சென்னை, நவ. 30: மெட்ரிக் பள்ளிகளில் 11}ம் வகுப்பில் மே 16}க்கு முன்னர் நடைபெறும் மாணவர் சேர்க்கை செல்லாது என்று மெட்ரிக் கல்வி இயக்குநர் மணி உத்தரவிட்டுள்ளார்.
÷பல்வேறு இடங்களில் உள்ள மெட்ரிக் பள்ளிகளில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் இருந்தே மாணவர் சேர்க்கை நடைமுறை தொடங்கப்பட்டு, மாணவர்களிடம் அதிக அளவில் பணம் வசூலிக்கப்படுவதாக புகார் வந்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மெட்ரிக் பள்ளி இயக்குநர் தனது உத்தரவில் கூறியிருப்பது:
÷பி ளஸ் 1 மாணவர் சேர்க்கை மே மற்றும் ஜூனுக்கு இடையே நடைபெறுவதுதான் வழக்கம். ஆனால் பல பள்ளிகளில் மாணவர்களின் 10}ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்ணை வைத்து, மார்ச் மாதத்துக்கு முன்னதாகவே மாணவர் சேர்க்கையை முடித்துவிடுகின்றனர்.
÷இன் னும் சில பள்ளிகள் வரும் ஜனவரிக்குள் மாணவர் சேர்க்கையை முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் இயக்குநர் அலுவலகத்துக்கு புகார்கள் வந்துள்ளன.
÷எனவே, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள மெட்ரிக் பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை முழுமையாகக் கண்காணிக்க வேண்டும்.
÷த விர, பிளஸ் 1 மாணவர் சேர்க்கையை 10}ம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியாகி 15 நாள்களுக்குள் (மே 16 முதல் மே 30}க்குள்) முடிக்க வேண்டும். மே 16}ம் தேதிக்கு முன்னர் நடைபெறும் மாணவர் சேர்க்கை செல்லாது.
÷மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்பட வேண்டும். தவிர, மாணவர் சேர்க்கை தொடர்பாக மாணவர், பெற்றோரிடம் நேர்காணல் எதையும் நடத்தக் கூடாது.
÷10}ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவர்களையும் 11}ம் வகுப்பில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
÷அ னைத்து வகையான மாணவர் சேர்க்கைகளும் முடிந்தவுடன் அது குறித்த விவரங்களை இயக்குநர் அலுவலகங்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகள் அனுப்பி வைக்க வேண்டும். மாணவர் சேர்க்கை தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள் விரைவில் எல்லா பள்ளிகளுக்கும் வழங்கப்படவுள்ளன.
நல்ல நடவடிக்கை. சரியாகப் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றோர்கள் முட்டி மோதிக் கொண்டும் பணத்தைக் கொட்டிக் கொடுத்துக் கொண்டும் மறைவாகச் சேர்க்கை பெற முயலக் கூடாது. விழித்துக் கொண்டுள்ள பள்ளிக் கல்வித் துறைக்கும் பதின்நிலைப்பள்ளி இயக்குநருக்கும் பாராட்டுகள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
12/1/2009 3:13:00 AM