சென்னை, அக்.15: மதுரையில் அதிமுகவினர் கூட்டம் நடத்தி முடிக்கிற வரையில், திமுகவினர் அமைதி காக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: எதிர்க்கட்சித் தலைவர் (ஜெயலலிதா) மதுரையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேச இருக்கிறார். அங்கே தி.மு.க.வினர் அந்தக் கூட்டத்தைக் கலைக்கவும்,அவருக்கு ஆபத்து விளைவிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும், அதனை எச்சரிக்கையாக்கி ஏராளமான சுவரொட்டிகளை நகரெங்கும் ஒட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்கு எதிரான சுவரொட்டிகள் அ.தி.மு.க.வினரால் ஆங்காங்கே ஆயிரக்கணக்கில் ஒட்டப்பட்டிருக்கிறதாம். இந்த இரண்டுமே அரசியல் நாகரிகத்துக்கு அடியோடு எதிர்ப்பான செயலாகும். இதன்காரணமாக, இரு சாராரிடையே மோதல் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக காவல் துறையினர் விழிப்புடன் இருந்து வருகின்றனர். மோதல் ஏற்படுவதற்கான தடயம் இருக்கக்கூடாது. அவ்வாறு மோதல் ஏற்படுத்தும் வகையிலான தடயங்களை ஆளுங்கட்சியினரோ, எதிர்க்கட்சியினரோ யார் ஏற்படுத்தினாலும் ஒரே விதமான குற்றச்சாட்டுக்கும், தண்டனைக்கும் ஆளாவார்கள். இந்த நிலைப்பாட்டுடன், சட்டப்படி நடவடிக்கை எடுக்க இந்த அரசு தயங்காமல் செயல்பட்டு வருகிறது. இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் இருக்கின்ற ஆத்திரக்காரர்கள் எவராயினும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும், நகரின், நாட்டின் அமைதி காப்பதும் அரசுக்கு இலக்கணம் ஆகும். இது அரசுக்கு மாத்திரமல்ல, எதிர்க்கட்சிக்கும் மற்றும் எல்லா கட்சிகளுக்கும் உரிய நடுநிலை இலக்கணம் ஆகும். மதுரையிலே ஏதாவது சம்பவம் நடக்கக்கூடும் என்றும், அதைத் தடுக்க சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று அதிமுக கோரியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால், சி.பி.ஐ. நடவடிக்கை எடுப்பதற்குள்ளாகவே, காவல் துறையை சிலர் குற்றம் சொல்லியும், குறை கூறியும், திமுக அரசு மீது வீண் பழி சுமத்தியும் வருகின்றனர். அதற்கு பக்கபலமாக சில கட்சியினரை இணைத்துக் கொண்டு, ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்றால் அதன் பொருள்தான் என்ன? இப்படிப்பட்ட பிரசாரங்களால் பெருங்கூட்டம் சேர்க்க வேண்டிய நிலையில் எதிர்க்கட்சி இல்லை. அதன் வலிவும், மக்கள் ஆதரவும் எவ்வளவு என்பதும் நமக்கு தெரிந்திருப்பதைப் போலவே, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். இதற்கிடையே நம் மீது ஓர் பழியைச் சுமத்துவதன் மூலம் அவர்கள் பெறப் போகும் பயன் என்ன? எதிர்க்கட்சியினர் வன்முறை, வன்முறை என்று எச்சரிக்கைக் கூச்சல் போடுவது ஒருவேளை, இவர்களின் வன்முறை ஆயுதத்தை நம் மீது வீசுவதற்குத் தானோ என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை. எனவே, மதுரையிலே அவர்களின் (அதிமுக) கூட்டம் நடந்து முடிக்கிற வரையில், ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டுகிற அஹிம்சாவாதியாக (திமுகவினர்) இருக்க வேண்டும் என்று முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/17/2010 3:56:00 AM
10/17/2010 3:56:00 AM


By Boomi
10/16/2010 5:01:00 PM
10/16/2010 5:01:00 PM


By Indian
10/16/2010 2:11:00 PM
10/16/2010 2:11:00 PM


By Indian
10/16/2010 2:07:00 PM
10/16/2010 2:07:00 PM


By KADOTHKAJAN
10/16/2010 11:34:00 AM
10/16/2010 11:34:00 AM


By rajasji
10/16/2010 9:33:00 AM
10/16/2010 9:33:00 AM


By John Christopher
10/16/2010 8:42:00 AM
10/16/2010 8:42:00 AM


By VIJAYASARABESWARAN
10/16/2010 6:25:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 10/16/2010 6:25:00 AM