வாஷிங்டன், அக். 19: விடுதலைப் புலிகளுக்காக ஆயுதங்களை கொள்முதல் செய்ய முயற்சித்ததாக இந்தியாவை பூர்விகமாக கொண்ட சிங்கப்பூர் நாட்டவர் மீது சுமத்தப்பட்ட புகார் நிரூபணமானது. அவருக்கான தண்டனையை நிர்ணயிப்பது தொடர்பான விசாரணை வரும் டிசம்பர் 16ம் தேதி நடைபெறும். தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆயுதம் கொள்முதல் செய்ய முயற்சித்ததால் 2006 பிப்ரவரியில் பால்டிமோர் மாவட்ட நீதிபதி கேத்தரின் பிளேக் முன்னிலையில் 5 நாள் விசாரணை நடந்தது. அப்போது கிடைத்த ஆதாரங்கள்படி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட பல்ராஜ் நாயுடு மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேர் சீனா, தாய்லாந்து, வட கொரியா, பிலிப்பின்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலிருந்து இலங்கை அரசுக்கு எதிராக போரிட உதவும் வகையில் ஆயுதங்களை கொள்முதல் செய்ய முயற்சித்தது தெரியவந்தது. அவர்கள் வாங்கிய ஆயுதங்கள் விடுதலைப் புலிகளுக்கு என தெரிய வந்ததும் அந்த பேரத்தில் ஆயுத வியாபாரிகள் ஈடுபாடு காட்டவில்லை. இந்நிலையில், 2006 ஏப்ரலில் நாயுடுவுக்கு தெரிந்த இந்தோனேசிய வட்டாரங்கள் அமெரிக்காவில் உள்ள மேரிலாந்தில் ரகசியமாக செயல்படும் ஆயுத வர்த்தக ஏஜெண்ட் ஒருவருக்கு நாயுடுவை, அவரது கூட்டாளிகளையும் அறிமுகம் செய்துவைத்தனர். இதைத் தொடர்ந்து நடந்த பேரத்தில் அமெரிக்க ஆயுதங்களை கொள்முதல் செய்து கொடுக்கும்படி நாயுடுவும் கூட்டாளிகளும் அந்த ஏஜெண்டை வற்புறுத்தி வந்துள்ளனர். இதற்காக பணமும் கைமாறியது. ஆயுதங்களை இலங்கை கடல் எல்லைக்கு அருகே ஒப்படைத்தால் அவற்றை கடற்புலிகள் வாங்கிக்கொள்வார்கள் எனவும் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. மேலும், நாயுடுவின் ஒரு கூட்டாளியான ஹனிபா பின் உஸ்மான் என்பவர் பால்டிமோருக்கு 2006ல் சென்று ஆயுதங்களை பார்வையிட்டதுடன் அவற்றை சோதித்தும் பார்த்துள்ளார். அவரது பயணத்தை அடுத்து விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து ஆயுத விற்பனை ஏஜெண்ட் கணக்குக்கு இரண்டரை லட்சம் டாலர் சேர்க்கப்பட்டுள்ளது. ஆயுத பேரத்தின் மொத்த மதிப்பு 9 லட்சம் டாலர்கள். 28 டன் ஆயுதங்கள், வெடி பொருள்களை விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் கொள்முதல் செய்துள்ளனர். அது குவாம் என்ற பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2006 செப்டம்பர் 29ல் அந்த ஆயுதங்களை சோதனையிட்ட பிறகு கூடுதலாக நாலரை லட்சம் டாலர் பணம் ரகசிய ஆயுத ஏஜெண்ட் கணக்கில் புலிகள் தரப்பிலிருந்து செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாயுடுவின் கூட்டாளிகள் பின் உஸ்மான், ஹாஜி சுபந்தி, எரிக் ஒடுலோ, திருநாவுக்கரசு வரதராசா ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. விசாரணை தொடர்ந்த நிலையில் நாயுடு மற்றும், விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவி செய்பவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது என நீதித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. திருநாவுக்கரசு வரதராசா (40) இலங்கையைச் சேர்ந்தவர். ஹாஜி சுபந்தி (73), இந்தோனேசிய கடற்படை முன்னால் ஜெனரல் எரிக் ஒடுலோ (62) ஆகியோர் இந்தோனேசிய நாட்டவர்கள். ஹனிபா பின் உஸ்மான் (59) சிங்கப்பூரைச் சேர்ந்தவர். இவர்கள் அனைவரும் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டனர். அவர்களுக்கு தவறுக்கு ஏற்ப 5 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆயுதக் கொள்முதல் முயற்சி தொடர்பான வழக்கில் நாயுடுவுக்கு (48)15 ஆண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துக்கள்


By Ilakkuvanar Thiruvalluvan
10/20/2010 3:40:00 AM
10/20/2010 3:40:00 AM


By ASS HOLE AMERICANS
10/19/2010 7:15:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 10/19/2010 7:15:00 PM