சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோவை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் பேசுகிறார் அக்கட்சியின் தலைவரும், முத
சென்னை, அக்.22: பெரியார், அண்ணா தந்த திராவிடக் கொள்கைகளைக் காப்பாற்றுவதற்காகத்தான் தேர்தலில் வெற்றி பெற விரும்புகிறோமே தவிர, நாங்கள் ஆட்சிப் பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல என்று தி.மு.க. தலைவரும், முதல்வருமான கருணாநிதி தெரிவித்தார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக மாவட்ட வாரியாக தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட தி.மு.க.வினருடனான கலந்துரையாடல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியது: இந்த ஆய்வுக் கூட்டம் நிர்வாகிகளைப் பேசச் செய்து வேடிக்கைப் பார்ப்பதற்காக நடைபெறவில்லை. தி.மு.கவை வலுப்படுத்துவதற்காகவே இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது; தேர்தல் ஓட்டுகளுக்காக அல்ல. பெரியாரும், அண்ணாவும் இந்த இயக்கத்தை உருவாக்கி எங்கள் கைகளிலே ஒப்படைத்திருக்கிறார்கள் என்றால், இந்தக் கைகளிலே ஓட்டுகளைப் பெற்று, தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பதற்காக அல்ல. இந்தக் கட்சியின் கொள்கையை விட்டுவிட்டு, லட்சியத்தை விட்டுவிட்டு ஆட்சியிலே உட்கார வேண்டும் என்று நினைக்கும் யாரும் தி.மு.க.வில் இருக்கும் தகுதி படைத்தவர்கள் அல்ல. இந்த லட்சியம் காப்பாற்றப்பட, கொள்கை உறுதிபட இந்த இயக்கத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். அதற்கு இந்த ஆட்சி பயன்படுமேயானால், முடிந்த வரையில் பயன்படுத்திக்கொள்கிறோம். ஒருவேளை ஆட்சிக்கே வர முடியாவிட்டால், தெருவிலே நின்று போராடுவோம். இயக்கத்தை எப்படி நடத்துவது என்பதில் வேறுபாடுகளைப் பொருட்படுத்திக் கொண்டிருந்தால் தி.மு.க. வரும் தேர்தலிலே வெற்றி பெற முடியாது. தி.மு.க.வினுடைய வெற்றியில் திராவிட இயக்கத்தினுடைய கொள்கை வெற்றி இருக்கிறது. பெரியார், அண்ணாவின் கொள்கைகள் தி.மு.க. வெற்றி பெற்றால்தான் நிலைக்கும். இல்லாவிட்டால், அந்த லட்சியங்கள் எல்லாம் பறிபோய்விடும். தி.மு.க. ஆட்சி போய் வேறொரு ஆட்சி வந்தால், அப்படி வருகிற ஆட்சி ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியாக இருந்தால் தமிழகத்திலே மூட நம்பிக்கை படர்ந்துவிடும். தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்று கருதுவதற்குக் காரணம், நாங்கள் ஆட்சிப் பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல. இந்த இயக்கத்தைக் காப்பாற்றினால்தான், இதனுடைய மூலாதாரக் கொள்கைகள் காப்பாற்றப்படும். பெரியார் விழா, அண்ணா நூற்றாண்டு விழா, நூற்றாண்டு நூலகம் ஆகியவை ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தால் நடைபெற்றிருக்க முடியுமா? நாளைக்கு ஒரு வேளை - அது நடக்காது, நடக்கக் கூடாது - தி.மு.க. மாற்றப்பட்டு, அதிமுக ஆட்சிக்கு வந்தால், அந்த நூலகத்தை இடித்து தள்ளமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? அதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோமா? அப்படிப்பட்ட ஒரு நிலை இந்த நாட்டிற்கு, தமிழனுக்கு ஏற்பட வேண்டும் என்று எண்ணலாமா? கோவை தமிழ்ச் செம்மொழி மாநாடு, தஞ்சையில் ராஜராஜ சோழனுக்கு விழா ஆகியவை தி.மு.க. ஆட்சி நடைபெறுவதால்தான் நடைபெற்றன. இந்த ஆட்சி போய்விட்டால், இன்னொரு ஆட்சி வருமேயானால், நிச்சயமாக அண்ணா கனவாகிவிடுவார். பெரியார் கடந்த காலமாகிவிடுவார் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. நாம் ஒன்றுபட்டு செயல்படுவோம் என்றார் கருணாநிதி.
கருத்துக்கள்


By Ilakkuvanar Thiruvalluvan
10/23/2010 4:15:00 AM
10/23/2010 4:15:00 AM

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் (தொடர்ச்சி 2/2 காண்க)

By Ilakkuvanar Thiruvalluvan
10/23/2010 4:14:00 AM
10/23/2010 4:14:00 AM


By Ilakkuvanar Thiruvalluvan
10/23/2010 4:11:00 AM
10/23/2010 4:11:00 AM


By Anbu
10/23/2010 4:07:00 AM
10/23/2010 4:07:00 AM


By Appan
10/23/2010 4:01:00 AM
10/23/2010 4:01:00 AM


By PA Valarmathi
10/23/2010 3:18:00 AM
10/23/2010 3:18:00 AM


By tamilatchi
10/23/2010 2:39:00 AM
10/23/2010 2:39:00 AM


By PA Valarmathi
10/23/2010 2:29:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 10/23/2010 2:29:00 AM