சென்னை, அக்.20: தமிழக அரசியல் நிலவரம் குறித்து முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக உயர்நிலைக் குழுவினர் அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆய்வு செய்தனர்.கருணாநிதி, அவரது மகன்கள் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி மற்றும் அன்பழகன் உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ராமநாதபுர மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.இதைத் தொடர்ந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, கோவை மற்றும் தென்சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் அக்டோபர் 22, 28 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் திமுக உயர்நிலைக் குழுவினர் ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. அதற்கு கட்சியினரை தயார்படுத்தும் வகையில் இந்த கூட்டங்கள் நடத்தப்படுவதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துக்கள்

செயல்படத்திட்டம் தீட்டுவீர்களாக! தமிழினப்
படுகொலையில் பாராமுகமாக இருந்ததைத்
தொண்டர்கள் கண்டிப்பீர்களாக!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.

By Ilakkuvanar Thiruvalluvan
10/21/2010 2:47:00 AM
10/21/2010 2:47:00 AM


By John Christopher
10/20/2010 10:50:00 PM
10/20/2010 10:50:00 PM


By Palanival
10/20/2010 3:55:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 10/20/2010 3:55:00 PM