சென்னை, அக். 15: தென்னாப்பிரிக்காவில் தமிழை வளர்க்க ஆசிரியர்கள் தேவை என்று 150 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நாட்டுக்குச் சென்ற தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்னாப்பிரிக்காவுக்கு 150 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளையர்களால் குடியமர்த்தப்பட்ட இந்தியர்கள் ஆந்திரம், தமிழகம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட 50 பேர் கொண்ட குழுவாக இந்தியா வந்துள்ளனர். அந்தக் குழுவின் தலைவர் லாசர் பிள்ளை சென்னையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: இந்தியாவில் தமிழகம், ஆந்திரம், மகராஷ்டிரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கடந்த 1860-ம் ஆண்டு கரும்புத் தோட்ட வேலைக்காக தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர்களால் குடியமர்த்தப்பட்டனர். இவ்வாறாக தென்னாப்பிரிக்காவில் குடியேறி 150 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு விழா எடுத்துள்ளோம். அந்த விழா தென்னாப்பிரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 21-ம் தேதி மோசர் மபிதா என்ற இடத்தில் நடைபெற உள்ளது. இப்போது தென்னாப்பிரிக்காவில் 15 லட்சம் இந்திய வம்சாவழியினர் வாழ்ந்து வருகிறோம். இதில் தமிழ் வம்சாவழியினர் மட்டும் சுமார் 10 லட்சம் பேர். இப்போது 3 மற்றும் 4-ம் தலைமுறையினர் வாழ்ந்து வருகிறோம். எனவே 150-ம் ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக 50 பேர் கொண்ட குழுவினர் இந்தியா வந்துள்ளோம். முதலில் ஆந்திரம் சென்ற நாங்கள் ஹைதராபாதில் முதல்வர் ரோசய்யாவை சந்தித்தோம். மொழி மற்றும் கலாசாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி கூறியுள்ளார். ஆந்திர பயணத்தை முடித்துக் கொண்ட நாங்கள் வெள்ளிக்கிழமை தமிழகம் வந்தோம். தமிழக முதல்வர் கருணாநிதியை சந்திக்க முடிவு செய்துள்ளோம். தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பேசினால் நாங்கள் புரிந்து கொள்வோம். ஆனால் அதை எழுதவோ, படிக்கவோ தெரியாது. எங்களது குழந்தைகளுக்கு தமிழை கற்றுக் கொள்ளும் ஆர்வம் குறைந்து விட்டது. எங்களது தலைமுறையினர் தமிழை கற்க தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்றார்.
கருத்துக்கள்


By Ilakkuvanar Thiruvalluvan
10/17/2010 3:40:00 AM
10/17/2010 3:40:00 AM


By Ilakkuvanar Thiruvalluvan
10/17/2010 3:35:00 AM
10/17/2010 3:35:00 AM


By Ilakkuvanar Thiruvalluvan
10/17/2010 3:35:00 AM
10/17/2010 3:35:00 AM


By Ilakkuvanar Thiruvalluvan
10/17/2010 3:34:00 AM
10/17/2010 3:34:00 AM


By Ilakkuvanar Thiruvalluvan
10/17/2010 3:34:00 AM
10/17/2010 3:34:00 AM


By tamil tai
10/17/2010 1:38:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 10/17/2010 1:38:00 AM
இலக்குவனார் திருவள்ளுவன் அடுக்கடுக்காகத்
தெரிவித்துள்ளதைப் பார்க்கும் பொழுது தமிழ் மீது எந்த அரசியல்வாதிக்கும் அக்கறை இல்லை என்பது புரிகிறது. தென் ஆப்பிரிக்காவிலேயே தமிழ்க்கல்விக்கான பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கத் தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் முயல வேண்டும்.

By thamizhan
10/17/2010 9:01:00 AM
10/17/2010 9:01:00 AM