ஞாயிறு, 29 நவம்பர், 2009

மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் குறித்து பிரதமருடன் விவாதம்: வயலார் ரவி



சென்னை, நவ. 28: மத்திய அரசு கொண்டு வந்துள்ள மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குடன் விவாதிக்க உள்ளதாக மத்திய வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார். தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசியபின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள மீன்பிடி ஒழுங்கு முறைச் சட்டத்துக்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை. மீனவர்கள் மீன்பிடிக்க மட்டுமே கடலுக்குச் செல்கின்றனர். வெளிநாடு சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் நாடு திரும்பியதும் இது குறித்து விவாதிக்க உள்ளேன். துபையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அங்குள்ள இந்தியர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அதனால் இந்தியப் பங்குச் சந்தையின் வர்த்தகம் பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை. எனவே இந்தியர்கள் அச்சப்படத் தேவையில்லை. வளைகுடா நாடுகள் உள்பட வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் போலி முகவர்களால் பாதிக்கப்படாமல் இருக்க விரைவில் தனிச்சட்டம் கொண்டு வரப்படும். இதன் மூலம் போலி முகவர்கள் கட்டுப்படுத்தப்படுவார்கள். முதல்வர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாகவே நான் சந்தித்தேன் என்றார் வயலார் ரவி.
கருத்துக்கள்

மத்திய அமைச்சர் மிகவும் மிரியாதையுடனே முதல்வரைச சந்தித்தார் என்பது படத்தைப் பார்த்தாலே தெரகிறது. ஆனால் அவ்வாறு சந்திக்கும் பொழுது தமிழக மீனவர் குறித்தோ அயல்வாழ் தமிழர்கள் வதைபாடுகள் குறித்தோ பேச வில்லை என்றால் ஏதும் பேரம் பேசியிருப்பார்களோ! திட்டமிட்டுச் சென்னை வருகின்றவர் அல்லது சந்திக்க இருப்பதை அறிந்த முதல்வர் தமிழர்கள் சிங்களவர்களால் கொடுமைப் படுத்துவதைத் தடுப்பது குறித்து ஏதும் பேசவில்லை என்றால் இது குறித்த கவலை தமிழக அரசிற்கோ மத்திய அரசிற்கோ இல்லை என்பதை ஒத்துக் கொண்டதாகத்தானே பொருள். மீனவர்களைச் சிங்களன் கொன்றால் என்ன? சட்த்தின் மூலம் இந்தியா கொன்றால் என்ன? போவது தமிழர்கள் உயிர்தானே! அது குறித்து கொலைகாரக் கும்பல்களுக்கு மகிழ்சிதானே ஏற்படும் என்று பிறர் நினைக்கும் வகையில் நடந்து கொள்ளாதிருக்கத் தெரியவில்லையே! வாய்ப்புள்ள நேரங்களில் எல்லாம் மக்கள் நலன்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கின்றவர்கள்தாம் இனி அமைச்சராகும் வண்ணம் நாம் வாக்குரிமையைப் பயன்படுத்துவோம்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/29/2009 4:30:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக