நல்ல முயற்சி. பாராட்டுகள். பிற வானொலி நியைங்கள் இந்நிகழ்ச்சிகளை அஞ்சல் செய்ய வகை செய்து பிற பகுதியினரும் பயனுற ஆவன செய்ய வேண்டும். 2. துணை வேந்தரின் உரையில் கி.பி. 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அருத்த சாத்திரம் கி.மு.4 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துகளுடனும் வருத்தத்துடனும்
இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 25 Nov 2010 04:47:15 AM IST
தஞ்சாவூர், நவ. 24: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வளர் தமிழ் வானொலி நிலையம் 2011 ஜனவரி 14-ல் தொடங்கப்படுகிறது என்றார் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.ராசேந்திரன்.தமிழ்ப் பல்கலைக்கழக மொழிபெயர்ப்புத் துறை, சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில், "தமிழ்க் காப்பிய, நீதி இலக்கிய மொழிபெயர்ப்புகள்- சிக்கல்களும் தீர்வுகளும்' என்ற தலைப்பில் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை தொடங்கிய தேசியக் கருத்தரங்குக்கு தலைமை வகித்து மேலும் அவர் பேசியதாவது:மொழிபெயர்ப்பு என்பது கூடுவிட்டு கூடுபாய்வது போன்றது. மொழிபெயர்ப்பில் கருத்தை மட்டும் மொழிபெயர்க்காமல் சமூக நிகழ்வு, மனதில் ஏற்பட்ட பாதிப்பையும், பிறமொழிச் சொல்கள் துணையுடன் மொழிபெயர்க்க வேண்டும்.இந்தியாவில் சாணக்கியருடைய அர்த்தசாஸ்திரம் கி.மு.4 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்கிறோம். அதை தாமா சாஸ்திரிகள் மொழிபெயர்த்து உலகறியச் செய்தார். அதற்கான மூல ஓலை கிரந்த எழுத்தில் இருந்தது, அதை தஞ்சையிலிருந்து ஒரு பண்டிதர் கொடுத்தார் என்று கூறுகின்றனர். இதன்மூலம் இந்திய வரலாற்றில் மொழிபெயர்ப்புக்கு தமிழர்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளனர் என்பது தெரிகிறது.தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வளர் தமிழ் வானொலி நிலையம் 2011, ஜனவரி 14-ம் தேதி தொடங்கப்படுகிறது. இந்த வானொலி சேவை 30 கி.மீ. தொலைவு கிடைக்கும். இதில் தமிழ் சார்ந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகும். மாணவர்கள் பயன்பெறும் வகையில் மொழிபெயர்ப்பு, மொழி உச்சரிப்பு, பிற மொழியில் வரும் புதிய சொல்களுக்கு தமிழ்ச் சொற்கள், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான சரியான தமிழ்ச் சொல்கள் இதில் ஒலிபரப்பப்படும் என்றார் ராசேந்திரன்.கருத்தரங்கை சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் இலக்கியத் துறைத் தலைவர் அ.அ. மணவாளன் தொடக்கி வைத்தார். கருத்தரங்கம் நவம்பர் 26-ல் நிறைவடைகிறது.
கருத்துகள்
நல்ல செய்தி - 30 கி மீ' என்ற சுருக்கி கொள்ளாமல் குறைந்தது ஒரு 60 கி மீ சுற்றளவுக்கு ஒலிபரப்பவும் - தஞ்சை,திருச்சி மாவட்ட மக்கள் மற்றும் மாணவர்கள் பயனடைவர் - தினமணி இந்த கருத்தினை துணைவேந்தருக்கு தெரிய படுத்த வேண்டும்..
By Manikandan V
11/25/2010 12:50:00 PM
11/25/2010 12:50:00 PM
துணைவேந்தர் முனைவர் இராசேந்திரன் அவர்களுக்கு, இது ஒரு நல்ல முயற்சி. 30 கி.மீ தூரத்துக்குள் இருப்பவர்களுக்கு மட்டும்தான் இந்த நிகழ்ச்சியா? இந்த நிகழ்ச்சியை இணையம் மூலமாக அளித்தால் வெளிநாட்டில் வாழும் தமிழ் ஆர்வலர்களும் கேட்டு பயனடையலாம் இல்லையா.
By மரமண்டை
11/25/2010 7:10:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
11/25/2010 7:10:00 AM