புதன், 2 டிசம்பர், 2009

General India news in detail

புதுடில்லி : இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளை தாண்டி விட்டது. 1949ம் ஆண்டு இயற்றப்பட்ட அரசியல் சட்டத்தில், இதுவரை 94 முறை திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.



இந்தியா 1947ம் ஆண்டு சுதந்திரம் அடைந்த நிலையில், 500 சிற்றரசுகளாக பிரிந்து கிடந்தது. இவைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே கூட்டாட்சி அமைப்பின் கீழ் கொண்டு வந்தார் சர்தார் வல்லபாய் படேல். சுதந்திரத்துக்கு பின்னும் பிரிட்டன் அரசியல் சட்டத்தை பின்பற்றி வந்தது இந்தியா. முதல் ஜனாதிபதியாக ராஜேந்திர பிரசாத் பதவியேற்றார்.



இந்தியா, தனக்கென்று தனியாக அரசியல் சட்டம் இயற்ற அம்பேத்கர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவால், 1949ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி அரசியல் சட்டம் வடிவமைக்கப்பட்டது. அதன் பின், 1950ம் ஆண்டு இந்தியா குடியரசு நாடானது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன் இச் சட்டம் பார்லிமென்ட் ஒப்புதலுக்கு விடப்பட் டது. 284 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்த பின், இச்சட்டம் அமலுக்கு வந்தது. அறுபது ஆண்டு முடிந்த நிலையில் சட்டத்தில் இதுவரை 94 முறை திருத்தம் செய்யப்பட்டுள் ளன. ஆனால், அமெரிக்க அரசியல் சட்டம் மிகவும் பழமையானது. அது, 1787ம் ஆண்டு செப் டம்பர் 17ம் தேதி இயற்றப்பட்டது. இதுவரை 27 முறை மட்டுமே திருத்தங்கள் செய்யப்பட்டுள் ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக