கொழும்பு, நவ.28- இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர் ஒருவரை போட்டியிடச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிபர் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்று இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், வடக்கு கிழக்கு பகுதி தமிழர்களின் பிரதிநிதியாக ஒருவரைப் போட்டியிடச் செய்ய இக்கூட்டமைப்பும் மற்றும் சில தமிழர் அமைப்புகளும் முயற்சி எடுத்து வருவதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், இடதுசாரி முன்னணி சார்பில் அதன் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்னா போட்டியிடவுள்ளதாக அந்த இணையதளங்கள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பாக அதிபர் ராஜபட்சவும், ஜே.வி.பி. சார்பாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவும் போட்டியிடவுள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிங்கள அரசியல் சட்டப்படி தமிழர் யாரும் அதிபர் தேர்தலில் நிற்க முடியாதே! ஒரு வேளை தமிழ்ப் புத்தன் எனக் கூறித் தமிழினத் துரோகி ஒருவனை நிற்க வைக்க இந்தியா சதி தீட்டுகிறதோ! தமிழன் என்ற பெயரில் தமிழினத் துரோகி வாக்கு பெற்றதும் அதனை இனப்போராளிகளுக்கு எதிரான வாக்காகக் காட்டலாம் அல்லவா? எத்தனை நாடகம் அரங்கேறினால்தான் என்ன? தமிழ் ஈழம் தன் தனித்தன்மையைப் பெறும் வரையில் ஈழத் தமிழர்களுக்கு விடிவு ஏது? மலர்ச்சி ஏது? வளர்ச்சி ஏது? வாழ்வுதான் ஏது?
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
11/29/2009 4:10:00 AM
Hi ELLALAN , உனக்கு எத்தனைமுறை சொன்னாலும் அறிவில்லையே. செய்திப்பகுதியில் உனது கோமாளித்தனமான 420 வெப்சைட்டை விளம்பரம் செய்யாதே!
11/29/2009 3:23:00 AM
**மாவீரர் நாள் 27-11-2009 **ரகுவீரனின் - பாகம் 20: பெரும்பான்மை தமிழினம் சிறுபான்மையானது! **2. வெள்ளை யானை சாபந்தீர்த்த படலம் **இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் – 5: பேராண்மை திரைப்படம் பேசும் பின்னணி... **அருச்சுனன் பக்கம் 15: தமிழ்நாட்டின் அரசியல் கோமாளிகள்! **தலைவிரித்தாடும் மகிந்தவின் பயங்கரவாதம்! **ரகுவீரனின் - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **ரகுவீரனின் - பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை! U N A R V U K A L . C O M
11/29/2009 1:25:00 AM
தமிழர்கள் உரிமையை ஆதரிக்கும் தமிழனோ சிங்களனோ நிற்க வைக்க வேண்டும். பல மக்களுக்கு இன வெறியர்களை பிடிக்காது. எனவே அமெர்க்கா ஒபாமைவைப் போன்று அதே விளம்பர விவேகமாக பாணியில் உழைதால் அவர் வெற்றி பெற முடியும். இனப்ப் பிரச்சனைக்கு தேர்வு கான முடியும். முடியாதது எதுவும் இல்லை. இந்த சந்தர்ப்பத்தை தமிழர்கள் பயன்படுத்திக்க் கொள்வதே நல்ல சமையம். தமிழ் பேசுபவர்கள் எந்த சமயத்தை சேந்தாவர்களானாலும் தமிழர்கள் என்ற ஒருங்கிணைப்புடன் வெற்றிக்கு, நன்மைக்கு செயல்பட வேண்டும். இலங்கையின் அந்த ஒபாமா எங்கே?
11/29/2009 12:06:00 AM
கெளஷிகன் தங்கள் கருத்தை ஆதரிக்கின்றேன். தமிழர் ஒருவருக்கு வாக்கு போடுவதன் மூலம் எங்கள் வாக்குகளை வீணடிக்கப்போகிறோமா என மனக்குழப்பம் அடையவேண்டிய அவசியமில்லை
11/28/2009 10:04:00 PM
கெளஷிகன் தங்கள் கருத்தை ஆதரிக்கின்றேன். தமிழர் ஒருவருக்கு வாக்கு போடுவதன் மூலம் எங்கள் வாக்குகளை வீணடிக்கப்போகிறோமா என மனக்குழப்பம் அடையவேண்டிய அவசியமில்லை
11/28/2009 10:04:00 PM
ராஜபட்ச, பொன்சேகா ஆகிய இருவரும் கொலைகாரர்கள். அப்பாவித் தமிழர்களை வகை தொகையின்றிக் கொன்றுகுவித்த மாபாதகர்கள். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இவர்கள் இருவருக்கும் உரிய இடம் ஜனாதிபதி மாளிகையல்ல. இவர்கள் இருவரும் போர்க்குற்றங்கள், மற்றும் மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள் என்பன புரிந்தமைக்காக சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு ஆயுட்காலம்வரை கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்படவேண்டியவர்கள். எந்தவொரு தமிழ் வாக்கும் இந்த இருவரில் எவரையும் சேரவிடாது தடுப்பது தமிழர்கள் எல்லோரினதும் தலையாய கடமை. அந்த வகையில் தமிழர் ஒருவரை ஜனாதிபதிவேட்பாளராக நிறுத்துவதன் மூலம் இதனைச் சாதிப்பதோடு, தமிழர்கள் அனைவரும் தங்கள் வாக்குகளை அவருக்கே செலுத்துவதன் மூலம் தமிழினத்தின் ஒற்றுமையையும் வெளிக்கொணரவேண்டும். மேற்சொன்ன இரண்டு நோக்கங்களையும் அடைவதுதான் முக்கியமே தவிர, தமிழர் ஒருவர் எவ்வாறு ஜனாதிபதியாக வரமுடியும், தமிழர் ஒருவருக்கு வாக்கு போடுவதன் மூலம் எங்கள் வாக்குகளை வீணடிக்கப்போகிறோமா என மனக்குழப்பம் அடையவேண்டிய அவசியமில்லை. வாழ்க தமிழ்! வெல்க தமிழீழம்!! -கௌஷிகன்
11/28/2009 9:28:00 PM