First Published : 24 Nov 2010 02:55:12 AM IST
Last Updated :
சென்னை, நவ. 23: வள்ளியப்பா இலக்கிய வட்டம் சார்பில் சிறுவர் சிறுகதைப் போட்டி நடைபெறவுள்ளது. குழந்தை இலக்கியப் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் வகையில் செல்லப்பா - செல்லப்பன் அறக்கட்டளையுடன் இணைந்து வள்ளியப்பா இலக்கிய வட்டம் இந்தப் போட்டிகளை நடத்துகிறது. போட்டிக்கு வரும் சிறுகதைகளில் மிகச் சிறந்த கதைகள் தேர்வு செய்யப்படும். முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்படும் கதைக்கு | 500 வழங்கப்படும். இரண்டாம் பரிசாக | 300, மூன்றாம் பரிசாக | 200 வழங்கப்படும். மேலும், ஆறுதல் பரிசாக 20 கதைகளுக்கு தலா | 50 வழங்கப்படும். சிறுவர் சிறுகதை முழுத்தாளில் 4 பக்கங்களுக்கு மிகாமல் அமைதல் வேண்டும். போட்டிக்கு அனுப்பப்படும் சிறுகதைகளை திருப்பி அனுப்ப இயலாது. பரிசும், பாராட்டும் பெறும் சிறுகதைகளின் உரிமை வள்ளியப்பா இலக்கிய வட்டத்துக்கு உரியது. ÷போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட அனைவரும் கலந்து கொள்ளலாம். போட்டிக்கு அனுப்பப்படும் கதைகள் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். ÷2011 ஜனவரியில் காரைக்குடியில் நடைபெறும் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா கலை இலக்கியப் பெருவிழாவில் பரிசுகள் வழங்கப்படும். கதைகளை 31.12.2010-க்குள் அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி: தேவி நாச்சியப்பன், குழந்தைக் கவிஞர் இல்லம், சேதுராம் ரைஸ் மில் அருகில், பிளாட் எண் 2, சுப்பிரமணியபுரம் 9-வது குறுக்கு சாலை வடக்கு விரிவு, காரைக்குடி - 630003. தொலைபேசி: 04565 224532.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக