புதன், 11 ஆகஸ்ட், 2010

அதிகாரிக்குத் தண்டனை: இலங்கை அமைச்சர் பதவிநீக்கம்


கொழும்பு, ஆக.11: இலங்கை நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் பதவியிலிருந்து மெர்வின் சில்வா நீக்கப்பட்டுள்ளார்.டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தத் தவறியதற்காக அரசு அதிகாரி ஒருவரை மரத்தில் கட்டிவைத்து தண்டனை வழங்கியதாக மெர்வின் சில்வா மீது புகார் கூறப்பட்டது. இதையடுத்து அவரை அமைச்சர் பதவியிலிருந்து இலங்கை அதிபர் ராஜபட்ச நீக்கியுள்ளார்.அமைச்சரின் பதவிநீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாக இலங்கை அதிபர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மேலும் இலங்கை சுதந்திரக் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.
கருத்துக்கள்

மிழர்களைக் கொன்று ஒழிப்பவர்களை ஊக்கப்படுத்தினாலும் சிங்கள ஊழியர் மீது கை வைத்தாலாவது தண்டனை கொடுக்கிறார்களே! மனித நேயம் உள்ள சிறுபான்மைச் சிங்களர்களே! தமிழர் உரிமை பெற நீங்களும் குரல் கொடுங்கள்! புத்தநெறிபோற்றுவது உண்மையானால் புத்த சமயத்தை உங்களுக்குத்தந்த உங்கள் மொழியை உங்களுக்குத் தந்த உங்களுக்குத் தங்கள் நிலத்தைத் தந்த தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ வழி செய்யுங்கள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/11/2010 3:22:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக