சென்னை, அக்.15: தமிழக அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கிட முதல்வர் கருணாநிதி ஆணை பிறப்பித்துள்ளார். "தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்களில் 2006 முதல் எந்த நிலையிலும் கட்டணம் உயர்த்தப்படவில்லை; போக்குவரத்துக் கழகங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளாக அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸýம், 11.67 சதவீத ஊக்கத் தொகையும் அரசால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில், இந்த ஆண்டும் 1 லட்சத்து 27 ஆயிரத்து 714 நிரந்தரத் தொழிலாளர்களுக்கு 8.33 சதவீத போனஸýம், 11.67 சதவீத ஊக்கத் தொகையும் வழங்கிட முதல்வர் கருணாநிதி உத்தரவு பிறப்பித்துள்ளார். 17 ஆயிரத்து 779 பதிலிப் பணியாளர்களுக்கு கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் போனஸ் வழங்கிடவும் ஆணையிடப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு ரூ. 99 கோடியே 54 லட்சம் செலவாகும்' என்று அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/17/2010 4:48:00 PM
10/17/2010 4:48:00 PM


By SARVESWARAN
10/16/2010 1:53:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *10/16/2010 1:53:00 PM