வியாழன், 21 அக்டோபர், 2010

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு உள்துறை அமைச்சகம் எதிர்ப்பு

உதகை, அக். 20: நாடு கடந்த தமிழீழ அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தடை நீட்டிப்பு குறித்து, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு நடுவர் மன்றத்தின் 3வது அமர்வுக் கூட்டம் உதகையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பேசிய உள்துறை அமைச்சகத்தின் உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவு இயக்குநர் பி.கே.மிஸ்ரா நாடு கடந்த தமிழீழ அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். இந்த அமர்வில் மதிமுக பொதுச் செயலர் வைகோ, உலகத் தமிழர் பேரவை நிறுவனர் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.  1992-ல் விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பின்னர், மத்திய அரசு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தடையை நீட்டித்து வருகிறது. கடந்த மே 14-ல் இத்தடை நீட்டிக்கப்பட்டு அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இந்த உத்தரவு சரியா, தவறா என்பதை விசாரிக்க தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் சென் தலைமையில் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மன்றத்தின் முதல் அமர்வு தில்லியிலும், 2வது அமர்வு சென்னையிலும் நடைபெற்றது. தொடர்ந்து உதகையில் 3வது அமர்வு புதன்கிழமை நடைபெற்றது. இந்த அமர்வில் உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவு இயக்குநர் பி.கே.மிஸ்ரா வாதிடுகையில், 2008ம் ஆண்டுக்குப் பிறகு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக சிலர் பிரச்னைகளை எழுப்புவதாகவும், இது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்பதோடு, உள்நாட்டுப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளதென தெரிவித்தார். அத்துடன் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசில் உறுப்பினர்களாக உள்ள 115 பேரில் பலருக்கு விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்பு உள்ளதாகவும், இந்தியாவில் மாவோ தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளதாகவும் குறிப்பிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ வாதிடுகையில், நாடு கடந்த தமிழீழ அரசை அமெரிக்காவில் பிலடெல்பியா மாகாணத்தில் நிறுவியபோது அதற்கு அமெரிக்க அரசும், காவல்துறையும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதை குறிப்பிட்டார். அதேபோல, நெடுமாறனின் சார்பில் வழக்கறிஞர் சந்திரசேகர் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நடுவர் மன்றத் தலைவர் விக்ரமஜித் சென், இத்தகைய பிரச்னைகள் குறித்து அடுத்த அமர்வில் விவாதிக்கலாம் எனக் கூறி கூட்டத்தை முடித்தார். திருவள்ளூரில் தொலைந்த பஸ் திருத்தணியில் மீட்புதிருவள்ளூர், அக். 20:  திருவள்ளூர் அருகே செவ்வாய்க்கிழமை இரவு தொலைந்த தனியார் கம்பெனிக்குச் சொந்தமான பஸ்சை திருத்தணி அருகே போலீஸôர் மீட்டனர்.திருவள்ளூரை அடுத்த காக்களூரைச் சேர்ந்தவர் ஏகாம்பரத்தின் மகன் கஜேந்திரன் (50). இவர் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். செவ்வாய்க்கிழமை மாலை கம்பெனி பஸ்சில் காக்களூர் வந்து அங்குள்ள எடை மேடை அருகே நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றார். இரவு 11 மணியளவில் கம்பெனிக்குச் செல்வதற்காக பஸ்சை எடுக்க வந்தபோது நிறுத்தப்பட்ட இடத்தில் பஸ்சை காணவில்லை. இதையடுத்து மர்ம நபர்கள் பஸ்சை திருடிச் சென்றதாக திருவள்ளூர் தாலுகா போலீஸில் கஜேந்திரன் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸôர் மாவட்ட எல்லைப்பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் அனுப்பி தீவிர வாகன சோதனை நடத்தினர். இந்நிலையில் திருத்தணியை அடுத்த வள்ளியம்மாபேட்டை அருகே தனியாக ஒரு பஸ் நிற்பதாக போலீஸôருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸôர் அங்கு சென்று பார்த்த போது திருவள்ளூரில் தொலைந்த பஸ் அதுதான் என தெரியவந்தது. பஸ்சை திருடிய நபர்கள் டீசல் காலியாகிவிட்டதால் அங்கேயே நிறுத்திச் சென்றிருக்கலாம் என போலீஸôரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பஸ்சை மீட்டு கஜேந்திரனிடம் ஒப்படைத்தனர்.
கருத்துக்கள்

இந்திய அரசின் முதலாளியான சிங்கள அரசு நாடுகடந்த தமிழீழ அரசிற்கு எதிர்ப்பு தெரிவிக்கையில் அடிமைகளும் அவ்வாறுதானே எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். ஆகவே, அதிகாரிகள் தங்கள் கடமையை ஆற்றுகிறார்கள். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/21/2010 3:02:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக