Last Updated :
சென்னை, டிச. 1: பால் கமிஷன் அறிக்கை வெளியான விவகாரத்தில் எம்.ஜி.ஆரை கொச்சைப்படுத்துவதா? என முதல்வர் கருணாநிதிக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.÷இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை கூறியது:÷எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் திருச்செந்தூர் கோயில் உதவி ஆணையாளராக இருந்த சுப்பிரமணிய பிள்ளை தற்கொலை செய்து கொண்டார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரிக்க நீதிபதி பால் என்பவரை எம்.ஜி.ஆர். நியமித்து உத்தரவிட்டார்.÷நீதிபதி பால் விசாரித்து அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்தார். அரசின் சார்பில் சட்டப்பேரவையில் அந்த அறிக்கை வைப்பதற்கு முன்பு அன்றைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த கருணாநிதி தன்னிச்சையாக வெளியிட்டார். இந்த சட்டவிரோத காரியத்துக்கு யார் பொறுப்பு?÷இது தொடர்பாக அன்று பதவியில் இருந்த அமைச்சர்கள் பதவி விலகினார்களா என்று இப்போது கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் இந்தக் கேள்வியை அப்போது அறநிலையத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம். வீரப்பனிடம் கேள்வி கேட்க வேண்டும்.÷பால் கமிஷன் அறிக்கை திருடு போனது குறித்து இரண்டு அதிகாரிகளை தாற்காலிகப் பணிநீக்கம் செய்து அன்றைய அரசு விசாரணை செய்தது.÷பொருளை வாங்குபவர்கள் யாரும் இல்லையென்றால் அதை யாரும் உற்பத்தி செய்யமாட்டார்கள். அதேபோல்தான் அன்றைக்கு பால் கமிஷன் அறிக்கையை கருணாநிதி வாங்கத் தயாராக இருந்ததனாலேயே அரசு அலுவலர்களால் திருடப்பட்டது. ஆகவே இந்த குற்றத்தை செய்யத் தூண்டிய பொறுப்பு கருணாநிதிக்கு உண்டா? இல்லையா? எந்தக் குற்றத்திலும் குற்றம் செய்தவரைவிட குற்றம் செய்யத் தூண்டியவர்தானே முதல் குற்றவாளி.÷இந்த நிலையில் பால் கமிஷன் அறிக்கையை திருடிய குற்றத்துக்காக பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிக்கு, 1989}ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கருணாநிதி மீண்டும் பதவி வழங்கி தனது நேர்முக உதவியாளராக ஆக்கிக் கொண்டார்.÷மே லும் அந்த அதிகாரிக்கு 8 ஆண்டுகள் பணியில் இல்லாத காலத்துக்கும் ஒரே நாளில் சம்பள பாக்கியை வழங்கினார் கருணாநிதி. அப்படி என்றால் இந்த குற்றத்துக்கு யார் காரணம் என்பது தெரியவில்லையா?÷இவை கள் எல்லாம் ஒரு அரசின் நிர்வாகத்தை சீர்கேடு அடையச் செய்வது மட்டுமல்லாமல், சட்டவிரோத காரியங்களை அதிகாரிகள் துணிந்து செய்வதற்கு தூண்டிவிட்டது ஆகாதா?÷கருணாநிதி விஞ்ஞான முறையில் ஊழல் செய்தார் என்று நீதிபதி சர்க்காரியா அறிக்கை தாக்கல் செய்தார். ஆனால் அந்த அறிக்கையின் அடிப்படையில் கருணாநிதியை கைது செய்ய வேண்டாம் என்று அன்றைய தினம் எம்.ஜி.ஆர். பெருந்தன்மையோடு நடந்து கொண்டார்.÷ஆனால் பால் கமிஷன் தொடர்பாக அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் ஏன் பதவி விலகவில்லை என்று இன்று கருணாநிதி கேள்வி கேட்டு அவரை கொச்சைப் படுத்துகிறார் என்று கூறினார் விஜயகாந்த்.
By Ilakkuvanar Thiruvalluvan
12/2/2009 4:06:00 AM
By Abdulla, Oman
12/2/2009 4:03:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
*
Hi Ilakkuvanar Thiruvalluvan, I have been reading your comments whenever I open dinamani site. It is really superb. I appreciate your good comments. By Marianandan
12/2/2009 7:50:00 AM