Last Updated :
சென்னை, டிச.2: அடுத்த ஆண்டுக்கான (2010) மத்திய அரசின் விடுமுறை நாள்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதன் படி சனி, ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர்த்து பண்டிகைகள் என்ற அடிப்படையில் மொத்தம் 17 நாள்கள் விடுமுறை வருகிறது. அதுகுறித்த விவரம்:பொங்கல் (ஜனவரி 14), குடியரசு தினம் (ஜனவரி 26), மகா சிவராத்திரி (பிப்ரவரி 12), மிலாது நபி (பிப்ரவரி 27), மகாவீரர் ஜெயந்தி (மார்ச் 28), புனித வெள்ளி (ஏப்ரல் 2), புத்த பூர்ணிமா (மே 27), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), ரம்ஜான் (செப்டம்பர் 11), காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2), மகா அஷ்டமி (அக்டோபர் 15), விஜயதசமி (அக்டோபர் 17), தீபாவளி (நவம்பர் 5), பக்ரீத் (நவம்பர் 17), குருநானக் ஜெயந்தி (நவம்பர் 21), மொஹரம் (டிசம்பர் 17), கிறிஸ்துமஸ் (டிசம்பர் 25).இதேபோன்று, வரையறுக்கப்பட்ட விடுமுறை தினங்களாக 42 நாள்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஏதேனும் இரண்டு நாள்களை மட்டுமே விடுமுறையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்' என்று பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக