மதுரை, ஆக. 7: தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் அல்லாத, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமைய வாய்ப்புள்ளது என்று பா.ம.க. நிறுவனர் எஸ்.ராமதாஸ் தெரிவித்தார்.மதுரையில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:1967-ம் ஆண்டு தமிழ்நாட்டில் திமுக ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு 43 ஆண்டுகளாகியும் காங்கிரஸ் ஆட்சியமைக்க முடியவில்லை. ஒவ்வொரு முறை தேர்தல் வந்தபோதும் திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைத்தே காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட்டது. 1989-ம் ஆண்டு மட்டும் தனித்துப் போட்டியிட்டது. இப்போதைய அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் தலைமையில் திராவிடக் கட்சிகள் அல்லாத கூட்டணி அமைய வாய்ப்புள்ளது.1991-தேர்தலிலும், 1996-தேர்தலிலும் சமூக நீதிக் கூட்டணியை பாமக அமைத்தது. கடந்த 91-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாமக ஒரு இடத்திலும், திமுக ஒரு இடத்திலும் வென்றது. 96-ம் ஆண்டு தேர்தலில் பாமகவுக்கு 4 இடங்களும் அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைத்தன. வரும் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டாலும் 20 இடங்களில் வெல்லும் நிலையில் உள்ளது. மீண்டும் அதுபோன்ற சமூக நீதி கூட்டணி உருவாகவும் வாய்ப்பு உள்ளது.முன்பு அதிமுக கூட்டணியிலிருந்து பாமக தானாக வெளியேறியது. திமுக கூட்டணியில் இருந்தபோது பாமகவை திமுக வெளியேற்றியது. குரு பேசிய பேச்சின் விளைவாகவே இது நடந்தது. பின்னர் திமுக பொதுக்குழு கூடி பாமகவை மீண்டும் சேர்த்துக்கொள்வது குறித்து தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். பாமக தலைவர் கோ.க.மணி தலைமையில் ஐவர் குழு திமுக தலைமையுடன் பேச்சு நடத்தியது. ஆனால், அதன்பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை. மீண்டும் பேச்சுக்கு அழைத்தால் செல்வோம்.தேமுதிக இடம்பெறும் அரசியல் கூட்டணியில் பாமக இடம்பெறுமா என்றும் திமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் முன்பு எதிரணியிலிருந்து அழைத்தால் பேசுவீர்களா என்றும் கேட்கிறீர்கள். அதுபற்றி இப்போது நான் ஒன்றும் கூறமுடியாது. அரசியலில் எதுவும் நடக்கலாம். அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தரப் பகைவர்களும் இல்லை. இப்போதைய அரசியல் சூழ்நிலையில் பாமக எந்தக் கூட்டணியிலும் இல்லை என்பதுதான் உண்மை என்றார் ராமதாஸ்.
கருத்துக்கள்


By Ilakkuvanar thiruvalluvan
8/8/2010 5:30:00 AM
8/8/2010 5:30:00 AM


By Ilakkuvanar thiruvalluvan
8/8/2010 5:29:00 AM
8/8/2010 5:29:00 AM


By sivaji
8/8/2010 5:16:00 AM
8/8/2010 5:16:00 AM


By Tamilan In Qatar
8/8/2010 2:30:00 AM
8/8/2010 2:30:00 AM


By rangaraj
8/8/2010 2:20:00 AM
8/8/2010 2:20:00 AM


By syed masood பேட்டை கடையநல்லூர்
8/8/2010 2:13:00 AM
8/8/2010 2:13:00 AM

