ஈழ மண்ணின் தற்போதைய கோலம்



இதை கண்டு கொள்வார் யாரோ? தமிழ்மக்களின் ஆமோக ஆதரவுடன் பதவிக்கு வந்த தமிழ்தேசியக் கூட்டமைப்பு எம்பி மார்களா? அல்லது அரச சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் தமிழ் அமைச்சர்களே இந்த அநியாயத்தையும் தட்டிக் கேட்க முடியாமலாமா? உங்கள் நாற்காலிகளை அலங்கரிக்கிறீர்கள்? குறைந்தது புலம்பெயர்ந்த தமிழராவது இதைக் கண்டு வெகுண்டெழுந்து உங்கள் ஊடகங்களின் ஊடாக மக்கள் மனங்களிலும், பதிவுகளிலும் ஆவணப்படுத்துவோம்.
இப்படியான புதிய பல பெயர் பலகைகள் அங்கு முளை விட்டுள்ளது. ஆனால் பாதுகாப்புப் படையினரின் காவல் அரண்கள் அருகில் இருப்பதனால் படப்பிடிப்பாளர் தனது பாதுகாப்புக கருதி அவ்விடங்களை, படம்பிடித்துக் கொண்டு வரவில்லை.
3வது படம் 2009 மே அவலத்தின் பின்னர் தென்னிலங்கை வாசிகளின் முக்கிய தரிசிப்பு இடங்களில் ஒன்றாக இன்றுவரை உள்ள எம் தேசியத்தலைவர் மேதகு வே.பிராபாகரன் சிறு பராயத்தில் வளர்ந்த, அவரது குடும்பத்து வல்வெட்டித்துறை இல்லத்தின் தற்போதய பாழடைந்து சீரழிந்து போயிருக்கும் காட்சியே(தூரத்திலிருந்து பாதுகாப்பு படையினருக்கு தெரியாமல் படம்பிடிக்கப்பட்டது.) காண்கிறீர்கள்.
இந்த இல்லம் கடந்த ஆண்டு சிறிலங்கா படையினரின் புல்டோசர்களினால் தரைமட்டமாக்கப்பட்டு, இப்பொழுது இவ் இல்லத்திற்குள் செல்வதோ அல்லது படம்பிடிக்கப்படுவதோ படையினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 24 மணி நேரமும் குறைந்தது 2 படையினரால் கொடர்ந்து காவல் காக்கப்பட்டு வருகிறது. அதைமீறியும் ஊடக நண்பர் படம் பிடித்துக் கொண்டுவந்த படத்தையே உங்கள் முன் சமர்பிக்கின்றோம்.
} 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக