்படியெல்லாம் அனுமான அறிக்கை விடுறாரு. இதுவரை இந்த பூமியில் இருக்கும் மனித்ர்களிலயே மிகப்பெரிய சந்தர்ப்பவாதி, துரோகி யாரென்றால் அது கருணாநிதிதான்!!!
By bala
11/25/2010 12:15:00 PM
நீங்கள் சொன்னதை நம்பிய முட்டாள் தமிலர்கள் காலம் இப்பொழ்து இல்லை இனி உங்கள் செப்புவித்தை நடக்காது
By sony
11/25/2010 12:10:00 PM
பல்டி அடிப்பதில் இவருக்கு நிகர் இவர்தான்.சரியான காமெடி பீஸ்.வரும் கால்ம் பாடம் தரும்.
By manitham
11/25/2010 12:07:00 PM
பல்டி அடிபதில் கில்லாடி தாத்தா.சரியான காமெடி பீஸ்.
By manitham
11/25/2010 12:03:00 PM
அரசியலில் எதூஉம் நடக்கலாம்
By rock stone
11/25/2010 11:48:00 AM
கருணாநிதியின் பேச்சு விஷமத்தனமானது மட்டும் அல்ல். விஷத்தனமானது கூட.
By abhi
11/25/2010 11:32:00 AM
iyya neenga ivvalavu naala sambaricha thu pothatha.....ippadi 100 kodi makalin pavathai en intha vayasula sambarikiringa...ennatha ethutitu poga poringa.
By india thatha
11/25/2010 11:15:00 AM
M karunanidhi is a big scam ridden person!!! Tamils will never forget his sins !!!
By krishna iLa
11/25/2010 11:09:00 AM
நீங்கள் கணக்கில் ஒன்றும் முட்டாள் அல்ல என்பதை மிக அழகாக நிரூபித்து விட்டீர்கள். ரூ. 1.76 லட்சம் கோடி என்பதற்கு எத்தனை பூஜ்யம் என்று கணித மேதைகளே குழம்புவார்கள் - நீங்கள் எளிதாக கையாண்டு விட்டீர்கள். உங்களது இந்த தனித் திறமையை பாராட்டி THE NEW YORK TIMES மற்றும் BBC போன்றவைகளே மெச்சுகின்றன!!! வயதின் காரணமாக இப்போதெல்லாம் தங்களது பேச்சில் சற்று சறுக்கல் விழுகிறது. "நீங்கள் 8 கோடி அடித்தால், நாங்கள் 16 கோடி அடிப்போம். அந்த 8 கோடியையும் கூட்டித்தான் சொன்னேன்" என்று தெளிவாக சொல்லுங்கள். நான்தான் அடித்தேன் என்று தாய் (நீங்கள்) சொல்லலாம். ஆனால் அதில் தகப்பனுக்கும் ("மண்"ணுக்கும்) பங்கு உண்டு. அதெல்லாம் இருக்காட்டும், நகமும் சதையுமாக இருந்த உங்கள் கூட்டணிக்குள் ஏன் இப்போது இப்படி திடீரென்று விரிசல்?? ஏதேனும் பங்காளிச் சண்டையா??
By Abdul Rahman - Dubai
11/25/2010 10:41:00 AM
நம் முதல்வர் கருணாநிதி உலகிலே மிகப்பெரிய ஊழல்வாதி அவர் வழி வந்தா ராஜா எப்படி இருப்பார்? MOHIDEEN-KILAKKARAI
By MOHIDEEN
11/25/2010 10:23:00 AM
நல்ல ஏமாற்ற தெரிந்த வித்தகர் தாம் ஈய்யா
By sivaji
11/25/2010 10:20:00 AM
நம் முதல்வர் 1984 ல் பேசியதை கொஞ்சம் கேளுங்கள்: தேன் எடுத்தவன் புறங்கையை நக்கமாட்டானா? ஏழு ஆண்டு தண்டனைகள் போதாதா? இவரைப் பற்றி இனி சொல்ல என்ன இருக்கிறது.
By gs
11/25/2010 9:23:00 AM
உலகிலே மிகப்பெரிய ஊழல்வாதி பேசுகிரார்
By Arockiam
11/25/2010 9:21:00 AM
இந்த மாதிரி முதல்வ்ர் இருந்தால் நாடும் மானிலமும் எப்படி முன்னெரும். இவர் சொல்லும் கதைக்கும் இந்த உழஹ்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
By Comdexx
11/25/2010 9:19:00 AM
இந்த கிழவருக்கு தானும் தன் குடும்பமும் மக்களுக்கு செய்த, செய்துகொண்டிருக்கிற பாவத்தின் காரணமாக மனம் பேதலித்துவிட்டது.
By Vijay
11/25/2010 9:17:00 AM
1.76Laks croors நாந்தான் செய்தேன் நாந்தான் பெற்றேனெ!! ! பங்கு !!!!
By Raja
11/25/2010 8:28:00 AM
ஐயா! என்ன இது? கூட்டணி கோவிந்தாவா? ஏன் இந்த திடீர் பல்டி? அம்மாவின் செல்வாக்கு சொல்வாக்கு ஓங்குகிறதா?
By TAMIL NANBAN
11/25/2010 8:24:00 AM
செய்வது மத்திய அரசின் நிதியால் என்றாலும் திமுக அரசு மட்டுமே செய்தது போன்ற விளம்பரம் செய்வதில் கெட்டிகாரன் நீ. வியாபாரத்திற்கு முக்கியம் விளம்பரம் என உணர்ந்து அரசியலையே வியாபாரமாக்கிவிட்ட முதல் தமிழக முதல்வன் நீ .
By ambalavanan
11/25/2010 8:22:00 AM
நான் கணக்கில் ஒன்றும் முட்டாள் அல்ல 1.76 லட்ஷம் கோடி சும்மவா?????????
By R.Srinivasan
11/25/2010 8:19:00 AM
One thing is certain. Equal sharing has taken place in all.
By krishnan ks
11/25/2010 7:39:00 AM
மாநிலத்தில் நாலரை வருஷம் காங்கிரஸ் கூட்டணியில ஆட்சிய ஓட்டியாச்சு. இப்ப மத்தியில ராசாவ தூக்கிட்டானுங்க. அடுத்து எங்க ஆப்பு வரும்னு தெரியாது. இப்ப வந்து கருணாநிதிக்கு ஞானோதயம் வருது, கூட்டணியப் பத்தி யோசிக்கிறாராம். காங்கிரஸ் கூட இருந்துகிட்டு எல்லாத்தையும் அனுபவிச்சு முடிச்சுட்டு இப்ப கூட்டணி மாறுறதுக்கு வேலைய ஆரம்பிச்சுட்டாரு. கடந்த 15 வருசமா மத்தியில கூட்டணிய மாத்தி மாத்தி பதவிய வாங்கி நல்ல சம்பாதிச்சாச்சு. இப்ப அடுத்த கூட்டணிக்கு தாவுறதுக்கு ரெடியாகிட்டார். இவருக்கும் மரம் வெட்டி ராமதாசுக்கும் என்ன வித்தியாசம், மரம்வேட்டியால ஜெயிக்கிற கூட்டணிய சரியா கணிக்க முடியல. கருணாநிதி இப்ப அதுல எக்ஸ்பெர்ட். மதுரைக்காரன்.
By மதுரைக்காரன்.
11/25/2010 7:37:00 AM
YOU HAVE ENJOYED BEYOND YOUR EXPECTATION IN MAKING MONEY AFTER JAYALALITHA AND MGR SWINDLED TAMILNADU EVEN THOUGH YOUR ORIGIN IS ANDHRA HELPED TELUGUS LIKE ARCOT,RANGANATHAN, VAIKO,VIJAYAKANTH(BY PAYING MONEY) ETC, JAYA LALITHA FROM KARNATAKA BUT ANDHARA CONDITION DUE TO SOMENBABU ALONGWITH BRAMIN TAG HELPED BRAMINS ETC. ATLEAST LIKE NITHISHKUMAR JOIN HANDS WITH PMK BEING LOCAL TAMIL PARTY TO FORM A MULTI PARTY GOVERNMENT RIGHT NOW. YOU CAN DO SOMETHING FOR PEOPLE OF TAMILNADU LIKE PMK DID TO TAMILNADU AS WELL AS INDIA 108,FULLY CONVERSION METER GAUGE TO BROAD GAUGE IN TAMILNADU, RURAL HEALTH MISSION, SALEM AND MADURAI HOSPITAL LIKE AIMS,DELHI WHICH YOU ONLY CLAIMED AS IF YOU DID THESE IN YOUR ELECTION PROPAGANDA. DONT THINK THAT YOU CAN FOOL FURTHER. YOU ORDER FOR COMMUNITYWISE CENSUS IMMEDIATELY AFTER FORMING MULTIPARTY GOVERNMENT IN TAMILNADU NOW. YOU CAN ESCAPE TO SOME EXTENT. OTHERWISE JAYALALITHA WILL SWOLLOW YOUR PROPERTY AND YOUR FAMILY.
By Tamil God
11/25/2010 7:36:00 AM
கலைஞரே பிள்ளையார் கோவிலில் 108 தோப்புகரனம் போட்டு 108 தேங்காய் உடைத்தால் கவலைநீங்கும்
By srithar
11/25/2010 7:32:00 AM
யாருக்கு இந்த விளக்கம் வெஙகாயம் கொடுக்கராரு கருனனிதி. சாத்தான் வேதம் ஓதுகிரது. முதலில் இவர் சொன்னதை இவர் பின்பட்ருகிராரா??
By raja
11/25/2010 7:23:00 AM
தமிழ் மக்கள் உரிமைகளையும், சுயமரியாதையையும், அண்ணா, பெரியார் அவர்களின் கனவுகளையும் காங்கிரசுக்கு அடமானம் வைத்துவிட்டு இப்பொழுது சப்பை கட்டு கட்டுகிறீர்களே முதல்வர் ஐயா. எங்கே போனது உமது வீரமும் தமிழின உணர்வும்? நீங்கள் சொன்ன சாலமன் கதைக்கும் நீங்கள் சொல்லும் கருத்துக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லையே.
By மரமண்டை
11/25/2010 7:03:00 AM
சீ...சீ... இந்தப் பழம் புளிக்கும்.
By சுடுகாட்டுசாமி
11/25/2010 6:58:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக