திருப்பதி,அக்.15: வேதங்கள் ஓதுகின்ற இடம் எல்லா வளமும் பெற்றிருக்கும் என்று ஆந்திர முதல்வர் ரோசய்யா தெரிவித்தார். திருமலை திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தில் வெள்ளிக்கிழமை கலந்து கொண்டு முதல்வர் ரோசய்யா ஏழுமலையானை தரிசித்தார். பின்னர் வசந்த மண்டபத்தில் நித்ய வேதபாராயணம் என்ற வேதங்கள் ஓதும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியது: வேதங்கள் மிகவும் புனிதமானவை; அவை ஓதிக்கொண்டிருக்கின்ற பகுதிகளும், அங்கு வாழும் மக்களும் எல்லா வளங்களும் பெறுவர். தற்போதுள்ள சூழ்நிலையில் இது போன்ற கலாசார நிகழ்வுகள் மிகவும் அரிதாகிவிட்டன. திருமலை நிர்வாகம் இத்தகைய புனிதமான காரியங்களை தொடர்ந்து செய்ய வேண்டும். இவ்வாறு முதல்வர் ரோசய்யா கூறினார். இதில் கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெலுங்கு மொழியில் அச்சிடப்பட்ட வேத புத்தகங்கள் முதல்வருக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கல்லா அருணாகுமாரி, ராமச்சந்திரா ரெட்டி,வெங்கட்ட ரெட்டி மற்றும் திருமலை கோயில் நிர்வாகத்தின் சிறப்பு அதிகாரக்குழு தவைவர் சத்தியநாராயணா,முதன்மை செயல் அலுவலர் கிருஷ்ணா ராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்


By Ilakkuvanar Thiruvalluvan
10/17/2010 4:28:00 AM
10/17/2010 4:28:00 AM


By cop
10/17/2010 2:32:00 AM
10/17/2010 2:32:00 AM


By KAVI
10/17/2010 12:51:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 10/17/2010 12:51:00 AM