நான் திருவள்ளுவன் (தினமலர் வாசகர்) கூறுவதை முற்றிலுமாக ஆதரிக்கிறேன். பட்டாணியை மூன்று கிலோ மீட்டர் மூக்கால் தள்ளினால் கின்னஸ் புக்கில் இடம் பிடிக்கலாம். சென்னையிலிருந்து உருண்டு கொண்டே உதகமண்டலம் போனாலும் கின்னசில் இடம் பிடிக்கலாம். இதனால் மற்றவர்களுக்கு என்ன பயன்? மனிதப் பிறவி எடுத்தது மற்றவர்களுக்கு எதாவது வழியில் உதவத்தான். நாற்பது வருடமாக ஒருவர் தன் சம்பளத்தில் பாதியை அனாதை ஆசிரமத்துக்கு கொடுத்தார் என்றாலோ, ஐம்பது வருடமாக ஒருவர் தன் நிலத்தில் விளைந்த அரிசியை தானமாக தன் கிராமத்துக்கு கொடுத்து வந்திருக்கிறார் என்றாலோ, இதை கின்னஸ் தன்னுடைய புக்கில் போட்டு அதற்கு பெருமை தேடிக் கொள்ளலாம்.
by r srinivasan,chennai,India 31-03-2010 11:28:44 IST
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக