சிதம்பரம், அக். 21: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று காங்கிரûஸ விமர்சித்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் கூறினார்.முன்னாள் எம்பி ப.வள்ளல்பெருமானின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சிதம்பரம் வந்த கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வாரப்பத்திரிகை ஒன்றில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை விமர்சித்தும், தமிழக முதல்வருக்கு பல ஆலோசனைகளையும் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி உதவியுடன் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற அவர், இது போல கூறியது என்னாலும், எந்த ஒரு காங்கிரஸ் தொண்டனாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.எனவே உடனே அவர் தனது எம்பி பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். 125 ஆண்டு கால காங்கிரஸ் கட்சியை குறை சொல்ல அவருக்கு தகுதி கிடையாது. காங்கிரஸ் கட்சிக்கென்று ஒரு தனித்துவம் உண்டு. தமிழகத்தில் கூட்டணி குறித்து சோனியாகாந்திதான் முடிவு செய்வார்.மாநில அரசு திட்டங்கள் அனைத்துக்கும் மத்திய அரசுக்கு பங்கு உண்டு. மத்திய அரசால் எந்த திட்டங்களையும் மாநிலத்தில் நேரடியாக செயல்படுத்த இயலாது. தமிழகத்தில் தற்போது ஜேஎன்என் திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதிஉதவியுடன் 600 புதிய பஸ்கள் விடப்பட்டுள்ளது என்றார்.
கருத்துக்கள்

கோட்டையுமான காங். கட்சியில்
இருந்துகொண்டு ஓயாது பொய் சொன்னாலும் அதன் ஊழல் கறையை மறைக்க முடியாது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/22/2010 4:43:00 AM
10/22/2010 4:43:00 AM


By KOOPU
10/22/2010 4:12:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *10/22/2010 4:12:00 AM