மகிந்தவுக்கு ஆப்புவைத்த அமெரிக்க தமிழ் வழக்கறிஞர்.
21 October, 2010 by adminநாட்டை இணைத்த நல்ல ஜனாதிபதி என ஆரம்பித்த வரவேற்புரை, சிறிது சிறித்தாக போரையும், தமிழர்கள் படும் அவஸ்தையையும் விவரித்தன. அமெரிக்கர்களும், வேற்றின மக்கள் பலரும் கலந்துகொண்ட இன் நிகழ்வில், அவர் உரையை நிறுத்தமுடியாமல் ஏற்பாட்டாளர்கள் திண்டாடியதாக அறியப்படுகிறது. அவரை மேடைக்கு அழைக்கும்போது, ஒரு சில வார்த்தைகள் பேசுமாறு அழைக்கிறோம் என்று கூறி அழைத்திருந்தார்கள் ஏற்பாட்டாளர்கள். இருப்பினும் வரவேற்புரையை ஜோர்ஜ் வில்லி நீண்டநேரமாக உரையாற்றி தான் சொல்லவந்த அனைத்தையும் சொல்லிவிட்டுத் தான் சென்றுள்ளார்.
ஒரு கட்டத்தில், துட்டகைமுணுவுக்கு ஒப்பாக ஜனாதிபதியை ஒப்பிட்ட ஜோர்ஜ் வில்லி, துட்டகைமுணு, எல்லாளனை போரில் வென்றாலும் பலமான எதிரியை வீழ்த்தியமைக்காவும், எல்லாளன் வீரத்தைப் பாராட்டியும் அவருக்கு நினைவுச் சின்னம் அமைத்ததையும் நினைவு கூர்ந்தார், ஒரு கணம் எங்கே இவர் விடுதலைப் புலிகளுக்கு நினைவுச் சின்னம் அமைக்கச் சொல்லிவிடுவாரோ என பலர் திகைப்பில் இருந்தாகவும் சொல்லப்படுகிறது. 1958ம் ஆண்டு கலவரம், பல்கலைக்கழகத்தில் தமிழர்களுக்கு சம ஒதுக்கீடு என பல உதாரணங்களைச் சுட்டிக்காட்டி, ஜனாதிபதையை மிகுந்த சங்கடத்தில் இவர் ஆழ்த்தியதை எவராலும் மறுக்கமுடியாது.
மேடையில் அமர்ந்திருந்த ஜனாதிபதி விழா ஏற்ப்பாட்டாளரை அடிக்கடி உத்துப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தார். கடைசியாக இனி பள்ளி செல்லும் தமிழ் மாணவர்களின் வெள்ளைச் சட்டையில் இரத்தம் படியக்கூடாது, நீங்கள் ஒரு பிரபாகரனை வென்றிருக்கலாம், ஆனால் அது போல பலர் தோன்றலாம், அவர்கள் அவ்வாறு தோன்றுவதும் தோன்றாமல் இருப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது என அவர் பேசிமுடிக்க , என்ன நடந்தது என சற்றும் புரியாமல், அமெரிக்கர்களும், வேற்றின மக்களும் எழுந்து நின்று கைதட்டியதே மிகக் கொடுமையான விடையமாக ஜனாதிபதிக்கு இருந்தது. அசடுவழியும் முகத்தை ஒருவாறு சீர்திருத்திக்கொண்டு, மற்றைய நிகழ்ச்சிகளுக்கு நகர்ந்தார் ஜனாதிபதி. இருந்தாலும் அவர் இந்த அவமானத்தை இலகுவில் மறக்கப்போவது இல்லை.
விழா முடிவில் யாரை எல்லாம் திட்டித் தீர்த்தாரோ தெரியவில்லை. ஒட்டுமொத்தத்தில் அமெரிக்கா அவருக்கு பல அவமரியாதைகளை கொடுத்த நாடாக அமைந்துவிட்டது.... முழத்திற்கு முழம் தனது உரையில் "யுவர் எக்சலன்ஸி"( மாண்புமிகு) "யுவர் எக்சலன்ஸி" your excellency என்று ஜோர்ஜ் வில்லி கதைத்ததால், மகிந்த அவர் என்ன கதைக்கிறார் என்பதைக் கூட விரைவாக சுதாரித்துக்கொள்ளவில்லை !
அமெரிக்க செனட்டர், ஜனாதிபதி மகிந்த, புத்திஜீவிகள், கல்விமான்கள், வேற்றின மக்கள் என பலர் கலந்துகொண்ட இவ் விழாவில் மிகத் துணிச்சலாக தனது கருத்துக்களை வெளிப்படுத்திய ஜோர்ஜ் வில்லி அவர்களை நாம் பாராட்டாமல் இருக்கவே முடியாது. இதைத் தான் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல என்பார்களோ ????
Send To Friend | செய்தியை வாசித்தோர்: 2121
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக