பாவம் கலைஞர்! அவரதுஅகவையில் பாதிகூட இல்லாத தத்துப்பித்து யுவராசா அவருக்கு அறிவுரை கூறுகிறார் ஊழலின் உறைவிடமான காங்., குடும்ப ஆட்சிக்கு வழி வகுத்த காங்., ஒழிந்தால்தான் நாடு வளரும் என்பதை அறிந்தே நாளை தன் பதவி நிலைக்காது என அறியாமல் உளறுகிறார். பாவம் ! பிழைத்துப் போகட்டும் ! மன்னித்து விடுங்கள் கலைஞரே! இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 25 Nov 2010 04:40:32 AM IST
Last Updated : 25 Nov 2010 05:31:31 AM IST

இளைஞர் காங்கிரஸ் பாத யாத்திரை நிறைவை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மூப்பனார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் மத்திய இணை அமைச்சர் அருண் யாதவ்
சென்னை, நவ. 24: ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஆ, ராசாவை திமுகவிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் எம். யுவராஜா கோரிக்கை விடுத்தார்.கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் அக்டோபர் 2-ம் தேதி தொடங்கிய இளைஞர் காங்கிரஸ் பாத யாத்திரையின் நிறைவு விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.விழாவில் யுவராஜா பேசியது:ஊழலுக்கு எதிரான கட்சி காங்கிரஸ். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். முதல்வர் கருணாநிதிக்கு ஒரு கோரிக்கை விடுக்க விரும்புகிறேன். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டவரை திமுகவில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் விரும்பும் கூட்டணி வெற்றிபெற வேண்டுமானால் இதுபோன்ற நடவடிக்கைகளை அவர் எடுக்க வேண்டும்.கோஷ்டிப் பூசல்கள் நிறைந்த காங்கிரஸ் கட்சியால் பாத யாத்திரை நடத்த முடியமா என்று சிலர் கேள்வி எழுப்பினார்கள். காங்கிரஸ் கட்சியைத் தவிர வேறு யாராலும் பாத யாத்திரை நடத்த முடியாது. திராவிடக் கட்சிகளில் தலைவர்கள் வந்தால் மட்டும் கூட்டம் கூடும். பாத யாத்திரை நடத்த முடியும். ஆனால் காங்கிரஸ் கட்சியில் மட்டுமே என்னைப் போன்ற சாதாரணத் தொண்டர்கள் கூட பாத யாத்திரை நடத்த முடியும். கூட்டமும் கூடும். இதனை கடந்த 54 நாள்களில் கண்கூடாகப் பார்த்தோம்.கடந்த 43 ஆண்டுகளாக காங்கிரஸ் தமிழ்நாட்டில் ஆட்சியில் இல்லை. அதற்குக் காரணம் காமராஜர் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் பிரசாரம் செய்ய நாம் தவறி விட்டோம். அணைகள், கால்வாய்கள், பள்ளிக் கூடங்கள் கட்டியது.,மிகப்பெரிய தொழிற்சாலைகள் கொண்டு வந்தது போன்ற அவரின் சாதனைகள் மக்களுக்குத் தெரியவில்லை. கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டம் போன்ற மத்திய அரசின் சாதனைகளும் மக்களைச் சென்று சேரவில்லை.எனவே, காமராஜர் ஆட்சியின் சாதனைகளையும், மத்திய அரசின் சாதனைகளையும், சோனியா காந்தி, மூப்பனார் போன்ற தலைவர்களின் தியாகங்களையும் தமிழகத்தின் கிராமங்களில் மூலை முடுக்கெல்லாம் பிரசாரம் செய்ய வேண்டும். அந்தப் பணியில் இளைஞர் காங்கிரஸ் ஈடுபடும்.திமுக அரசை நான் குறைகூற விரும்பவில்லை. திமுகவினர் இலவச கலர் டி.வி. கொடுப்பதற்காக மட்டுமே கிராமங்களுக்குச் செல்கின்றனர். வளர்ச்சிப் பணிகளுக்காக செல்வதில்லை. இந்த நிலை மாற வேண்டுமானால் தமிழக மக்கள் காங்கிரஸýக்கு ஆதரவளிக்க வேண்டும். வரும் காலங்களில் தமிழகத்தின் ஆட்சி பீடத்தில் காங்கிரஸ் கட்சி அமரும். அதுவே நமது லட்சியம் என்றார் யுவராஜா. மத்திய கனரக தொழில்துறை இணை அமைச்சர் அருண் யாதவ்: பாத யாத்திரையோடு கடமை முடிந்து விட்டதாக இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் இருந்து விடக்கூடாது. பல சவால்களைச் சந்திக்க வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கிறோம். சவால்களை வென்று நாம் சாதனை படைக்க வேண்டும். இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கையில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் தலைவர்களுக்கான பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
கருத்துகள்


By மரமண்டை
11/25/2010 8:53:00 PM
11/25/2010 8:53:00 PM


By மரமண்டை
11/25/2010 8:44:00 PM
11/25/2010 8:44:00 PM


By பொன்மலை ராஜா
11/25/2010 7:14:00 PM
11/25/2010 7:14:00 PM


By நாடோடி
11/25/2010 6:20:00 PM
11/25/2010 6:20:00 PM


By Annamalai
11/25/2010 4:40:00 PM
11/25/2010 4:40:00 PM


By ebenezer
11/25/2010 3:31:00 PM
11/25/2010 3:31:00 PM


By தோப்புத்துறை இனியவன்
11/25/2010 2:53:00 PM
11/25/2010 2:53:00 PM


By சிவமணி தேவர் உசிலம்பட்டி
11/25/2010 1:41:00 PM
11/25/2010 1:41:00 PM


By N BABU
11/25/2010 1:22:00 PM
11/25/2010 1:22:00 PM


By N BABU
11/25/2010 1:20:00 PM
11/25/2010 1:20:00 PM


By pugazhendhi s
11/25/2010 11:35:00 AM
11/25/2010 11:35:00 AM


By புரவி
11/25/2010 11:02:00 AM
11/25/2010 11:02:00 AM


By மதுரைக்காரன்
11/25/2010 10:37:00 AM
11/25/2010 10:37:00 AM


By nallavan
11/25/2010 10:30:00 AM
11/25/2010 10:30:00 AM


By Thamaraichelvan
11/25/2010 9:23:00 AM
11/25/2010 9:23:00 AM


By vaigai Selvan
11/25/2010 9:22:00 AM
11/25/2010 9:22:00 AM


By R.Parthiban
11/25/2010 8:01:00 AM
11/25/2010 8:01:00 AM


By மதுரைக்காரன்
11/25/2010 7:49:00 AM
11/25/2010 7:49:00 AM


By மரமண்டை
11/25/2010 6:08:00 AM
11/25/2010 6:08:00 AM


By மரமண்டை
11/25/2010 5:59:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English
11/25/2010 5:59:00 AM