புதுதில்லி, அக்.22- திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு தில்லியில் உள்ள மத்திய அரசு பல்கலைக்கழகமான ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கு வெளியுறவு அமைச்சகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.தற்போது அவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவது சீனாவுடனான உறவில் சிக்கல் ஏற்படுத்தலாம் என்ற கருத்தின் அடிப்படையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.தலாய் லாமாவுக்கு ஏற்கெனவே, பல சர்வதேச கல்வி நிறுவனங்கள் சார்பில் 10க்கும் மேற்பட்ட கெளரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், இந்தியாவில் உயர்கல்வி நிறுவனம் ஒன்று அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க முன்வந்துள்ளது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த முடிவு குறித்து கடந்த மாதம் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் சார்பில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், அக்கடிதம் பின்னர் வெளியுறவு அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.இந்நிலையில், டாக்டர் பட்டம் வழங்கும் முடிவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, "தலாய் லாமா மீதான நமது மதிப்பும், மரியாதையும் என்றும் மாறாதது." என்றும் மத்திய அரசின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
கருத்துக்கள்
இராசபக்சேவிற்குப் பட்டம் வழங்குவதாக இருந்தால் உடனே சரி என்று சொல்லி இருப்பார்கள். திபேத்தியருக்கு எலலாச் சலுகைகளும் அளித்துக் கொண்டு தலாய்இலாமாவிற்குச் சீனாவை மீறி உரிய தகுதியையும் மதிப்பையும் அளித்துக் கொண்டு சீனாவின் நல்லுறவு பாதிக்கப்படும் என்பதற்காக மறுப்பதாகக் கூறுவது கட்டு்க்கதை . இந்த ஏமாற்றுவேலையைப் புரிந்து கொள்ளாதிருக்க சீனா ஒன்றும் இந்தியா இல்லை.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/22/2010 6:14:00 PM
10/22/2010 6:14:00 PM
It is correct raju. Thalai should be honoured just only for his courage.
By b.yani
10/22/2010 4:21:00 PM
10/22/2010 4:21:00 PM
பாகிஸ்த்தானைவிட நமக்கு அதிம் தொந்தரவு தருவது சீனா என்பது நம் அனைவருக்கும் தெரியும். டாக்டர் பட்டம் வழங்கவில்லையெனில், சீனா நம்மை நன்றியுடன் பார்க்கபோவதில்லை. யாருக்கு பட்டம் வழங்குவது/கூடாது என்பது நமது உள் நாட்டு விவகாரம். ஆட்சியாளர்கள் தைரியத்துடன் முடிவேடுக்கவேண்டும்.
By தஞ்சை ராஜு
10/22/2010 3:47:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *10/22/2010 3:47:00 PM