Last Updated :
கொ ழும்பு, நவ. 29: அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தியாவுடன் நல்லுறவை தொடருவேன் என சரத் பொன்சேகா கூறினார்.கொழும்பில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது:இந்த மண்டலத்தில் இந்தியாதான் நமக்கு அருகில் உள்ள வலிமையான அண்டை நாடு. சீ னாவுடனும், பாகிஸ்தானுடனும் இணைந்து பணியாற்றினேன் என யாராவது கூறினால், அது போரில் புலிகளைத் தோற்கடிக்க ஆயுதங்கள் பெறுவதற்காகத்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.புலி களுடனான போருக்காக அந்த நாடுகள் ஆயுதங்களை வழங்கின. இந்தியா நமக்கு அரசியல்ரீதியாகவும், தார்மிகரீதியாகவும் உதவிகளைச் செய்தது.இந்தியாவுடனான உறவு எப்போதும் உயர்ந்த நிலையிலேயே உள்ளது. எதிர்காலத்திலும் அதேபோன்று இருக்கவே விரும்புகிறேன்.இந் திய கலாசாரத்தையும், மக்களையும் மிகவும் நேசிக்கிறேன். நான் ராணுவ அதிகாரியாக பணியாற்றத் தொடங்கியபோதில் இருந்தே இந்தியாவுடன் எனக்கு நல்லுறவு உள்ளது.இந்தியாவில் 4 முறை பயிற்சி மேற்கொண்டுள்ளேன். இந்திய ராணுவம் குறித்து உயர்ந்தபட்ச மதிப்பு வைத்துள்ளேன் என்றார். ஆயுத கொள்முதலில் மருமகனுக்குத் தொடர்பில்லை: போருக்குத் தேவையான ஆயுதங்களை வாங்கியதில் எனது மருமகனுக்கு எந்தவித தொடர்பும் இல்லை.அதுபோன்று செயல்பட்டிருந்தால் உலகத்திலேயே இன்று நான்தான் பெரும் பணக்காரனாக இருந்திருப்பேன்.ஆயுதக் கொள்முதல் அனைத்தும் பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபட்சவின் நேரடி மேற்பார்வையில்தான் செய்யப்பட்டன.ராணுவத் தளபதி என்ற முறையில் ஆயுதங்களின் தொழில்நுட்ப விஷயங்களில் மட்டுமே எனது கவனம் இருந்தது.எனது மகன் தற்போது அமெரிக்காவில் படித்து வருகிறார். அவருக்கும் ஆயுத கொள்முதலுக்கும் தொடர்பில்லை. எ னது குடும்பத்தினர் மீது புழுதிவாரி தூற்றும் செயலில் சிலர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள்தான் இத்தகைய பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார் பொன்சேகா.
By Ilakkuvanar Thiruvalluvan
11/30/2009 4:07:00 AM
By tamizhan
11/30/2009 4:03:00 AM
By Ellalan
11/30/2009 1:23:00 AM
By ponsegha
11/30/2009 12:58:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
*