ஞாயிறு, 29 நவம்பர், 2009

வீரம் இருந்தது! விவேகம் இல்லை: முதல்வர் கருணாநிதி கருத்து



சென்னை, நவ. 28: என்னைக் கண்மூடித்தனமாக எதிர்க்கும் தவறான நபர்களின் யோசனைகளை விடுதலைப் புலிகள் கேட்டதால் தான், இலங்கையில் தமிழினம் துன்பத்திற்கு ஆளாகித் தவிக்கிறது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக, கேள்வி-பதில் வடிவில் அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: "வீரத்தைப் பயன்படுத்திய அளவுக்கு, இதுபோன்ற போர்முனைகளிலே விவேகத்தைப் பயன்படுத்துமாறு நான் வலியுறுத்தியதை என்ன காரணத்தினாலோ அலட்சியப்படுத்திவிட்டார்கள்'' என்று நான் எழுதியது உண்மைதான். இதிலே எந்தப் பிழையும் இருப்பதாக நான் இப்போதும் உணரவில்லை. நாம் கூறியதை அலட்சியப்படுத்தி, தவறான நபர்களின் தவறான யோசனைகளெல்லாம் கேட்ட காரணத்தினால் தான், இலங்கையில் தமிழினம் துன்பத்திற்கு ஆளாகித் தவிக்கிறது என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
கருத்துக்கள்

விடுதலைப் புலிகளைக் கண் மூடித்தனமாக எதிர்க்கும தவறான நபர்களின் யோசனைகளைத் தமிழக அரசியல்வாதிகளும் இந்திய அரசியல்வாதிகளும் கேட்டதால்தான் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள் என்று சொல்லியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். ஒரு வேளை அதைச் சொலல எண்ணிதான் இவ்வாறு கூறுகிறாரோ! எரி குண்டுகளாலும் வஞ்சகக் கொடுமைகளாலும் கூட்டம் கூட்டமாகக் கொன்றதை வீரம் என்று எண்ணிய கோழைகள் விவேகமாகச் செயல்பட்டுத் தமிழர்கள் உயிரைக் காப்பாற்றாமல் போனதைச் சொல்ல வந்து இவ்வாறு பேசிவிட்டாரோ! உண்மையைச் சொல்ல வந்த பொழுது காங். நினைவிற்கு வந்து இருக்கும். சொறகள் தடம் புரண்டிருக்கும். மாண்புமிகு முத்தமிழறிஞர் பேச வேண்டிய நேரத்தில் அமைதி காத்து இனப் படுகொலைகளுக்கான பழி தேடிக் கொண்டது போதாது என்று அமைதி காக்க வேண்டிய நேரத்தில் எழுதியும பேசியும் பழி தேடிக் கொள்வது ஏனோ!

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/29/2009 4:44:00 AM

இப்போது அந்த இரண்டுமே தங்களிடமில்லையே. வேதனைக்குறிய உண்மைதான்.

By Vani
11/29/2009 3:32:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக