திங்கள், 30 நவம்பர், 2009

மீண்டும் வலுக்கிறது தெலங்கானா போராட்டம்: சந்திரசேகர் ராவ் கைது; இன்று பந்த்க்கு அழைப்பு



சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முயன்ற தெலங்கானா ராஷ்ட்ர சமிதி எம்.எல்.ஏ. ஹரிஷ்ராவ் கைது செய்யப்பட்டார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அவரது ஆதரவாளர்களை
ஹைதராபாத்,நவ.29: ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற தெலங்கானா ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகர் ராவ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி சித்திப்பேட்டில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக சந்திரசேகர் ராவ் அறிவித்திருந்தார். அதன்படி அவர், ஞாயிற்றுக்கிழமை காலை சித்திப்பேட்டுக்கு தனது கட்சியை சேர்ந்த மற்ற தலைவர்களுடன் காரில் சென்றுகொண்டிருந்தார். கரீம்நகர் அருகில் அலக்கானூர் என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்த போது சந்திரசேகர் ராவின் காரை தடுத்து நிறுத்திய போலீஸôர், அவரையும், மற்ற தலைவர்களையும் கைது செய்து அழைத்து சென்றனர். சந்திரசேகர் ராவ் கைது செய்யப்பட்ட தகவல் ஆந்திரப் பிரதேசம் முழுவதும் காட்டுத் தீயாய் பரவியது. இதையடுத்து தெலங்கானா ராஷ்ட்ர சமிதி தொண்டர்கள் கொந்தளித்தனர். ÷ஆங்காங்கே அரசுப் பஸ்கள் மீதும், கடைகள் மீதும் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர்.தெலங்கானா பகுதியில் அமைந்துள்ள கல்வி நிறுவனங்களில் மாணவர்களும் சந்திரசேகர் ராவ் கைதைக் கண்டித்து தீவிரப் போராட்டத்தில் குதித்தனர். ஹைதராபாதில் உள்ள ஓஸ்மேனியா பல்கலைக்கழக மாணவர்களும், வாரங்கலில் உள்ள ககதியா பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் இந்த இரு பல்கலைக்கழகத்திலும் போலீஸôர் குவிக்கப்பட்டனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸôர் மீது மாணவர்கள் சரமாரியாக கல்வீசித் தாக்குல் நடத்தினர். இதையடுத்து போலீஸôர் தடியடி நடத்தி மாணவர்களை கலைத்தனர். சந்திரசேகர் ராவின் கைதை தெலங்கானா ராஷ்ட்ர சமிதி தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். தெலங்கானா பகுதியில் திங்கள்கிழமை பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். சந்திரசேகர் ராவ் கைது செய்யப்பட்டாலும், சித்திப்பேட்டையில் திட்டமிட்டதுபோல் சாகும் வரை உண்ணாவிரதத்தை தெலங்கானா ராஷ்ட்ர சமிதி தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினர். சந்திரசேகர் ராவ் கைதுக்கு பின்னர் பதற்றமான சூழல் உருவாகியுள்ளதால் உண்ணாவிரத போராட்டம் நடக்கும் இடத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடு: தெலங்கானா பகுதி முழுவதும் நிலைமையை கட்டுக்குள் வைக்க தீவிர பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள. போலீஸôர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்திரசேகர் ராவ் கைது குறித்து தெலங்கானா ராஷ்ட்ர சமிதி மூத்த தலைவரும்,எம்எல்ஏவுமான ஹரீஷ் ராவ் கூறுகையில், நாட்டில் எத்தனையோ தலைவர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் உள்பட பல்வேறு வழிகளில் போராட்டம் நடத்தியுள்ளனர். அதுபோலத்தான் எங்களது தலைவரும் போராட முயன்றார். அவரை ஏன் கைது செய்தார்கள் என்பது தெரியவில்லை. அவரை கைது செய்து எங்கு வைத்திருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. இதை அரசு உடனே தெளிவுபடுத்த வேண்டும். எங்கள் தலைவரின் கைதை கண்டித்து தெலங்கானாமக்களை திங்கள்கிழமை பந்த் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளோம் என்றார்.
கருத்துக்கள்

தமிழ் நாட்டில் சேர்த்திருக்க வேண்டிய திருப்பதி, சித்தூர் முதலான பல மாவட்டஙக்ளை ஆந்திரப்பகுதியில் சேர்த்ததால்தான் இச்சிக்கல். உடனே அப்பகுதிகளை மீண்டும் தமிழ் நாட்டில் சேர்த்து விட்டால் தெலுங்கானா அமைந்து விடும். தமிழ் நாட்டிற்கும் நீதி கிடைக்கும். எனவே, ஆந்திராவை இரு மாநிலங்களாகப் பிரிப்பதை விட தெலுங்கானா பகுதியை அளித்து விட்டு எஞ்சிய பகுதியைத் தமிழ் நாட்டுடன் இணைக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/30/2009 3:32:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
+++++++++++++++++++++++++++++++++++++++
இலக்குவனார் போன்றோர் தமிழ் என்ற போர்வையில் அலையும் மூட ஜென்மங்கள். அவர் எழுதுவதை பாருங்கள். எப்போது பார்த்தாலும் இந்திய தேசத்துக்கு எதிரான கருத்து தான். நமது தமிழ்நாட்டில் 40 சதம் பேர் தெலுங்கு பேசுகின்றனர். அவர்களை என்ன செய்வது? மொழிவாரி ராச்சியங்கள் என்பது இந்தியாவை துண்டாட வெள்ளையர்கள் போட்டு கொடுத்து போன ரூட் மேப். அதை சுதந்திர போராட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள் அதைத் தடுக்காததால் வந்த வினை இது. ஆரிய திராவிட வாதம் என்று வெள்ளையன் சொல்லி சென்றதை நண்பர் கார்த்தி எழுதியதை போல இந்தியாவை மண்டலங்களாக பிரிக்க வேண்டும். திரு கலாம் அவர்கள் கூட இந்தியாவை 4 பொருளாதார மண்டலங்களாக பிரிக்கலாம் என்று தான் கூறினார். எனவே, நாம் இந்தியர் என்ற உணர்வுடன் வாழ்ந்தால் அனைவருக்கும் நல்லது. அல்லது பிரிக்கப் பட்ட எருதுகளாக சீனாவுக்கும், பாக்குக்கும் பலியாக வேண்டியது தான்.
By ravikumar
11/30/2009 6:31:00 PM

திரு. பூபதி அவர்களே நீங்கள் கூறுவது போல இது ஆந்திரத்தின் உள் விவஹராம் என்று நமக்கு சிந்தனை வரகூடாது ....ஏனென்றால் இது நாளைய நமது பாரதத்திற்கு மிக மிக ஆபத்தானது !!!! ஒற்றுமையான இந்தியாவை விரும்புவோர் இப்படி சிந்திக்க கூடாது......... என் கருத்தில் எதுவும் தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும் !!!!!!! கார்த்திக் குமார் கொச்சின் !!!

By KARTHIK KUMAR
11/30/2009 1:43:00 PM

நமது இந்தியா முன்னேர வேண்டுமானால் நமது அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அதாவது மேலைநாடுகளை போல குடியரசு தலைவர் அட்சி முறையை கொண்டு வரவேண்டும்.... சில நாட்களுக்கு முன் படித்த செய்தி அமெரிக்காவில் ஒரு ஆய்வு மேற்கொண்டார்கலாம் அதில் வரும் காலாங்களில் சீனா, பெரிய ராணுவபலம் கொண்ட நாடாகவும்,இந்தியா பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாகவும் வருமாம் ஆனால் இந்தியாவில் இன ரீதி, மாநிலங்கலக்கு இடையே பிரச்சினைகள் வருமாம் , அதனால் நம் நாட்டில் மாநிலங்களை குறைத்து மகாணங்கள் முறை கொண்டு வரவேண்டும் ....நாட்டில் மொத்தம் 3773 MLA , 543 MP, இத்தனை பேர்கள் இருந்து என்ன செய்தார்கள் ! இவர்களுக்கு நம் வரிப்பணம் எவ்வளவு விரயம் ...பல குறுநில மன்னர்களிடம் இருந்து நம்மை ஒரே இந்தியவாக்கி இப்போது பல மாநிலங்களாய் பிரித்தால் மேலும் நம்மால் ஒரு போதும் முன்னேறமுடியாது.....இன்று நம் மாநிலங்களிடையே உள்ள பிரச்சினைகள் போதும் இனியும் ஒரு மாநிலம் உருவாகி மேலும் பிரச்சினை வேண்டாம் !!!!! ஜெய் ஹிந்த்!!! வந்தேமாதரம் !!!!! கார்த்திக்குமார் கொச்சின்

By KARTHIK KUMAR
11/30/2009 1:35:00 PM

போதும் இலக்குவனாரே . தமிழக - ஆந்திர எல்லைப் பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்ட ஒன்று.சித்தூர் & திருப்பதி ஆகிய மாவட்டங்களில் கணிசமான அளவிற்கு தமிழர்கள் இருப்பது உண்மை என்றாலும் தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்று சொல்லமுடியாது . அப்படி இருப்பின் திருப்பதியில் தமிழ் எம்.எல்.ஏ இருந்திருப்பார். மாறாக ஓசூர் உள்ளிட்ட எல்லை பகுதிகளில் தமிழ் , கன்னட எம்.எல்.ஏக்கள் தமிழகத்தில் இருக்கின்றனர். தெலுங்கானா என்பது ஆந்திரத்தின் உள்விவகாரம் . இதில் நாம் தலையிடுவது தேவையற்றது

By M.S.Boobathi
11/30/2009 1:01:00 PM

Very good Ilakkuvanar Thiruvalluvan. Dear congress man is it (INDIA) a democretic country. See the photo, They r police or Government Paid GUNDAS. Even British government not treated our people like this. Long Live Indian Democrasy .

By Subash
11/30/2009 11:31:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக