துபை, ஆக. 10: அபு தாபி நகரில் செப்டம்பர் மாதம் முதல் புதியதாக இந்தியப் பள்ளி ஒன்று திறக்கப்பட உள்ளது. பாரதிய வித்யா பவன் பள்ளிகளின் சார்பில் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கவுள்ள தனியார் சர்வதேச ஆங்கிலப் பள்ளியில், மழலையர் கல்வி முதல் நான்காம் வகுப்பு வரை கல்வி கற்றுத் தரப்படும். ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் அபு தாபி பள்ளிகளில் இடம் கிடைக்காமல் இருந்த பிரச்னைக்கு தீர்வு காணும் படி அந்த அரசுக்கு இந்தியத் தூதரகம் கேட்டுக் கொண்டதன் பேரில், இப்பள்ளி திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் அபு தாபியிலுள்ள இந்தியப் பள்ளிகளில் இருந்த குறைந்த எண்ணிக்கையால், மாணவர்கள் கல்வி கற்க முடியாமல் இருந்த பிரச்னை சரி செய்யப்பட்டுள்ளது. இது போல, பஹ்ரைன், தோஹா, துபை மற்றும் ஷார்ஜா ஆகிய நகரங்களில் பாரதிய வித்யா பவன் பள்ளிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கருத்துக்கள்


By Ilakkuvanar Thiruvalluvan
8/12/2010 4:24:00 AM
8/12/2010 4:24:00 AM