சென்னை, அக். 21: தமிழகத்தின் அடுத்த முதல்வர் நான்தான் என அறிவிக்க துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தயாரா? என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பினார். விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள் தே.மு.தி.க.வில் இணையும் நிகழ்ச்சி சென்னையில் வியாழக்கிழமை விஜயகாந்த் தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசியது: கட்சி ஆரம்பித்தவுடன் விஜயகாந்த் முதல்வராக நினைக்கிறார் என்று துணை முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். ஆம், தமிழகத்தின் அடுத்த முதல்வராக வேண்டும் என்று நான் நினைப்பது உண்மைதான். ஆனால் ஸ்டாலினோ அல்லது மு.க.அழகிரியோ தாங்கள்தான் அடுத்த முதல்வர் என்று அறிவிக்கத் தயாரா? காங்கிரஸ் கட்சியே தமிழகத்தில் இருக்கக் கூடாது என்று 1967-ல் அண்ணா விரட்டினார். இன்றோ கருணாநிதி, காங்கிரஸýடன் கூட்டணி வைத்துக் கொண்டு ஆட்சி நடத்தி வருகிறார். காமன்வெல்த் போட்டி நடத்தியதில் சுரேஷ் கல்மாதி மீது 1000 கோடி ரூபாய் ஊழல், ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடத்தியதில் லலித்மோடி மீது 470 கோடி ஊழல் என விசாரணை நடத்தப்படுகிறது. ஆனால் தொலைத் தொடர்பு துறையில் 1.5 லட்சம் கோடி ஊழல் புரிந்ததாகக் கூறப்படும் ஆ. ராசாவின் மீது ஏன் விசாரணை இல்லை? என்றார். இந்த நிகழ்ச்சியில் தேமுதிக அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், விழுப்புரம் மாவட்டத் தலைவர் எல். வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/22/2010 4:52:00 AM
10/22/2010 4:52:00 AM


By deva
10/22/2010 4:43:00 AM
10/22/2010 4:43:00 AM


By மணிமாறன்
10/22/2010 4:35:00 AM
10/22/2010 4:35:00 AM


By வச்சா குடுமி
10/22/2010 3:37:00 AM
10/22/2010 3:37:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *