வியாழன், 12 ஆகஸ்ட், 2010

 
தேசபந்து என்பது சித்தரஞ்சன்தாசு அவர்களைக் குறிக்கும்.பின்னர் வேறு சிலரையும் அவ்வாறு குறித்துள்ளார்கள். தேசபந்து  வின் பெயர் விருதுநகர் திடலுக்குச் சூட்டப்பட்டுள்ளது என்றால் திலகர் பேசியதால் மதுரையில்  உள்ள திடல் ஒன்றிற்குத்திலகர்திடல் எனப் பெயர் சூட்டியது போல் அங்கே அவர் பேசிய வரலாற்றை நினைவு படுத்துவதற்காக இருக்கும். தலைப்பு திடலின் பெயரைத் தமிழ்நாடு என மாற்றம் செய்யச் சொல்லுவதாக உள்ளது. படித்துப் பார்த்தால் தமிழ்நாடு  பெயர் மாற்றப் போராட்டக் களமாக அத்திடல் அமைந்ததைக் குறிப்பிடுகின்றது. எனினும் மணா குறிப்பிடுவது போல் அங்கே அடையாளம் ஒன்று தேவை.  வடவரின் பெயர்களைச் சூட்டுவதில் காட்டும்  ஆர்வத்தை நாம் நம்மவர்கள் பெயரைச் சூட்டுவதில் காட்ட மாட்டோம். நமது அடிமைப் புத்தி அவ்வாறுதான் வேலை செய்கின்றது. எனினும் இத்திடலில் சொற்பொழிவரங்கம் அமைத்து அதற்குச் சங்கரலிங்கனார் பெயர் சூட்ட வேண்டும். வாழும் பொழுதே - மடிந்து கொ்டிருந்த பொழுதே- அவரை மதிக்காத காங்கிரசு அவர் பற்றிக் கவலைப்படாது. எனவே, பிறர் இதற்கு முயல வேண்டும். நல்ல கோரிக்கையைத் தமிழுலகின் முன் ‌வைததுள்ள  மணாவிற்குப் பாராட்டுகள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக