சென்னை, நவ.30: "ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களே அவரை அடக்கும் நிலை உருவாகும்' என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
இலங் கையில் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த பேனர்களையும், சுவரொட்டிகளையும் கிழித்தெறிந்து பகிரங்கமாக நடத்தப்பட்ட அராஜகத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு கலவரத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய வேண்டிய முதல்வர் கருணாநிதி, அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பது கண்டிக்கத்தக்கது.
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசுவது சட்டப்படி குற்றமல்ல என்று மாவட்ட நீதிமன்றங்கள் முதல் உச்ச நீதிமன்றம் வரை பல தீர்ப்புகள் வழங்கியுள்ளன. அதனை மதிக்காமல் நடந்து கொண்டவர்கள்தான் நீதிமன்றத்தை அவமதித்தவர்களாகின்றனர்.
ஈழத் தமிழர்கள் விஷயத்தில் காங்கிரஸ் தலைமை செய்த தவறுகள் காரணமாகவே ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். இதனை உணராத இளங்கோவனின் செயல்கள் தமிழகத்தில் காங்கிரûஸ குழிதோண்டி புதைத்துவிடும்.
தமிழகத்தின் அரசியல் பண்பாட்டின் இலக்கணமாகத் திகழ்ந்த ஈ.வெ.கி. சம்பத்தின் நற்பெயருக்கு இளங்கோவனின் செயல் பெரும் இழுக்கைத் தேடித்தந்துள்ளது.
இத்தகைய செயல்களை முதல்வர் கருணாநிதி வேடிக்கை பார்ப்பாரேயானால் மக்களே முன்வந்து அவற்றை அடக்கும் நிலை உருவாகும் என்று எச்சரித்துள்ளார் நெடுமாறன்.
தமிழ்நாட்டின் அமைதியைக் கருத்தில் கொண்டு கோவன் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் தரக் குறைவாகப் பேசி அவரது பணியில் குறுக்கிட்டதற்காக முதலில் கைது செய்ய வேண்டும். இங்ஙனம் தமிழ் நாட்டு அமைதியை விரும்பும் இலக்குவனார் திருவள்ளுவன்
12/1/2009 2:56:00 AM
தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழர்களைப் பற்றித் தமிழரல்லாதவர் பேசுவதற்குத் தடை விதிக்க வேண்டும். கோவன் போன்றவர்கள் தமிழ் பேசுவதாலோ தமிழ் நாட்டில் தமிழர்களை ஏமாற்றி வாழ்வதாலோ தமிழர்களாக முடியாது. தேர்தலில் மண்ணைக் கவ்விய தனக்குக் காங்.கின் தலைமைப் பதவியாவது கிடைக்க வேண்டும் என்பதற்காக ஊடகங்களில் பெயர் வரவேண்டும் என்பதற்காகத் தமிழினததிற்கு எதிராகப் பேசுவதையும் செயல்படுவதையும் தொழிலாகக் கொண்டுள்ள கோவனை உடனடியாகக் குண்டர் சட்டத்தின் கீழ்ச்சிறையில் அடைக்க வேண்டும். தாயாலும் மதிக்கப்படாத ஈனப் பிறவிகள் இனப் பகையைத் தூண்டி விடுவதற்குத் தமிழக முதல்வர் இடம் அளிக்ககக் கூடாது. கலவரங்களைத் தூண்டிக் குளிர் காய எண்ணும் அவருக்கு அடைக்கலம் தருவதால் அவருக்குத்தான் முதல் ஆபத்து என்பதை முதல்வர் உணர வேண்டும். தன்னை அரசியல் மேதையாக எண்ணிக் கொண்டும் தனக்குப் பின்னால் ஒரு கூட்டம் இருப்பதாக நடித்துக் கொண்டும் கீழ்ப்பாக்கத்தில் இருக்க வேண்டியவர் உளறுபவர் கண்டு முதல்வர் அஞ்ச வேண்டிய தேவையில்லை.எனவே, தமிழ்நாட்டின் அமைதியைக் கருத்தில் கொண்டு கோவன் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
12/1/2009 2:54:00 AM