திங்கள், 30 நவம்பர், 2009

அதி​பர் தேர்​தலிலும் வாகை சூடுவேன்: பொன்​சேகா



கொழும்பு, ​ நவ. 29:​ இ​து​வரை எந்​தப் போரி​லும் நான் தோற்​ற​தில்லை. அதி​பர் தேர்த​லி​லும் நான் வாகை சூடு​வேன் என்று இலங்கை அதி​பர் தேர்த​லில் மகிந்த ராஜ​பட்​ச​வுக்கு எதி​ராக களத்​தில் குதித்​துள்​ள சரத் பொன்​சேகா தெரிவித்துள்ளார்.இது தொடர்​பாக கொழும்​பில் செய்​தி​யா​ளர்​க​ளி​டம் முப்​ப​டை​க​ளின் முன்​னாள் தள​பதி சரத் பொன்​சேகா ​(58) ​ கூறி​ய​தா​வது:​அ​தி​பர் தேர்த​லில் எதிர்க்​கட்​சி​க​ளின் பொது​வேட்​பா​ள​ராக ​ போட்​டி​யி​டு​வது என முடிவு செய்​துள்​ளேன்.சர் ​வ​தே​சப் பார்​வை​யா​ளர்​க​ளின் மேற்​பார்​வை​யில் அதி​பர் தேர்​தல் நடை​பெற வேண்​டும் என்​பதே இப்​போ​தைய தேவை. விடு​த​லைப் புலி​க​ளு​ட​னான போரில் வெற்றி பெற்​ற​தற்கு ஒரு குடும்​பம் ​(ராஜ​பட்ச சகோ​த​ரர்​கள்)​ மட்​டுமே கார​ண​மல்ல.வ​ர​லாற்​று​ரீ​தி​யாக இலங்கை சிங்​க​ளர்​க​ளுக்கு சொந்​தம் என்​ற​போ​தி​லும்,​ சிறு​பான்​மை​யி​ன​ரான தமி​ழர்​க​ளின் உரி​மை​க​ளைக் காப்​பது பெரும்​பான்​மை​யி​ன​ரின் கடமை.எ ​னது பாது​காப்​புப் பணி​யில் 600 வீரர்​கள் ஈடு​பட்​டி​ருந்​த​னர். அது தற்​போது 25 ஆக குறைக்​கப்​பட்​டுள்​ளது. சாலை​யில் தாக்​குத​லில் நான் இறக்க நேர்ந்​தால் என்​னு​டன் நூற்​றுக்​க​ணக்​கா​னோர் இறக்​கக் கூடும்.சர்​வா​தி​கா​ரத்தை அகற்றி,​ ஊழ​லும்,​ பயங்​க​ர​வா​த​மும் அற்ற ஜன​நா​யக சமு​தா​யத்தை கட்டி அமைப்​பதே எனது லட்​சி​யம்.அ ​ர​சிய​லில் ஈடு​ப​டும் எண்​ணம் தொடக்​கத்​தில் எனக்கு இல்லை. ஆனால்,​ தேசத்​தின் தற்​போ​தைய சூழ்​நி​லை​தான் அர​சிய​லில் ஈடு​பட என்​னைத் தூண்​டி​யது.மக்​க​ளின் உரி​மை​க​ளை​யும்,​ ஜன​நா​ய​கத்​தை​யும் பாது​காக்​கவே அதி​பர் தேர்த​லில் போட்​டி​யி​டு​கி​றேன் என்​றார்.பு ​லி​க​ளு​ட​னான போரின்​போது ராணு​வத் தள​ப​தி​யாக இருந்த பொன்​சேகா,​ போரில் வென்ற பின் முப்​ப​டை​க​ளின் தள​ப​தி​யாக நிய​மிக்​கப்​பட்​டார். ​ரா​ஜ​பட்​ச​வு​டன் ஏற்​பட்ட கருத்து வேறு​பாடு கார​ண​மாக அவர் தனது பத​வியை அண்​மை​யில் ராஜி​நாமா செய்​தார்.2005-ல் ராஜ​பட்ச அதி​ப​ரா​கப் பத​வி​யேற்​ற​போது நாட்​டின் மூன்​றில் ஒரு பங்கு பகுதி புலி​க​ளின் ஆதிக்​கத்​தில் இருந்​தது. ​பு ​லி​க​ளு​ட​னான போரில் பெற்ற வெற்​றியை அர​சி​யல்​ரீ​தி​யாக ஆதா​ய​மாக மாற்​றிக் கொள்​வ​தற்​கா​கவே அதி​பர் தேர்​தலை சுமார் 2 ஆண்​டு​கள் முன்​ன​தா​கவே நடத்த ராஜ​பட்ச முடிவு செய்​தார்.அ​தன் படி 2010 ஜன​வரி 26-ம் தேதி தேர்​தல் நடை​பெ​றும் என அந் நாட்டு தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​தது. வேட்​பு​மனு தாக்​கல் டிசம்​பர் 17-ம் தேதி தொடங்​கு​கி​றது.இத் தேர்த​லில் சுமார் 1.40 கோடி வாக்​கா​ளர்​கள் வாக்​க​ளிக்க உள்​ள​னர். ​அ ​தி​பர் தேர்த​லில் பொன்​சே​கா​வுக்கு ஆத​ர​வ​ளிப்​ப​தாக இலங்​கை​யின் முக்​கிய எதிர்க்​கட்​சி​யான ஐக்​கிய தேசிய கட்​சி​யின் தலை​வ​ரான ரணில் விக்​கி​ர​ம​சிங்கே கடந்த வியா​ழக்​கி​ழமை அறி​வித்​தார்.இ​து​வரை ராஜ​பட்​சவை ஆத​ரித்​து​வந்த ஜனதா விமுக்தி பெர​மு​னா​வும் பொன்​சே​காவை ஆத​ரிப்​ப​தாக அறி​வித்​துள்​ளது. தற்​போ​தைய நிலை​யில்,​ ராஜ​பட்​ச​வுக்கு பொன்​சேகா கடும் போட்டி அளிக்​கக் கூடும் என அர​சி​யல் நோக்​கர்​கள் கரு​து​கின்​ற​னர்.
கருத்துக்கள்

வ​ர​லாற்​று​ரீ​தி​யாக இலங்கை தமிழர்களுக்குச் சொந்தமாக இருந்த போதிலும் மீண்டும் மீண்டும் சிங்​க​ளர்​க​ளுக்கு சொந்​தம் என ஏமாற்றி வரலாற்றைத் திரிக்கும் இவனும் தோற்கடி்க்கப்பட வேண்டியவனே!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/30/2009 3:50:00 AM

CAN YOU TELL ME TRUTH TO ME IF YOU DON"T NO) AMNESTY

By dddddd
11/30/2009 1:15:00 AM

அரசியல் கோமாளிகளான மு.க.கருணாநிதி ,வை.கோ. ,திருமாவளவன் ,கன்னிமொழி ,ஜெயலலிதா ,சசிகலா .ஏலம்கோ , நெடுமாறன் ,தங்கபாண்டி , விசக்குமார் , அனைவரும் தயார் ஆகுங்கள் இந்த சிங்க குட்டியை வாழ்த்தி வரவேற்க,

By Eddappan
11/30/2009 1:10:00 AM

அரசியல் கோமாளிகளான மு.க.கருணாநிதி ,வை.கோ.,திருமாவளவன் ,கன்னிமொழி ,ஜெயலலிதா ,சசிகலா .ஏலம்கோ ,நெடுமாறன் ,தங்கபாண்டி ,விசக்குமார் , அனைவரும் தயார் ஆகுங்கள் இந்த சிங்க குட்டியை வாழ்த்தி வரவேற்க,

By Eddappan
11/30/2009 1:06:00 AM

அரசியல் கோமாளிகளான மு.க.கருணாநிதி ,வை.கோ.,திருமாவளவன் ,கன்னிமொழி ,ஜெயலலிதா ,சசிகலா .ஏலம்கோ ,நெடுமாறன் ,தங்கபாண்டி ,விசக்குமார் ,அனைவரும் தயார் ஆகுங்கள் இந்த சிங்க குட்டியை வாழ்த்தி வரவேற்க,

By Eddappan
11/30/2009 1:04:00 AM

ஈழத்தமிழர்களை கொல்லும்படி ஆணையிட்டது கோத்தபாயதான் - சரத் பொ‌ன்சேகா இலங்கை இறுதிக் கட்ட போ‌ரி‌ன்போது வன்னியிலுள்ள தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும்படி பாதுகாப்புச் செயலர் கோத்தபாயதான் ஆணையிட்டதாக மு‌ன்னா‌ள் இராணுவ‌த் தளப‌தி சரத் பொன்சேகா கூறியுள்ளார். இல‌ங்கை‌யி‌ல் அ‌தி‌ப‌ர் தேர்தல் ஜனவரி 26 ஆம் தே‌தி என அறிவி‌ப்பு வெளிவிடப்பட்டுள்ள நிலையில், சரத் பொன்சேகா தனது அரசியல் முடிவு குறித்து இன்று அ‌திகார‌ப்பூ‌ர்வமாக அறிவித்துள்ளார். ஆனால் அவர் இராணுவ தளபதியாக இருந்தபோது அணுகிய விதத்துக்கும் இப்போதைய அணுகுமுறைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளதாக இலங்கை வாராந்த ஆங்கில இதழின் செய்தியாளர் கூறியுள்ளார். இச்செய்தியாளரை தமது அலுவலகத்துக்கு அழைத்த சரத் பொ‌ன்சேகா அவருடன் பேசியுள்ளதாக த ஏஷியா ட்ரிபூன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது, இறுதிக் கட்ட யுத்தத்தின்போது கூறப்பட்டுள்ள குற்றச்சா‌ற்றுக்கள் குறித்து பத்திரிகையாளரும் கேட்டுள்ளார். அதற்கு, வன்னியிலுள்ள தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும்படி பாதுகாப்புச் செயலர் கோத்தபாயதான் ஆணையிட்டதாக கூறியுள்ளார் சரத்

By Ellalan
11/30/2009 12:57:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக